சம்ஸ்க்ருத சேவைக்கு ஒரு வாய்ப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் ஒரு பகுதியாக, அதன் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது குப்புசாமி சாஸ்திரி சம்ஸ்கிருத ஆய்வு மையம். 1927ம் ஆண்டு சம்ஸ்கிருத அறிஞர் குப்புசாமி சாஸ்திரி அவர்களால் தொடங்கப் பட்ட இந்த ஆய்வு மையம் இந்தியவியல் (indology) துறையிலும் சம்ஸ்கிருத மொழி குறித்தும் பல குறிப்பிடத் தக்க புத்தகங்களை வெளியிட்டுள்ளது. வேதம், வேதாந்தம், நியாய சாஸ்திரம், மொழியியல், இலக்கணம், யோகம், காவியம், சிற்பம் இசை நடனம் முதலான நுண்கலைகள், சோதிடம், சைவம், வைணவம் தொடர்பான நூல்களும் இதில் அடங்கும். முதன்முதலில் தொல்காப்பியத்தின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டதும் இந்த ஆய்வு மையமே. இன்றும் நூற்றுக்கணக்கான சுவடிகள் இந்த ஆய்வகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன; இந்த சுவடிகளில் பல 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை.

மேலும் படிக்க

கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி

இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள் [..] இசைமயமான இந்த மொழியை அந்தப் பிஞ்சுகளின் வாய்வழியாகக் கேட்பதில் ஓர் அலாதியான அனுபவம் [..] இதுவரை இந்தப் பள்ளியில் யாரும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லையாம். சமஸ்கிருதம் படிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு சிறப்புப் பயிற்சியும் தருகிறார்கள்.

மேலும் படிக்க

கிரந்தம் – நடப்பது என்ன?

அரசே ஒரு மொழியை/அறிவை பொதுமக்கள் கற்றுக் கொள்ள முடியாமல்  தடுப்பது சரியான நடவடிக்கை   அல்ல. ஆனால் துரதிருஷ்ட வசமாக சம்ஸ்க்ருதம், ஹிந்தி என்று மற்ற மொழிகளை தமிழர் தெரிந்து கொள்ளாமல் தடுப்பதே தமிழக அரசியலாக இருந்து வருகிறது. இப்போது கிரந்தம் ஒருங்குறியில் (Unicode) இணைப்பது குறித்து எழும் எதிர்ப்பிலும் இந்த வகை அரசியலே எதிரொலிக்கிறது.  மீடியாக்கள் முதல் தெருவில் இருக்கும் கடைகள் வரை கிரந்தம் இடம் பிடித்து விடும் – இதனால் தமிழ் அழியும் என்று… மேலும் படிக்க

சீனாவில் காளிதாசன் சிலை!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நாடக அகாதமியில் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞனும், நாடக இலக்கியத்தின் முன்னோடியுமான காளிதாசனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2006 ம் ஆண்டு ஷாங்காய் மாவட்ட அரசால் திறந்து வைக்கப் பட்டது. ஷாங்காய் நகரத்தின் அழகினை வெளிப்படுத்துவதாகவும், உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாகவும் பல்வேறு சிலைகள் இங்கே உள்ளன. இந்த காளிதாசன் சிலை மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தைச் சேர்ந்த சிற்பி திரு. ராபின் டேவிட் என்பவரால் வடிவமைக்கப்… மேலும் படிக்க

வடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்

சென்னைப் பல்கலைக் கழகம், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சில புத்தகங்களை, சமஸ்க்ருதம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளது. இந்த மொழிபெயர்க்கும் குழுவின் தலைவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான திரு. ஜி. திருவாசகம் அவர்கள், பாரதியார் பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதியின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட பனிரெண்டு புத்தகங்களை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்த விழாவில் பங்கு கொண்டு பேசுகையில், மேலும் பனிரெண்டு புத்தகங்களை பல்கலைக் கழகம் மொழி பெயர்க்க உள்ளதாக தெரிவித்தார். இதில்… மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி

நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தாமாகவே முன்வந்து வடமொழியை தமது இரண்டாம் மொழியாக பதிவு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. மக்கள் இவ்வாறு பதிவு செய்வதால் இறுதியில் கிடைக்கும் கணக்கெடுப்பில் வடமொழி கல்வியறிவு மிகுதியாக காணப்படும் – இது வடமொழியை பாதுகாக்க அரசாங்கத்தை நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவதாக அமையும் என்று அந்த அமைப்பு கருதுகிறது. “சென்ற முறை கணக்கெடுப்பில் மொத்தம் 14, 135 பேர்கள் மட்டுமே… மேலும் படிக்க