குறிப்புகள்

சமஸ்க்ருத மொழி குறித்த சிறு தகவல்கள், குறிப்புகள்

காதல், காற்று, கவிதை…

hill-rain

கோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன. வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர். பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும், மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து...

Read more »

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்

Read more »

கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…

கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு  குறிப்பு…

நமது வரலாற்றில்  எந்த சம்பவமும், மனிதர்களும், இலக்கியங்களும், கட்டடங்களும் அவற்றின் காலம் குறித்து மிகச்சரியாக குழப்பம் இல்லாமல் கண்டறியப் படுவது மிகவும் அரிது. காளிதாசன் போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த காலம் இன்றுவரை சரியாக உறுதி செய்யப் பட்டதே இல்லை. அதிலும் பாரத தேசமெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வகையான கலாசாரம் நிலவி வருவதால் ஒரு விஷயத்தைப் பற்றிய குறிப்புகள் தேசமெங்கும் பரவலாக கிடைத்து வருகின்றன. அதனால் இடத்தையும், காலத்தையும் அறுதியிட்டுக் கூறுவது கடினமே....

Read more »

சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…

சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி, அதில் ரிக் வேத காலம் தொட்டு மனிதன் கண்டடைந்த அனுபவங்களும், ஞானமும் பொதிந்திருப்பது குறித்து பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருப்பது தான். காலப் போக்கில் சமஸ்க்ருதம் ஒரு சாரார் மட்டுமே கற்றுக் கொள்ளும் மொழி என்று ஆனது எப்போதிலிருந்து தெரியுமா? ஆங்கில முறைக் கல்வி வந்ததிலிருந்து தான்! சமஸ்க்ருதத்தின் ஆகச் சிறந்த கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ ஒரு தனிப்பட்ட ஜாதி – வர்ண பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். வால்மீகி...

Read more »

சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது. ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம்....

Read more »

சமஸ்க்ருத இலக்கண சொற்கள்

தமிழ் இலக்கணத்தில் 'பெயர்ச்சொர்ல்', 'வினைச்சொல்' (noun, verb) போன்ற இலக்கண பெயர்களுக்கு ஈடான சமஸ்க்ருத இலக்கண சொற்களும், அவற்றுக்கான விளக்கங்களின் தொகுப்பு.

Read more »

முகமா… வாயா…

அண்மையில் ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தேன். ஒருவர் செய்தி வாசிக்கிறார்… “சேலத்தில் முக்கிய நபர் கைது!” – பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் “அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா?” – கவுண்டமணி மாதிரி கேட்கிறார். முக்கியம் என்று இங்கே சொல்வது “முதன்மையான” – “பிரதானமான” என்ற பொருளில். இந்த முக்கியம் என்கிற வார்த்தையே “முக்யம்” என்கிற சமஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது தான். முக்யம் என்பதும் முகம் என்கிற சொல்லில் இருந்து...

Read more »

தெரியுமா உங்களுக்கு?

ticked

இன்றைய சமஸ்க்ருதத்தில் காணப் படும் பல வார்த்தைகள் வேதகால சம்ஸ்க்ருதத்தில் கிடையாது. பாணினி யார்? சமஸ்க்ருத காவியங்களில் என்ன சிறப்பு? ஆங்கிலத்தில் அப்படியே பயன்படும் சமஸ்க்ருத வார்த்தைகள்!

Read more »

வழிபாட்டுத் துதிகளின் வகைகள்

ticked

சமஸ்க்ருத மொழியிலமைந்த பக்தி பாக்களை பலவகையாக அழைக்கின்றனர். அவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே: ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns  (ச்ருதி =என்பது காதால் மட்டும் கேட்கப்படும் வேதம், மந்திரங்கள் ஆகியவற்றைக்குறிக்கும்; ஸ்ம்ருதி என்பது மனத்தால் நினைக்கப்படுவது). இவை  செய்யுளாகவோ உரைநடைகளாகவோ இருக்கலாம், பொதுவாகச் செய்யுள் வடிவில் அமையும். ஸ்லோகம்:  செய்யுள் வடிவில் அமையும் துதி; பல்வேறு சந்த வடிவில் இருக்கும்.  [Generally has...

Read more »