ஒருவரை அழைக்கையில் நீட்டி முழக்கி விளித்தால்தான் அவர் உடனே திரும்பிப் பார்ப்பார்; இறைவனையும் ‘சுவாமியே! சரணம் ஐயப்பா !!’ என்றுதான் விளிக்கிறோம்; ‘நாராயணா! ஓ மணிவண்ணா! நாகணையாய்!’ எனப் பெருங்குரலெடுத்துத்தான் பெருமாளை ஆழ்வார் விளிக்கிறார். ’பாசுபதா! பரஞ்சுடரே’ எனும் விளிகள் ஒரு பதிகம் முழுக்க மாசிலாமணீசுவரருக்கு அமைகிறது.
மேலும் படிக்கPost Category → சங்கதம்
இந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்
பழமையும் இனிமையும் வாய்ந்த சம்ஸ்க்ருத மொழி நூல்கள், இலக்கியங்களைப் படிக்க நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ‘தேவ மொழி’ என்று கூறி பலருக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டதால் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம். www.sangatham.com என்ற இணைய தளத்துக்கு நீங்கள் சென்றால் போதும், எளிய தமிழில் பகவத் கீதை, லகு சித்தாந்த கௌமுதி உள்ளிட்ட சம்ஸ்க்ருத நூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம், கட்டுரைகள், சம்ஸ்க்ருதத்தைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் டிப்ஸ் ஆகியவை கொட்டிக் கிடக்கின்றன. எல்லாப் பதிவுகளும் தூய தமிழில் இருப்பது சிறப்பு. சம்ஸ்க்ருத மொழி பயன்பாடு குறித்த சர்ச்சைக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. காளிதாசன் சிலை குறித்த தகவல் ரொம்ப புதுசு.
மேலும் படிக்க