சம்ஸ்க்ருதத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

tirukkural_sanskrit

பைபிள் போன்ற சமய நூல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு வெளிவந்துள்ளன. ஆனால் எந்த சமயமும் சாராத பொது மறையாக திகழும் திருக்குறள் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது அதன் சிறப்புகளில் ஒன்று. தமிழர்கள் பெருமைப் படக் கூடிய விஷயமும் கூட.

முதன்முதலில் திருக்குறள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு மேலை நாட்டு அறிஞர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு மேலை நாட்டு மொழிகளிலும் பரவியது. இதற்கு முன்பே பல்வேறு இந்திய மொழிகளில் திருக்குறள் வழங்கி வந்துள்ளது.

பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் உரை நடையாகவே திருக்குறளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். வெகு சில மொழிகளில் மட்டுமே திருக்குறளை அதே போன்ற கவிதையாக இயற்றப் பட்டுள்ளது. சமஸ்க்ருதம் இயல்பாகவே ஒரு கவிதை மொழி. அதில் திருக்குறளை ஸ்லோகங்களாக கலைமாமணி சம்ஸ்க்ருத பேரறிஞர் ஸ்ரீராமதேசிகன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். அவர் இது மட்டும் அல்லாது நாலடியார், பத்துப் பாட்டு போன்ற  பல்வேறு நீதி நூல்களையும் கூட சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1961-ல் வெளிவந்த இவரது திருக்குறள் – சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு நூலை, ஸ்ரீ.N.V.K ঺அஸ்ரப் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் யூனிகோடில் ஏற்றி வலையில் வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

திருக்குறள் சம்ஸ்க்ருதத்தில் [online] [pdf]

4 Comments சம்ஸ்க்ருதத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

  1. P.S. Raman

    Thanks to Mr NVK Asraf for the great work for putting the UNICODE version . I got it down loaded and printed. It is a wonderful reading for those who know tamil aswell as who know / learning Sanskrit. They can really enjoy

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)