ஹிந்தி/உருது என்று நாம் இன்று அழைக்கும் மொழி முதலில் அரபி எழுத்துகளில் எழுதப்பட்ட மொழி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமிய ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியவுடன் மக்களிடையே அரபி எழுத்தை கைவிட்டு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்திய, அரபி எழுத்தில் எழுதப்படும் உருது என்று ஒரு மொழி இரண்டானது. ஹிந்துக்கள் ஹிந்தியுடன் தங்களை அடையாளத்தை பிணைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்கள் உருதுவுடன். இதன் காரணமாக வட இந்தியாவின் மொழி பிரக்ஞையில் குழப்பம் உருவாகி விட்டது. தத்தம் தாய்மொழிகளை கைவிட்டு மக்கள் எல்லாவற்றையும் ஹிந்தி/உருது என்று கருத ஆரம்பித்தனர். இது தான், வடஇந்தியாவில் மொழிவாரி மாநில எல்லை சீர்திருத்தம் நடக்காததற்கு முக்கிய காரணம். மக்களுக்கும் சரி, அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் சரி, தங்கள் மொழிகளுக்கு மாநிலம் அமைக்க வேண்டும், அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பதே உண்மை. இதில் மத்திய அரசை குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. மக்களாட்சி எனும் பொழுது மக்களின் முன்னுரிமைகள் (priorities) தான் அரசில் பிரதிபலிக்கும்.
மேலும் படிக்கPost Category → புதிய பார்வை
வடமொழியும் தென்மொழியும்…
நான் பார்த்தவரை எல்லா தகவற்செறிவுள்ள நூல்களுமே தெலுங்கை ஒரு திராவிட மொழி என்றே கூறுகின்றன – ஆனால் தெலுங்கை தாய்மொழியாக பேசும் எனக்கு, தொண்ணூறு சதவீதம் தெலுங்கு வார்த்தைகள் சம்ஸ்க்ருத வேரில் இருந்து உருவானதாகவே தோன்றுகின்றன – இவ்வாறு இருக்கையில் “திராவிட மொழி” என்று கூறும் மொழியியலின் நிலைப்பாடு குறித்து என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ராஜீவ் மல்ஹோத்ரா – அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் “உடையும் இந்தியா..?” என்கிற நூல் வேறு ஒரு காரணத்தைக் கூறுகிறது. ஒரு நூற்றாண்டுக்குள், பத்தொன்பதாம் நூற்றாண்டு துவக்கத்தில், நமக்கு திராவிட மொழிக் குடும்பம் என்ற பெயர் கிடைக்கிறது – சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் இதுவே திரும்ப திரும்பச் சொல்லப் பட்டு இப்போது படித்த (தென்னிந்திய மொழிகளில் எழுதப் படிக்க தெரிந்த) வட இந்திய மக்கள், “திராவிட” மொழிகளில் இத்தனை சம்ஸ்க்ருத வார்த்தைகளா என்று வியக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் மொழியியல் குறித்து கற்பிக்கும் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப் படவேண்டும் என்று எண்ணுகிறேன்.
மேலும் படிக்கஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு
ஹிந்து மதத்தின் பெரும்பான்மையான பழமையான சமய, கலாசார, கலை, இலக்கிய நூல்கள் சம்ஸ்க்ருதத்திலேயே உள்ளன. இவற்றில் பெருமளவு பிராமணர் அல்லாத இதர வகுப்பைச் சேர்ந்த ஞானிகளாலேயே இயற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணம் இயற்றிய வால்மீகியோ, மகாபாரதம் இயற்றிய வியாசனோ பிராமணர்கள் அல்லர். ஆக பிராமணர் மட்டும் அல்லாது எல்லாருக்குமாக இருந்த பண்பாட்டு சின்னமான சம்ஸ்க்ருதம் இன்று சாதியத்தால் மறுக்கப் படுவதை அம்பேத்கர் உணர்ந்திருக்க வேண்டும். உயர்சாதிக் காரர்களின் மேட்டிமைத்தனத்துக்கு சவால் விடுவதாக, சம்ஸ்க்ருத மொழி, அதன் வாயிலாக பெறப்படும் வேத, சாத்திர, இதிகாச, புராணங்களின் ஞானம் தலித் மக்கள் கையில் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும் என்று அவர் திட்ட வட்டமாக நம்பி இருக்க வேண்டும். இதுவே அவர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று விரும்பியதற்கான முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் படிக்கஒரீஇ – சில ஐயங்கள்
வடஎழுத்தும், வடசொல்லும் அல்லது எந்த பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு அதீதமாகப் பயன்படுத்துவது தவறாகும். அதற்கு நேர் எதிராக பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்வது தமிழின் வளர்ச்சிக்கு பல வகைகளில் பாதகமாகவே அமையும். — செ. அ. வீரபாண்டியன் (டாக்டர். வீ)
மேலும் படிக்கசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா?
சம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது. சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள் எழுத மட்டுமே சம்ஸ்க்ருதம் பயன்பட்டது என்று எண்ணுவது தவறு. ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி, அது இலக்கியங்களுக்கான மொழி என்று கூறி விட முடியும். அப்படியானால் ஆங்கிலம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. இப்படிச் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்! அப்படியெனில் சம்ஸ்க்ருதம் இப்போது ஏனைய மற்ற இந்திய மொழிகள் போல ஏன் பேசப்படும் மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக இல்லை?
மேலும் படிக்கசம்ஸ்கிருதம் யாருடைய மொழி?
ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது. ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம். அதைத்தான்… மேலும் படிக்க
தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்
தேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்பண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி – நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.
மேலும் படிக்க