அக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி

ஒரு மொழிக்கும் அதன் படைப்புகளும் எழுதி பாதுகாக்கப் படுவது மிகவும் அவசியம். அதனாலேயே எழுத்துக்களுக்கு அக்ஷரம் என்று பெயர். க்ஷரம் என்றால் அழியக்கூடியது – அக்ஷரம் என்பது நிலையானது என்று புரிந்து கொள்ளலாம். இதை புரிந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் அக்ஷர அப்யாசம் என்கிற ஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அக்ஷரமாகிய எழுத்துக்களை – அப்யாசம் – பயிற்சி செய்தல் என்று பொருள். [தேக அப்யாசம் – என்றால் உடல் பயிற்சி]. இதை ஒரு பண்டிகையாகவே ஒவ்வொரு வருடமும் – நவராத்திரி சமயத்தில் விஜய தசமி அன்றைக்கு குழந்தைகளை – பள்ளிக்கு [முன்னாட்களில் குருகுலத்திற்கு] அனுப்பி ஆசிரியர் உதவியுடன் நெல்லில் குழந்தைகளை எழுத செய்வார்கள்.

மேலும் படிக்க

தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்

தேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்பண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி – நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.

மேலும் படிக்க

வழிபாட்டுத் துதிகளின் வகைகள்

சமஸ்க்ருத மொழியிலமைந்த பக்தி பாக்களை பலவகையாக அழைக்கின்றனர். அவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே: ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns  (ச்ருதி =என்பது காதால் மட்டும் கேட்கப்படும் வேதம், மந்திரங்கள் ஆகியவற்றைக்குறிக்கும்; ஸ்ம்ருதி என்பது மனத்தால் நினைக்கப்படுவது). இவை  செய்யுளாகவோ உரைநடைகளாகவோ இருக்கலாம், பொதுவாகச் செய்யுள் வடிவில் அமையும். ஸ்லோகம்:  செய்யுள் வடிவில் அமையும் துதி; பல்வேறு [அனுஷ்டுப் சந்தம் போன்ற] சந்த வடிவில் இருக்கும்.  [Generally has 8… மேலும் படிக்க

பேரறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை

வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க