மஹாகவி பவபூதி

தமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும் கூட. மகாவீரசரிதம், உத்தரராம சரிதம் மற்றும் மாலதீமாதவம் ஆகிய நாடகங்களை இயற்றியவர். காளிதாசரும், பாஸரும் வாழ்ந்த காலத்தில் இருந்து சுமார் நானூறு – ஐநூறு ஆண்டுகள் கழித்து, எட்டாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று கணக்கிடப் படுகிறது. இவரது பிறப்பிடம் மகாராஷ்டிரத்தில் கோண்டியா மாவட்டத்தில் உள்ள பத்மபுர் என்கிற கிராமம். இந்த கிராமம் விதர்ப தேசத்து மன்னர்களின் தலைநகரமாக சில காலம் இருந்திருக்க கூடும். ஆனால் பவபூதி வாழ்ந்த காலத்தில் அவரை ஆதரிக்க அரசர்கள் – புரவலர்கள் இல்லாத காரணத்தால் அங்கிருந்த இடம்பெயர்ந்து வடக்கே கந்நௌசியில் மன்னர் யசோவர்மனின் ஆதரவில் இருந்ததாக தெரிகிறது.

பவபூதி குறித்து சுவாரசியமான பல கதைகள் உண்டு. இவரும் காளிதாசரும் ஒரே காலத்தில் வாழவில்லை என்று தெரிந்தாலும் அப்படி வாழ்ந்தது போல கற்பனையான கதைகள் உண்டு.

பவபூதி என்று ஏறக்குறைய காளிதாஸனுக்கு ஸமதையாக ஒரு மஹாகவி. அவனுடைய காலத்திலேயே இவரும் இருந்தார் என்றும், இந்த இரண்டு பேருக்கும் போட்டி, மூக்கறுபட்டது என்றெல்லாமும் கதைகள் இருக்கின்றன. நான் சொல்லப் போகிற கதை அப்படிப்பட்டதில்லை. ஒருவர் அபிப்ராயத்தை இன்னொருவர் கலந்தாலோசித்துத் தாம் எழுதியதைத் திருத்திக் கொண்டதாக இந்தக் கதை.

உத்தர ராமாயணத்தை “உத்தர ராம சரிதம்”என்று ஹ்ருதயத்தை கவ்விக்கொள்ளுகிற மாதிரி பவபூதி நாடகமாக எழுதி அந்தச் சுவடியைக் காளிதாஸனுடைய ‘அப்ரூவ’லுக்காக எடுத்துக்கொண்டு போய்ப் படித்தார். காளிதாஸன் தனக்கு ப்ரியமான ஸ்த்ரீ தாம்பூலம் மடித்துக் கொடுக்க கொடுக்க அதை ருசி பார்த்துக்கொண்டே உத்தரராம சரிதத்தையும் ருசித்துக்கொண்டு போனான்.

அதிலே முதல் ஸீனில் ராமர் தண்டகாரண்யத்தில் ஸீதையோடு தாம் கழித்த ஆனந்தமான நாட்களைப் பற்றிய நினைவுகளைச் சொல்கிறார். அதனிடையில், “எப்படிப் பொழுது போச்சு என்றே எங்களுக்குத் தெரியாமல் ராத்ரி நேரம் இவ்வாறு பேச்சில் போய்விடும்”என்று வருகிறது.

” அவிதித-கத-யாமா ராத்ரிரேவம் வ்யரம்ஸீத் “

இந்த வரியை பவபூதி படித்தவுடன் காளிதாஸன் “சுன்னம் ஜாஸ்தி”என்றான். அவனுக்குத் தாம்பூலம் கொடுத்துக் கொண்டிருந்தவள், ‘ஜாஸ்தி சுண்ணாம்பு வைத்துக் கொடுத்துவிட்டோம்;அதைத்தான் சொல்கிறார்’என்று நினைத்துக்கொண்டுவிட்டாள். அவளுக்கெதிரே தான் பவபூதிக்கு அட்வைஸ் பண்ணுவது மரியாதை இல்லை என்பதால் வேண்டுமென்றேதான் காளிதாஸன் இப்படி பூடகமாகச் சொன்னது. மேதையானதால் பவபூதிக்குப் புரிந்துவிட்டது. ஸுன்னம் என்றால் ஸைஃபர், அல்லது புள்ளி.

