ஒரு பத்தாண்டுகள் முன்பு மடோன்னாவின் ஷாந்தி அஷ்டாங்கி என்கிற பாப் பாடல் வெளியான போது, டெக்னோ இசையில் சம்ஸ்க்ருத ஸ்லோகமா என்று ஆச்சரியப்படும் படி இருந்தது. இது போன்ற சம்ஸ்க்ருத ஸ்லோகங்களையும், வேத மந்திரங்களையும் இசைக்கும் குழுக்கள் உலகமெங்கும் கிளம்பி இருக்கின்றன.
இந்த வகை இசை Vedic Metal என்று இசையில் ஒரு தனி வகையாகவே அழைக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இல்லாமல், அமெரிக்கா – ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், மலேசியா என்று உலகமெங்கும் இது போன்ற இசைக்குழுக்கள் புதியவகையில் இசை அமைத்து மேடைகளிலும், ஆடியோ சீடீகலாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.
இவ்வகை வைதீக இழைக்குழுக்கள் (Vedic Bands) சில:
- ருத்ரா – சிங்கப்பூர்
- ஆர்ய தேவா – உக்ரைன்
- அசுரா – இந்தியா
- அத்வைதா – ந்யூசிலாந்து
- அமோகா – இந்தியா
- நரசிம்ஹா – சிங்கப்பூர்
- கலியுகா – மலேசியா
- சாந்தி சாந்தி – அமேரிக்கா
இவற்றில் சிங்கப்பூரில் இயங்கும் ருத்ரா குழுதான் முதலில் இந்த வகை இசையில் பிரபலமானது என்று சொல்கிறார்கள். அமெரிக்காவின் ‘சாந்தி சாந்தி‘ இசைக்குழுவின் பாடகி சாரா சமீபத்தில் அமெரிக்க இந்து பிரமுகர் திரு ராஜன் செத் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். நான்கு வேதங்களிலிருந்தும் மந்திரங்களை எடுத்து இசை அமைத்த சாரா ஒரு தீவிர கத்தோலிக்கர்!
வைதீக இசையின் சில சாம்பிள்கள்:
- அக்னி – ம்ருத்யுஞ்சய தாண்டவம்
- Brahmavidya: Primordial I
- சிருஷ்டி