உத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு

உத்தர கண்ட மாநிலத்தில் சம்ஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் என்று அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் நிஷான்க் அறிவித்தார். பொதுவாக நடைமுறை உபயோகத்திற்கு சம்ஸ்க்ருதம் உபயோகப்பட இந்த முயற்சி உதவும் என்பதே நோக்கம் என்று அவர் கூறினார். BHEL நிறுவனத்தின் சரஸ்வதி கலா மந்திர் பள்ளியில், அகில உலக நேபாளி – சம்ஸ்க்ருத மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசினார்.

மேலும் படிக்க

வ்யோமநாட் – ‘விண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்

ரஷ்யாவில் விண்வெளி வீரர்களுக்கு காஸ்மோநாட் என்று பெயர். அமெரிக்கர்கள் தம் பங்குக்கு ஒரு பெயர் வைத்தார்கள் – அஸ்ட்ரோநாட். சீனா சும்மா இருக்குமா.. அவர்களும் தம் பங்குக்கு டேய்கோநாட் என்று விண்வெளி வீரர்களை அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி விண்வெளி வீரர்களுக்கு ஆளுக்கு ஆள் பெயர் வைப்பதில் சமீபத்தில் இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. அந்த பெயர் தான் வ்யோமோநாட். இந்த வார்த்தையில் வ்யோம என்றால் வடமொழியில் ஆகாயம் – பூமிக்கு புறத்தே உள்ள வெளியை குறிக்கும்.

மேலும் படிக்க

பட்டப் படிப்புகளுக்கு…

இந்தியாவில் சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் பனிரெண்டு இருக்கின்றன. இவற்றுடன் இணைந்த/மற்றும் வேறு பல்கலைக் கழகங்களுடன் இணைந்த சம்ஸ்க்ருத கல்லூரிகள் சுமார் நூறு இருக்கலாம். தொலை தூர கல்வி மூலம் சம்ஸ்க்ருதம் கற்க விரும்புவோர் கீழே கொடுக்கப் பட்டுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்களை தொடர்பு கொள்ளலாம். ராஷ்ட்ரிய சமஸ்க்ருத வித்யா பீடம் – திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர வேத பல்கலைக் கழகம் – திருப்பதி காமேஷ்வர் சிங் தர்பங்க சம்ஸ்க்ருத பல்கலைக் கழகம் – பீகார் ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத… மேலும் படிக்க