‘ராத்ரிரேவம்’என்பதில் ‘ம்’என்று உள்ள புள்ளியைத்தான் காளிதாஸன் ஜாஸ்தி என்று சொல்வதை அவர் புரிந்துகொண்டு*இந்த நுட்பமான கரெக்ஷனை ரொம்பவும் கொண்டாடி, ஸுன்னத்தை எடுத்தவிட்டு ‘ராத்ரிரேவ’என்று மாறிவிட்டார். ‘ராத்ரிரேவம் வ்யரம்ஸீத்’என்றால் ‘ராத்திரி இவ்வாறு போச்சு’. ‘ராத்ரி ரேவ வ்யரம்ஸீத்’என்றால் ‘ராத்ரிதான் முடிந்தது’என்று அர்த்தம். அதாவது ‘ஸீதையும் தானும் பேசுகிற பேச்சு அப்போதும் முடிந்திருக்காது; ராத்ரி மட்டுமே முடிந்திருக்கும்’என்று வ்யங்கியமாக (உள்ளுறை பொருளாக) ராமர் சொன்னதாக ஆகிவிடும்!

காஞ்சி பரமாச்சாரியாரின் “தெய்வத்தின் குரல்”

இவருடைய நாடகங்களில் சோகம் கலந்த கருணை ரசம் மிகுந்து இருக்கும். பொதுவாக வடமொழி நாடகங்களில் காணப்படும் விதூஷகர்கள் (நகைச்சுவைப் பாத்திரங்கள்) இவரது நாடகங்களில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. இவரது நாடகங்களில் சில விசேஷங்களைப் பற்றிப் பார்ப்போம்.

மஹாவீர சரிதம்

பவபூதியின் காவியங்களில் முதலில் எழுதப் பட்டது மகாவீர சரிதம். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த நாடகம். இதில் எட்டு அத்தியாயங்கள் இருந்தாலும் முதல் ஐந்து மட்டுமே பவபூதி இயற்றியது, மீதமுள்ளவை சுப்ரமண்யகவி என்ற பெயருடைய வேறொரு கவிஞர் எழுதியதாக கூறப் படுகிறது. இந்த காவியம் வீர ரச பிரதானமானது என்று பவபூதியே குறிப்பிடுகிறார். இந்த நாடகத்தில் நடுநடுவே பல விதமான சந்தங்களில் கவிதைகளும் இடம்பெறுகின்றன.

மூலத்தில் ராமாயணத்தில் இருந்து சில மாறுதல்களை இந்த நாடகத்தில் கவி செய்துள்ளார். முக்கியமாக ராமர் காட்டுக்குப் போக கைகேயி காரணம் அல்ல. மந்தரை உருவத்தில் சூர்ப்பனகையே வந்து கைகேயி கொடுத்ததாக ஒரு கடிதத்தை ராமரிடம் கொடுத்து காட்டுக்கு போகச் சொல்கிறாள். அதற்கு முன்பே ராமன் காட்டில் வாழும் முனிவர்களுக்கு உதவ விரும்புகிறார். ஆகையால் மிதிலையில் இருந்து அயோத்திக்கு வராமல் நேராகவே காட்டுக்கு சென்று விடுவது போல சம்பவங்களை அமைத்துள்ளார்.

உத்தர ராம சரிதம்

ராமாயணத்தின் வேறொரு கட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பவபூதியால் எழுதப் பட்ட மற்றொரு நாடகம். ராம-ராவண யுத்தத்துக்குப் பின் திரும்பி வந்து பட்டாபிஷேகமும் நடந்து முடிந்த பின் துவங்கும் கதை, சீதையின் மீது அவதூறு சொல்லப் பட்டு, அரசனாக நடந்து கொள்ள வேண்டிய நிலையில் ராமன் சீதையைப் பிரிந்தும், சாதாரண மனிதனாக ஒரு கணவனாக மனைவியைப் பிரிந்து வருந்தும் நிலையிலும் என்று இரு வேறு நிலைகளில் ராமன் அலைக்கழிக்கப் படுவதை இந்த நாடகத்தில் அருமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இது வடமொழி நாடகங்களிலேயே வித்தியாசமான வகையில் அமைந்த ஒன்று.

