நல்வரவு – सुस्वागतम् – ஸுஸ்வாக3தம்

வாருங்கள். முதலில் நாம் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்வோம். ஒருவரை மரியாதையாக அழைக்க, ஆணாக இருந்தால் भवत: என்றும் பெண்ணாக இருந்தால் भवत्या: என்று அழைக்கலாம். சிறியவராகவோ அல்லது நன்கு அறிந்த சமவயதுடையவராகவோ இருந்தால் நேரடியாகவே கேள்வியை கேட்டு விடலாம். ஆங்கிலத்தில் Hello! என்று அழைப்பதற்கு ஈடாக சமஸ்க்ருததில் भो! என்று அழைப்பர்.

மேலும் படிக்க

அக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி

ஒரு மொழிக்கும் அதன் படைப்புகளும் எழுதி பாதுகாக்கப் படுவது மிகவும் அவசியம். அதனாலேயே எழுத்துக்களுக்கு அக்ஷரம் என்று பெயர். க்ஷரம் என்றால் அழியக்கூடியது – அக்ஷரம் என்பது நிலையானது என்று புரிந்து கொள்ளலாம். இதை புரிந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் அக்ஷர அப்யாசம் என்கிற ஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அக்ஷரமாகிய எழுத்துக்களை – அப்யாசம் – பயிற்சி செய்தல் என்று பொருள். [தேக அப்யாசம் – என்றால் உடல் பயிற்சி]. இதை ஒரு பண்டிகையாகவே ஒவ்வொரு வருடமும் – நவராத்திரி சமயத்தில் விஜய தசமி அன்றைக்கு குழந்தைகளை – பள்ளிக்கு [முன்னாட்களில் குருகுலத்திற்கு] அனுப்பி ஆசிரியர் உதவியுடன் நெல்லில் குழந்தைகளை எழுத செய்வார்கள்.

மேலும் படிக்க