ராமாயணம் படிக்கலாம் வாங்க…

வால்மீகி ராமாயணத்தை ஒவ்வொரு சுலோகமாகப் படிக்கவேண்டும் என்று ஆசையா? நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என்று இந்த எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா? அல்லது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமா? சம்ஸ்க்ருதம் தெரியாமல் எப்படி படிப்பது என்று தெரியவில்லையா?

நீங்கள் தனியாக இல்லை. பல்லாயிரக்கணக்கான பேர்களுடன் இணைந்து ஒவ்வொரு சுலோகமாக ராமாயணம் படிக்க ஒரு அரிய வாய்ப்பு. உங்கள் நண்பர்களையும் அழையுங்கள்.

www.readramayana.org

ராமாயணத்தில் சுமார் 25000 சுலோகங்கள் உள்ளன. ஒரு வாரத்துக்கு நூறு என்று படித்தாலும் ஐந்து ஆண்டுகள் ஆகும். இது நீண்ட காலம் என்று நீங்கள் நினைக்கலாம் – ஆனால் அதுவே இந்த முயற்சிக்கு வித்தாக அமைந்திருக்கிறது.  ஆம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு யாகம் போல தொடர்ந்து ராமாயணத்துடன் இணைந்து இருக்கும் வாய்ப்பு. ஐந்தாண்டுகளில் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் நடக்கலாம். அவை எல்லாவற்றிற்கும் ராமாயணம் ஒரு துணை போல இருக்கும்.

வாழ்வின் ஏற்றஇறக்கங்களை சந்திக்க ராமாயணம் உங்களுக்கு தைரியத்தையும், கருணை – கண்ணியம், ஞானம் ஆகியவற்றைக் கொடுக்கும், ஏனெனில் ராமனும் மனிதனாக அவற்றைக் கடந்து வந்தவர் தான். ஒரு போதும் ராமர் தன் நடுநிலையை, தீர்மானத்தை விட்டதில்லை. நீங்களும் அந்த குணங்களை ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் பெறுவீர்கள்.

ஓவியம் வரையக் கூடியவர்கள் ராமாயணத்தைக் குறித்து பழைய படங்களை மறுபடியோ அல்லது புதியதாகவோ வரைந்து அனுப்பலாம். அவை ராமாயண சுலோகங்களுடன் வாராவாரம் மின்னஞ்சல் செய்யப் படும்.  

www.readramayana.org என்ற முகவரிக்கு சென்று இணைந்து கொள்ளுங்கள். 

ஒரு லட்சம் பேர் சேர்ந்தவுடன் ஈமெயிலில் வாராவாரம் ராமாயணத்தில் நூறு சுலோகங்கள், ஆங்கிலம், தேவநாகரி எழுத்துக்களிலும் அதற்கு அர்த்தம் எளிய ஆங்கிலத்திலும் சேர்த்து அனுப்பப் படவிருக்கிறது. 

http://www.facebook.com/ReadRamayana

19 Comments ராமாயணம் படிக்கலாம் வாங்க…

  1. Ganapathy

    நல்ல பாராட்ட வேண்டிய கார்யம். வால்மீகி ராமாயண கதையை எளிய முறையில் சொல்லி பதிவு செய்து இந்த தளத்தில் வெளியிட்டு உள்ளேன் http://valmikiramayanam.in/ ராமாயண ரசிகர்களுக்கு இதுவும் விருந்தாக அமையும் என்று எண்ணுகிறேன்.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)