மாலதீ மாதவம்

இன்றைய திரைப்படங்கள் போல காதல், த்ரில்லர், ஹாரர் அம்சங்கள் நிறைந்த ஒரு வடமொழி நாடகம் மாலதீ மாதவம். ப்ருஹத் கதா என்கிற தொகுப்பில் உள்ள ஒரு கதையின் விரிவே இந்த நாடகம் என்று கூறுவர். மாலதிக்கும் மாதவனுக்கும் உள்ள காதல் முக்கிய கதையாகவும், அதற்கு அடுத்ததாக சில உபகதைகளும் இந்த நாடகத்தில் உண்டு. பொதுவாக காதல் காவியங்களில் வருவது போல பூக்கள், குயில் கூவுதல் போன்ற உவமைகளை திரும்ப திரும்ப பதியாமல் புதிய வகை கற்பனைகளை பவபூதி புகுத்துகிறார். நரபலி கொடுப்பது, நரமாமிசத்தை படையலிடுவது என்று உறையவைக்கும் காட்சிகளும் இந்த நாடகத்தில் உண்டு. முக்கிய கதா பாத்திரமாக காதலர்களை சேர்த்து வைப்பவராக ஒரு பெண் புத்த சந்நியாசி பாத்திரம் கதையில் வருவது சிறப்பு. சுவாரசியமான நாடகம் இது.

***

வடமொழி காவியங்களிலே ஓசை நயத்துக்கு முக்கியத்துவம் உண்டு. பவபூதி ஒரு மகாகவி என்பதற்கு அவர் இயற்றியுள்ள காவியங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் உணர்ச்சிக்கு ஏற்றவாறு ஓசைநயங்கள் உள்ள சொற்களை அவரால் கோர்த்து கவிதை சமைத்துள்ள திறமையே சான்று.

சில உதாரணங்கள்:

उत्फुल्लार्जुन सर्जवासित वहत् पौरस्त्य झञ्झामरुत् प्रेङ्खोल स्खलित इन्द्रनील शकल स्निग्ध अम्बुद श्रेणय: |
धारासिक्त वसुंधरासुरभय: प्राप्तस्त एतेधुना घर्माम्भोविगमागमव्यतिकरश्रीवाहिणो वासरा: |

– Malati Madhavam 9.17.

உத்பு²ல்லார்ஜுன ஸர்ஜவாஸித வஹத் பௌரஸ்த்ய
ஜ²ஞ்ஜா²மருத் ப்ரேங்கோ²ல ஸ்க²லித இந்த்³ரனீல
ஶகல ஸ்னிக்³த⁴ அம்பு³த³ ஶ்ரேணய: |
தா⁴ராஸிக்த வஸுந்த⁴ராஸுரப⁴ய: ப்ராப்தஸ்த ஏதேது⁴னா
க⁴ர்மாம்போ⁴விக³மாக³மவ்யதிகரஶ்ரீவாஹிணோ வாஸரா: |
– மாலதி மாதவம் 9.17.

மேற்கண்ட வரிகளை வேகமாகப் படிக்கும் போது, இந்த வரிகளின் பொருளுக்கேற்ப மழை வருவது போன்ற ஓசை நயமுள்ள சொற்களை உணரலாம்.

இதே போல காதலர்கள் அத்யந்த பிரேமை – அன்புடன் பேசிக் கொள்வது போல அமைந்துள்ள ஸ்லோகத்தில்

किमपि किमपि मन्‍दं मन्‍दमासत्ति योगाद्,
अविरलितकपोलं जल्‍पतोरक्रमेण।
अशिथिल परिरम्‍भ-व्‍यापृतैकैकदोष्‍णो
रविदितगतयामा रात्रिरेवं व्‍यरंसीत्।।

கிமபி கிமபி மந்த³ம்ʼ மந்த³மாஸத்தி யோகா³த்³,
அவிரலிதகபோலம்ʼ ஜல்பதோரக்ரமேண|
அஶிதி²ல பரிரம்ப⁴-வ்யாப்ருʼதைகைகதோ³ஷ்ணோ
ரவிதி³தக³தயாமா ராத்ரிரேவம்ʼ வ்யரம்ʼஸீத்||

இதில் உள்ள வார்த்தை ஓசையிலேயே காதலர்களின் அன்பின் நெருக்கம் வெளிப்படுவதை கவனிப்பது எளிது.

