மனித சுபாவம்

தோட்டத்து பச்சிலைக்கு வீரியம் குறைவு என்று ஒரு பழமொழி உண்டு. மனித சுபாவத்தில் எதுவும் சுலபமாக கிடைத்தால் அதை மதிப்பதில்லை. இதை விளக்கும் சிறிய கதை இது. மலையில் வசிக்கும் ஒருவனிடம், அவன் வீட்டு வாசலில் கவனிப்பாரற்று விளங்கும் சிலை ஒன்று இருக்கிறது. அதனை ஒரு நாள் அங்கு வந்த நகரவாசி ஒருவன் கண்டு, சிலாகித்து என்ன விலை என்று கேட்கிறான். மலைவாசி அது உபயோகமற்ற கருங்கல் என்று கூறி ஒரு ரூபாய்க்கு விற்று விடுகிறான்…

மேலும் படிக்க

நாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்

இந்தியாவில் திரைப்படங்களின் மீது மக்களுக்கு அபரிமிதமான காதல். வருடத்துக்கு தமிழில் மட்டும் நானூறு ஐநூறு திரைப்படங்கள் எடுத்து வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலும் கதை அமைப்பு, பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஒரு ஹீரோ, ஹீரோயின், கண்டதும் காதல், வில்லன், கதாநாயக – நாயகிக்கு உதவும் காமடியன், டூயட் பாடல்கள் என்கிற “ஃபார்முலா”வே தொடர்ந்து சினிமாக்களாக வந்து அவற்றுக்கு மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள். இந்த ஃபார்முலா எப்படி ஏற்பட்டது? மேலை நாட்டுத் திரைப்படங்கள் போல, நமது நாட்டிலும் திரைமொழியில் மாற்றங்கள், திரைப்படத்துக்கேன்றே புதிய இலக்கணங்கள் உருவாகவில்லை?

மேலும் படிக்க

சம்ஸ்க்ருதம் தெரியாத மன்னன்

சம்ஸ்க்ருத மொழியின் அழகினை உணர்ந்து  இனி தன் அரசவையில் அனைவரும் சம்ஸ்க்ருதத்தில் தான் பேச வேண்டும் என்று உத்தரவிட்டான். தனக்கே சம்ஸ்க்ருதம் சரியாகத் தெரியாத போதும் இப்படி ஒரு உத்தரவு போட்டு விட்டான்….. சிறு குளத்தில் அரசன் நீராடிக் கொண்டிருந்த போது அங்கே நாகனிகை வர நேர்ந்தது. அவளைக் கண்டு, கொஞ்சம் நீரை அள்ளி அவள் மீது வீசினான் மன்னன்….

மேலும் படிக்க

கதைகள் தேவை

மகாபாரதத்தில் ஒரு பூனை போலி சந்நியாசியாக வேடமிட்டு ஒரு காலைத் தூக்கி  தவம் செய்வதாக (ஊர்த்வ பாஹு) நடித்துக் கொண்டே மற்ற எலி, பறவைகளை பிடித்து தின்னக் காத்திருந்ததாக ஒரு கதை உண்டு. ஹிதோபதேச கதைகளில் கண் தெரியாத பறவை ஒன்றுக்கு வாய் ஓயாமல் உபதேசம் செய்யும் குணம்; அதனிடம் தர்மத்தை கற்றுக் கொள்ள ஆசைப் படுவதாக சொல்லிக் கொண்டு பூனை ஒன்று நெருங்கும்…[..] அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டிய நற்சிந்தனையையும் எடுத்துச் சொல்லும் பாரத கலாசாரம் சார்ந்த கதைகள் இன்றைய தேவை.

மேலும் படிக்க