சமஸ்க்ருத மொழியிலமைந்த பக்தி பாக்களை பலவகையாக அழைக்கின்றனர். அவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே:
- ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns (ச்ருதி =என்பது காதால் மட்டும் கேட்கப்படும் வேதம், மந்திரங்கள் ஆகியவற்றைக்குறிக்கும்; ஸ்ம்ருதி என்பது மனத்தால் நினைக்கப்படுவது). இவை செய்யுளாகவோ உரைநடைகளாகவோ இருக்கலாம், பொதுவாகச் செய்யுள் வடிவில் அமையும்.
- ஸ்லோகம்: செய்யுள் வடிவில் அமையும் துதி; பல்வேறு [அனுஷ்டுப் சந்தம் போன்ற] சந்த வடிவில் இருக்கும். [Generally has 8 syllables in each foot; has ‘anushtup’ metre]
- த்யானம், மந்திரம், ந்யாசம், கவசம், ஹ்ருதயம்: இவை இறை வழிபாட்டு முறைகளில் (பூஜா விதிகள்) உள்ள அங்கங்கள்.
- கவசம்: நினைப்பவரைக் காப்பது மந்திரம் (த்ராயதே இதி மந்த்ர:); கவசம் என்பதை ‘நாராயண இதி கவசம்’ என்று உரைநடையாகவோ அல்லது தனியான செய்யுள் வடிவிலோ (கந்த ஷஷ்டி கவசம்) காணலாம்.
- தசகம், சதகம்: பத்து/நூறு துதிகள் கொண்ட தொகுப்பு, செய்யுள் வடிவம் உடையவை
- பஞ்ச ரத்னம்: ஐந்து துதிகள் கொண்ட தொகுப்பு, செய்யுள் வடிவம் உடையவை.
- ரத்நமாலிகா, நவரத்னமாலிகா: இவை துதிகளைப் பற்றிய வர்ணனைச் சொற்கள். மாலிகா என்பது மாலையைக் குறிக்கும். அழகிய பாமாலையை இங்குக்குறிக்கும். இரத்தினம் போல மிளிரும் ஒன்பது கண்ணிகள் இருப்பது நவரத்ன மாலிகா.
- பஞ்சசதீ, த்ரிசதீ: ஐந்நூறு துதிகள் கொண்ட தொகுப்பு பஞ்சசதீ, முன்னூறு துதிகள் கொண்டது த்ரிசதீ
செய்யுள் வடிவம் உடையவை.
- கத்யம்: உரைநடை (prose composition); எதுகை மோனை சந்தங்கள் போன்றவற்றை திட்டவட்டமாக கொள்ளாமல் உரைநடையாக இருப்பவை.
- பத்யம்: இலக்கண அமைப்பு படி செய்யுள்கள் (verse comp0sition)
- புஜங்கம், லஹரி: முறையே, பாம்பு நெளிவது, அலை அடிப்பது போன்ற நடையில் அமைக்கப்பட்ட சந்தச் செய்யுள்கள்.
- ஸுப்ரபாதம்: இறைவனைப் பள்ளியெழுச்சி பாடும் காலையில் சொல்லப்படும் துதி
- தண்டகம்: a measured type of prose composition, not metrical ஒருவகை அளவுக் கட்டுப்பாடு கொண்ட உரைநடைத் துதி (தண்டம்= measuring stick)
- தீபிகா: விளக்க நூல்கள்/உரைகள். வியாக்கியானம்
- காயத்ரி: காயத்ரி மந்த்ரத்தை உள்ளடக்கியது
- நாராயணீயம்: ஈயம் என்ற அடைச்சொல் ‘பற்றியது’ என்ற பொருள் தருவது. நாராயணனைப் பற்றிய துதி
- ஸ்வரார்ணவம், சிவலீலார்ணவம்: ஆர்ணவம் என்பது கடலைக் குறிக்கும். நிறையத் துதிகள்/உரைநடை கொண்ட படைப்பு. ArNavam is a descriptive adage
- மந்த்ரகோசம்: கோசம் என்றால் (மூங்கில் கூடை போன்ற) கொள்கலத்தை (container) குறிக்கும். நிறைய மந்திரங்கள் கொண்ட துதி மந்த்ரகோசம்.
- ஸூக்தம்: வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட துதி, Vedic hymn;
[நன்றி பேராசிரியர் திரு V.S. அனந்த நாராயணன்]
சிறப்பாக உள்ளது தொடர வாழ்த்துக்கள்
valipaddu muraikal manthirangal ellam nanu