வடமொழியில் தலைசிறந்த ஐம்பெருங் காவியங்களில் ஒன்று நைஷதம். மகாபாரதத்தில் வரும் நிஷத நாட்டு மன்னன் நளன் மற்றும் தமயந்தி கதையை ஒரு மகா காவியமாக ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் இயற்றி இருக்கிறார். “நைஷதம் வித்வத் ஔஷதம்” என்றொரு பழமொழி உண்டு. இருபத்தி இரண்டு அத்தியாயங்களுடன் கூடிய, பல முடிச்சுகள் நிறைந்த கடினமான காவியம் இது. இது தவிரவும் ஸ்ரீ ஹர்ஷர் அத்வைத தத்துவ சம்பந்தமாகவும் நூல்கள் எழுதி உள்ளார். இந்த மகா கவிஞனை ஜயந்த சந்திரன் என்ற மாமன்னன் ஆதரவளித்து தன் அவைப் புலவராக கொண்டான்.
மேலும் படிக்கPost Category → குறிப்புகள்
விளிகள் – ஸம்போதநம்
ஒருவரை அழைக்கையில் நீட்டி முழக்கி விளித்தால்தான் அவர் உடனே திரும்பிப் பார்ப்பார்; இறைவனையும் ‘சுவாமியே! சரணம் ஐயப்பா !!’ என்றுதான் விளிக்கிறோம்; ‘நாராயணா! ஓ மணிவண்ணா! நாகணையாய்!’ எனப் பெருங்குரலெடுத்துத்தான் பெருமாளை ஆழ்வார் விளிக்கிறார். ’பாசுபதா! பரஞ்சுடரே’ எனும் விளிகள் ஒரு பதிகம் முழுக்க மாசிலாமணீசுவரருக்கு அமைகிறது.
மேலும் படிக்கசீன மொழியும் சம்ஸ்க்ருதமும்
சீனமொழியும் சம்ஸ்க்ருத மொழியும் இந்த உலகின் மிகப் பழைய, பரவலான தாக்கத்தைக் கொண்ட செழுமையான மொழிகள். இவ்விரு மொழிகளுக்கும் பல ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. இவ்விரண்டு மொழிகளுமே மானுட இனத்தின் முக்கியமான மொழிகளாம்.
மேலும் படிக்கஅத்தியாயங்களுக்கு இத்தனை பெயர்களா!
எந்த வகை நீண்ட காவிய இலக்கியம் ஆனாலும், அதனுள் பல உட்பிரிவுகள் வைத்து பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கம். அதிகாரம், அத்தியாயம், சருக்கம், காண்டம், படலம், அங்கம் என்பன போன்ற பகுப்புகள் அல்லது பிரிவுகள் தமிழ், வடமொழி இலக்கியங்களில் உள்ளன. ‘அங்கம்’ பொதுவாக நாடக நூல்களில் அமைவது. தமிழில் பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகம் ஐந்து அங்கங்களோடு அமைந்துள்ளது; ஒவ்வோர் அங்கத்திலும் காட்சிகள் ‘களம்’ எனும் பெயரில் விரிகின்றன. மேற்கத்திய… மேலும் படிக்க
கையளவு கல்வி…
காசுக்காக கல்வியை விற்கும் இக்காலத்தில், கல்வி கற்பிப்பதையும் கற்பதையும் ஒரு கலையாக கருதிய நம் முன்னோர்களின் மொழிகள் நமக்கு அந்நியமாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. நால்வகையாக வாழ்வின் பயனை பெரியோர் கூறுவர், அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு ஆகிய அந்த நான்கு குறிக்கோளுக்கும் கல்வி அவசியம். வெறும் செல்வத்திற்காக மட்டும் அன்று என்று உணர்ந்தால் உண்மையான கல்வியை அடையலாம்.
மேலும் படிக்கஅநேகமாக தெரிந்தது தான்!
சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ளுகையில் சில சொற்களை படிக்கும் பொது ஒரு வியப்பு ஏற்படுகிறது. நாம் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு சொல் சம்ஸ்க்ருதத்திலும் இருந்து, அம்மொழியில் அதன் பயன்பாடு என்ன, எப்படி, தமிழில் அந்த சொல்லின் பயன்பாடு எப்படி என்று தெரியும் போது ஏற்படும் வியப்பே அது. உதாரணமாக ஒன்று என்பதற்கு உரிய சம்ஸ்க்ருத சொல் ஏகம் என்பதாகும். ஒரு குழுவில் எல்லாரும் ஒரு முடிவுக்கு ஒப்புக் கொண்டால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப் பட்டது, ஏகமனதாக ஏற்கப் பட்டது… மேலும் படிக்க
கேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…
சில வாராந்திர பத்திரிகைகளில் விடுகதை மாதிரியான புதிர் கேள்வி ஒரு பக்கத்தில் கொடுத்திருப்பார்கள். அதற்கான பதில் வேறொரு பக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருக்கும். விடை உடனே கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு. விடை கண்டு பிடிக்க முயற்சிப்பவர்கள், அதைக் கண்டு பிடித்து விட்டால் சரி பார்த்துக் கொள்ளவும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும் அந்த விடை இருக்கும் பக்கத்தைத் தேடிப் போகவேண்டும். இது மாதிரியான ஒரு ஏற்பாட்டை ஏற்கனவே பழைய சம்ஸ்க்ருத கவிகளும் கடைபிடித்திருக்கிறார்கள் என்று… மேலும் படிக்க