பல புராதன கவிஞர்களில் இருந்து, மேல் நாட்டு வடமொழி அறிஞர்கள் வரை பாராட்டும் பெரும் நாடகாசிரியரும் கவிஞருமான பவபூதிக்கு நவீன இந்தியாவில் மதிப்பளிக்கப் படவில்லை, அங்கீகாரம் இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

The birthplace of Sanskrit litterateur Bhavbhuti in Maharashtra is a monument to neglect and apathy. SRAVANI SARKAR reports.

Around two and a half kilometers down the road linking Amgaon to Salekasa in Gondia district in Maharashtra is a hillock infested with weeds and human refuse. There’s also a weather-hewn boulder of sandstone, balanced neatly upon two smaller stones atop this hillock.

There’s nothing in these surroundings that attracts the eye. For, unless it is actually told, there’s no reason to believe that around 1,300 years ago, the natural shelter formed by these three sandstone boulders was the abode and work place of one of the most prolific Sanskrit litterateurs, the dramatist Bhavbhuti.

If Bhavbhuti was born in the adjacent village Padmapur, the natural rock shelter is where the prolific litterateur probably created some of his best known works. Though it’s not assertively established, it can be assumed that Bhavbhuti wrote his acclaimed Mahavircharita here. In the prologue to this acclaimed drama, Bhavbhuti mentions his birth place and his work abode being a nearby hillock.

However, both the village which, for some time, was also the capital of the powerful Vakataka kings of Vidarbha and the hillock haven’t withstood the test of time.

Just 100 kms away, Kalidasa has it better. The dramatist who came in from northern India to become a part of Vakataka ruler Prabhavati Gupta’s court has been honoured in the form of a huge memorial and a complete Sanskrit University in his name at Ramtek, in the adjoining Nagpur district, Bhavbhuti, a son of the soil, hasn’t got similar treatment.

The hillock with the natural rock shelter is often used by villagers to relieve themselves. On the outskirts of Padmapur village lie the ruins of another heritage structure, a huge Jain temple that was probably built during the time of the Vakatakas. The few beautifully carved idols and remains of pillars lie scattered there, among overgrowth, cowdung and garbage.

The hillock site is supposedly protected by the State Archaeological Survey, but the only proof of this is a rusted board perched atop the hillock. The Jain mandir too was once protected by the Government of India, but it was inexplicably delisted some years.

‘‘Excavation at these sites can throw up a lot of important archaeological evidences. Padmapur is important historically, and can turn into a major tourist attraction if properly developed. It’s a shame that the place is neglected,’’ commented Dr A.K. Sharma, formerly with the State Archaeological Survey.The only feeble attempt to redeem the lost glory of the place and the person who made it famous was about two years ago, when the then Shiv Sena-BJP government in Maharashtra announced a Rs one crore grant towards construction of a memorial at a spot falling between the hillock and the village. But the step, taken at the behest of the then irrigation minister Mahadevrao Shivankar who hails from and represents Amgaon in the state assembly, came a bit too late. Soon after the announcement, the alliance government lost power and the proposal was shelved.

From Indian Express

6 Comments மஹாகவி பவபூதி

 1. க்ருஷ்ணகுமார்

  ம் ஹும் இந்த மூன்றாவது வரியில் வ்ருத்தம் இடிக்கிறதே

  अशिथिल परिरम्‍भ-व्‍याप्‍तृकैदोष्‍णो

  அஶிதி²ல பரிரம்ப⁴-வ்யாப்த்ருʼகைதோ³ஷ்ணோ

  இதில் வ்யாப்த்ரு என்ற பதத்திற்குப் பிறகு ஒரு நெடிலும் ஒரு குறிலும் வந்தால் தானே வ்ருத்தம் பூர்த்தியாகும் என்று தோன்றுகிறது.

  இந்த வ்ருத்தத்தின் பெயரோ அல்லது அதன் லக்ஷணமோ தெரியவில்லை. ஆனால் வாசிக்கையிலேயே மற்ற வரிகளில் சந்தத்தின் போக்குப்படி இந்த வரியில் சந்தம் பூர்த்தியாகாததால் இரண்டு எழுத்துக்கள் விடுபட்டிருக்க வேண்டும் எனத் தோன்றியதை பகிர்ந்து கொண்டேன்.

  சரி பார்க்கவும்.

  ஜஞ் ஜா என்று எழுதுகையில் இரண்டு ஜ வுக்கும் எண் 4 என்று இருக்க வேண்டுமே. 2 என்று உள்ளது. அதையும் சரி செய்யவும்.

