கா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் மகாத்மா காந்தியின் சுயசரிதையை வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப சாஸ்த்ரி என்பார் இம்மொழி பெயர்ப்பை செய்துள்ளார். “சத்ய சோதனம்” என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க

வடமொழியில் ஐம்பெருங் காவியங்கள்

தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் ஐந்து நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறன. வடமொழியிலும் இதைப் போல முக்கியமாக பஞ்ச மகா காவியங்கள் என்று ஐந்து பெருங்காவியங்களை சொல்வர்.

குமாரசம்பவம், ரகுவம்சம் ஆகிய காளிதாசனின் படைப்புகள், பாரவியின் கிராதார்ஜுநீயம், மாகரின் சிசுபாலவதம், ஸ்ரீஹர்ஷரின் நைஷதசரிதம் ஆகியவையே அந்த ஐம்பெருங்காப்பியங்கள். சமஸ்க்ருதம் கற்கும்பொழுது மேலே குறிப்பிட்ட காவியங்களை இதே வரிசையில் பயில சொல்வார்கள்.

மேலும் படிக்க