மஹாகவி பவபூதி

தமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும் கூட. மகாவீரசரிதம், உத்தரராம சரிதம் மற்றும் மாலதீமாதவம் ஆகிய நாடகங்களை இயற்றியவர். காளிதாசரும், பாஸரும் வாழ்ந்த காலத்தில் இருந்து சுமார் நானூறு – ஐநூறு ஆண்டுகள் கழித்து, எட்டாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று கணக்கிடப் படுகிறது. இவரது பிறப்பிடம் மகாராஷ்டிரத்தில் கோண்டியா மாவட்டத்தில் உள்ள பத்மபுர் என்கிற கிராமம் என்று தெரிகிறது. இந்த கிராமம் விதர்ப தேசத்து மன்னர்களின் தலைநகரமாக சில காலம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் பவபூதி வாழ்ந்த காலத்தில் அவரை ஆதரிக்க அரசர்கள் – புரவலர்கள் இல்லாத காரணத்தால் அங்கிருந்த இடம்பெயர்ந்து வடக்கே கந்நௌசியில் மாமன்னர் யசோவர்மனின் ஆதரவில் இருந்ததாக தெரிகிறது.

பவபூதி குறித்து சுவாரசியமான பல கதைகள் உண்டு. இவரும் காளிதாசரும் ஒரே காலத்தில் வாழவில்லை என்று தெரிந்தாலும் அப்படி வாழ்ந்தது போல கற்பனையான கதைகள் உண்டு.

மேலும் படிக்க

கதைகள் தேவை

மகாபாரதத்தில் ஒரு பூனை போலி சந்நியாசியாக வேடமிட்டு ஒரு காலைத் தூக்கி  தவம் செய்வதாக (ஊர்த்வ பாஹு) நடித்துக் கொண்டே மற்ற எலி, பறவைகளை பிடித்து தின்னக் காத்திருந்ததாக ஒரு கதை உண்டு. ஹிதோபதேச கதைகளில் கண் தெரியாத பறவை ஒன்றுக்கு வாய் ஓயாமல் உபதேசம் செய்யும் குணம்; அதனிடம் தர்மத்தை கற்றுக் கொள்ள ஆசைப் படுவதாக சொல்லிக் கொண்டு பூனை ஒன்று நெருங்கும்…[..] அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டிய நற்சிந்தனையையும் எடுத்துச் சொல்லும் பாரத கலாசாரம் சார்ந்த கதைகள் இன்றைய தேவை.

மேலும் படிக்க