சமஸ்க்ருதத்தில் அவ்யயம் என்பது இடம், காலம் இவற்றால் மாறாதது. இவை ஆயிரக்கணக்கில் உள்ளன. சென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற அவ்யய சொற்களை தொகுத்து “அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables) என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். சமஸ்க்ருதத்தை உறுதியுடன் கற்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான நூல்.
மேலும் படிக்கPosts Tagged → books
புத்தகக் கண்காட்சியில்…
சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி புகைப் படங்கள்
மேலும் படிக்கசமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்
மண்ணின் வளம், விதைகளை தேர்வு செய்தல், பக்குவப் படுத்துதல், பயிரிடும் காலம், அறுவடை செய்தல், விவசாய சுழற்சி முறை, பல்வேறு பண்பாடு சார்ந்த முறைமைகள், உரமிடுதல், நீர்தேக்கும் முறைகள், அசாம சக்கரம் அல்லது அரஹத்த கதி யந்திரம் எனப்படும் ஏற்றம் அமைக்கும் முறை ஆகியவை பற்றி வேத இலக்கியங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் குறிப்புகள், அன்றைய நாளில் விவசாயிகள் இவற்றைக் குறித்து அறிந்து வைத்திருந்ததையே காட்டுகிறது.
மேலும் படிக்ககா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் மகாத்மா காந்தியின் சுயசரிதையை வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப சாஸ்த்ரி என்பார் இம்மொழி பெயர்ப்பை செய்துள்ளார். “சத்ய சோதனம்” என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.
மேலும் படிக்கவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…
ஒரு நடுத்தர வயதினை தொட்ட ஒருவர், அவருக்கு வடமொழி பரிச்சயம் இல்லை. தேவநாகரி எழுத்தும் தெரியாது. இரண்டொரு ஸ்லோகங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வம் கொண்டு சமஸ்க்ருத மொழியை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அலுவல், வீட்டு பொறுப்புகள், சமூக பொறுப்புகள் என்று இருக்கும் போது, சமஸ்க்ருத வகுப்பிற்கு சென்று நேரம் செலவிட பெரும்பாலும் இவரைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு இருக்காது.
மேலும் படிக்கவடமொழி சொற்கடல்
இந்த வடமொழி சொற்கடல் 1954ம் வருடம் முதல் பதிப்பு வெளிவந்து பிறகு சமீபத்தில் 2000ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. “संस्कृत भाषा शब्द समुद्र: – द्राविड भाषार्त सहित: – தமிழ் பொருளுடன் வடமொழி சொற்கடல்” என்ற பெயரில் தற்போது என்னிடம் உள்ள இந்த பதிப்பு உள்ளே ஐந்து பாகங்களை உள்ளடக்கிய ஒரே புத்தகமாக இருக்கிறது.
மேலும் படிக்க