  தன்யவாத:
  க்ருஷ்ணகுமார்

 2. க்ருஷ்ணகுமார்

  ஓ….. வ்யாப்த்ருக்குப் பிறகு அல்ல.

  “கை தோஷ்ணோ” வில் கைக்குப் பிறகு என்றிருக்க வேண்டும்.

 3. க்ருஷ்ணகுமார்

  மண்டையைக் குடைய வைத்து விட்டீர்களே.

  “வ்யாப்த்ருகைதோஷ்ணோ:” அஜீர்ணமானதால் இதை யோஜித்துக்கொண்டிருந்தேன்.

  பின்னர் கூகுள மஹாசயரிடம் “கிமபி கிமபி மந்தம்” என்று தேடச்சொன்னவுடன்

  கீழ்க்கண்ட உரலால் அடித்தார்

  http://mohanaranganv.blogspot.in/2005/12/poets-way-of-criticising-another-poet.html

  அதில் ஆங்க்ல லிபியில் சம்பந்தப்பட்ட வரி

  asitila parirambha vyApruta ekaikadOshNo:

  அஸிதில பரிரம்ப வ்யாப்ருத ஏகைகதோஷ்ணோ:

  சரியாகச் சேர்த்துப்படிக்கிறேனா தெரியவில்லை

  அஸிதில பரிரம்ப வ்யாப்ருதைகைகதோஷ்ணோ:

  இப்போது வ்ருத்தம் சரியாக இருப்பது போல் தோன்றுகிறது

  விளக்கமளிக்கவும்

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 4. संस्कृतप्रिय:

  அன்புள்ள க்ருஷ்ணகுமார்,

  தாங்கள் குறிப்பிட்டுள்ள மாற்றம் தான் சரி என்று நினைக்கிறேன். என்னிடம் இருந்த புத்தகத்தை திரும்ப கொடுத்து விட்டேன். அதனால் இப்போது சரியாக பார்க்க இயலவில்லை. நீங்கள் குறிப்பிட்ட படியே மாற்றி இருக்கிறேன்.

  மேலும் இந்த ஸ்லோகங்கள் தேவநாகரியில் இருந்து தமிழில் மாற்றிய கருவி ச, ச², ஜ, ஜ² என்று ச-கார வர்க்கத்தை மாற்றுகிறது. அதனால் நான்காவது சகாரம் – ஜ² என்று வந்திருக்கிறது.

  மேலும் தவறுகள் இருந்தால் அவசியம் சுட்டிக் காட்டுங்கள். தங்களுக்கு என் க்ருதக்ஞதையை தெரிவித்துக் கொள்கிறேன்.

 5. க்ருஷ்ணகுமார்

  க,ட,த,ப வர்க்கங்களில் 1,2,3,4 இருக்க வேண்டும்.

  ஆனால் ச வர்க்கத்தில் ஜ என்று இருக்கும் போது 1,2 போதுமே. இது எனக்கு நீங்கள் சொல்லியதும் தான் புரிந்தது. தன்யவாத:

  குறை சொல்கிறேன் என்று எண்ண வேண்டா. இன்னொரு திருத்தம்.

  வ்யாப்ருதைகைகதோஷ்ணோ:

  தமிழ் மற்றும் தேவநாகரம் இரண்டிலும் கடைசியில் விஸர்க்கம் விட்டுப்போயுள்ளது. அதையும் சரி செய்யவும்.

  பிழை சொல்வதற்கு க்ஷமிக்கவும்.

  விவித வ்ருத்தங்கள் பற்றியும் வ்ருத்த லக்ஷணங்கள் பற்றியும் இயலுமானால் ஒரு வ்யாசம் பதிவேற்றவும்.

  தன்யவாத:
  कॄष्णकुमार्

 6. க்ருஷ்ணகுமார்

  மஹாசய க்ஷமிக்கவும்

  என் புரிதலில் தான் தவறு

  व्‍यापृतैकैकदोष्‍णो रविदित

  கைகதோ³ஷ்ணோ ரவிதி³த

  ஏகைகதோஷ்ணோ: அவிதித என்ற பதங்கள் சேரும் போது

  ஏகைகதோஷ்ணோரவிதித என்று சேரும் படிக்கு தாங்கள் பதிவு செய்தது சரியே.

  அவசரத்தில் பிழை கண்டதற்கு என் க்ஷமாயாசனங்கள்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)