இந்தியாவில் சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் பனிரெண்டு இருக்கின்றன. இவற்றுடன் இணைந்த/மற்றும் வேறு பல்கலைக் கழகங்களுடன் இணைந்த சம்ஸ்க்ருத கல்லூரிகள் சுமார் நூறு இருக்கலாம். தொலை தூர கல்வி மூலம் சம்ஸ்க்ருதம் கற்க விரும்புவோர் கீழே கொடுக்கப் பட்டுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்களை தொடர்பு கொள்ளலாம்.
- ராஷ்ட்ரிய சமஸ்க்ருத வித்யா பீடம் – திருப்பதி
- ஸ்ரீ வெங்கடேஸ்வர வேத பல்கலைக் கழகம் – திருப்பதி
- காமேஷ்வர் சிங் தர்பங்க சம்ஸ்க்ருத பல்கலைக் கழகம் – பீகார்
- ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் – டில்லி
- ஸ்ரீ லால் பகதூர் சாஸ்த்ரி ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத வித்யா பீடம் – டில்லி
- ஸ்ரீ சங்கரா சமஸ்க்ருத பல்கலைக் கழகம் – காலடி, கேரளா
- கவிகுலகுரு காளிதாசர் சம்ஸ்க்ருத பல்கலைக் கழகம்- மகாராஷ்ட்ரா
- ஸ்ரீ ஜெகன்நாத் விஷ்வ வித்யாலயா – ஒரிசா
- ஜகத்குரு ராமாநந்தாசார்ய சம்ஸ்க்ருத பல்கலைக் கழகம் – ராஜஸ்தான்
- சம்பூர்ணானந்தா சம்ஸ்க்ருத பல்கலைக் கழகம் – உத்தர பிரதேசம்
- சோம்நாத் சம்ஸ்க்ருத பல்கலைக் கழகம் – குஜராத்
- உத்தராஞ்சல் சம்ஸ்க்ருத பல்கலைக் கழகம் – உத்தராஞ்சல்
[தொகுப்பு: ராஷ்ட்ரிய ஸம்ஸ்க்ருத் சம்ஸ்தான்]
இது தவிர வேறு பல சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் குறித்த தகவல்கள் ஆங்காங்கே கிடைக்கின்றன. ஆனால் அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக் கழகம் தானா என்று தெரிந்து சேருவது நன்று. பார்க்க: போலி பல்கலைக் கழகங்கள் குறித்த எச்சரிக்கை