ஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.
மேலும் படிக்கPost Category → புத்தகங்கள்
கொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்!
தமிழ் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான நூல் குறுந்தொகை. பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட நூலும் இதுவே. இயற்கையின் ஊடாக காதலை பொருத்தி அகத்திணையில் அமைந்துள்ள நானூறு பாடல்கள் கொண்ட நூல். இருநூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் எழுதிய செய்யுள்கள் இதில் உள்ளன. தமிழில் மிக முக்கியமான இலக்கியமான குறுந்தொகை சம்ஸ்க்ருதத்தில் ஸ்ருங்கார பத்யாவளி என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. சிருங்காரம் என்பது அழகியல், பத்யாவளி என்பது மாலையாக தொகுக்கப் பட்ட கவிதை… மேலும் படிக்க
காசிகா – இலக்கண உரை
சம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண விதிகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்றி வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி… மேலும் படிக்க
சம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்
தமிழ் ஒரு தனிச்செம்மொழி, வடமொழிக்கு ஈடான பாரத நாட்டின் செல்வம் என்பதில் ஐயமில்லை. சம்ஸ்க்ருதம் போன்றே தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்கள் தமிழ் அறிஞர் பெருமக்களால் இயற்றப் பட்டு வந்துள்ளன. அவற்றில் சம்ஸ்க்ருதமும் தமிழும் அறிந்த சிலர் இவ்விரண்டு மொழிகளின் சிறப்பையும் போற்றி இவற்றுக்கு ஒரே இலக்கணம் எழுத முற்பட்டனர். மு.வை. அரவிந்தன் என்பார் எழுதியுள்ள “உரையாசிரியர்கள்” என்ற நூலில் இவர்களில் சிலர் பற்றிய தகவல் உள்ளது. ஒரு தகவலாக அந்த நூலில் ஒரு பகுதியை இங்கே… மேலும் படிக்க
சம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…
தத்துவ விளக்கங்களைக் தமிழிலும் வடமொழியிலும் கலந்தளித்து களித்த சமயம் வைணவம். திராவிட வேதம் என்று தமிழ் நூல்களை போற்றுகிறது அது. தமிழ் – சம்ஸ்க்ருதம் இரண்டும் இரு கண்களாகப் போற்றி உபய வேதாந்தம் என்றே பெயர்பெற்றது தமிழ்நாட்டு வைணவம். உபய என்றால் இரண்டு என்று அர்த்தம். அத்தகைய சமயத்தின் கண்ணெனப் போற்றப் படுவது ஆண்டாளின் திருப்பாவை என்றால் மிகையில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளே பக்தர்களால் மிகவும் உகந்து கொண்டாடப் படுகிறாள். ஆண்டாள் இயற்றிய திருப்பாவைக்கு ஈடான வடமொழி நூல் என்று சொல்லக் கூடியவை இல்லை என்றே சொல்லி விடலாம். இந்நிலையில் திருப்பாவையை எளிய, படித்து மகிழக் கூடிய அளவில் வடமொழியில் சீருடன் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கம் ராமானுஜ சித்தாந்த வித்யா பீடம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் படிக்கமனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்… (சம்ஸ்க்ருதத்தில்)
சுவாமி சுகபோதானந்தா அவர்களின் “மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு “நிழல்கள்” ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்கிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலருக்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன. மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்! என்ற இந்த புத்தகம் தற்போது சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு “ஹே மன:! ஸமாஸ்வசிது!” என்ற தலைப்புடன் சம்ஸ்க்ருத பாரதி அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.
மேலும் படிக்கவியாகரண சித்தாந்த கௌமுதி
கௌமுதி என்றால் நிலவொளி என்று அர்த்தம். அஷ்டாத்யாயியை கற்பதற்கு அணுகும் மாணவர்களை, சூரியனின் வெப்பம் போன்ற அதன் கடினத் தன்மை நெருங்க விடாமல் செய்துவிடக் கூடும். அதற்கு மாற்றாக அநேக உதாரணங்களுடன் நிலவொளியின் குளுமையை ஒத்ததாக அமைந்த நூலே வியாகரண சிந்தாந்த கௌமுதி என்று அழைக்கப் படுகிறது.
மேலும் படிக்க