பாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்

தமிழ்நாட்டு மன்னர்களான சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர் கல்வி செல்வம் நிறைந்தவர்கள், கவிஞர்களைப் போற்றியவர்கள். தமிழ் கவிஞர்களை மட்டுமல்ல, சம்ஸ்க்ருத கவிஞர்களையும் தான்! மகாபாரதம் முதல் காளிதாசனின் காவியங்கள் வரை பாண்டியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாண்டியர்கள் சமஸ்க்ருதத்தை வெறுத்ததில்லை. தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்களே சம்ஸ்க்ருதத்தையும் போற்றி வந்துள்ளனர். தமிழ் தேசத்தில் வடமொழி எவ்வாறு இருந்தது என்பது பலர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே தம் மனச்சாய்வுக்கு ஏற்ப, சம்ஸ்க்ருதம் ஒரு வட இந்திய மொழி என்பன போன்ற கருத்துக்களை நம்புகிறார்கள்.

மேலும் படிக்க

எண்கள், குறிப்புகள், சதுரங்கள்

பழங்காலத்தில் எண்களை பெயர்களில்/கதைகளில் வரும் சொற்களின் எழுத்துக்களில் குறித்து அதை ஒரு ஸ்லோகமாகவும் இயற்றி விடுவர். இதனால் நீண்ட நாட்களுக்கு எண்களை நினைவு வைத்துக் கொள்ளவும் முடியும்; கட்டங்களுக்குள் எப்படிக் கூட்டினாலும் ஒரே கூட்டுத் தொகை – இதற்கு கூட ஒரு ஸ்லோகம் இருக்கிறது….

மேலும் படிக்க

ரகுவம்சம் – சில பாடல்கள்

ரகுவம்சம் சம்ஸ்க்ருத மகாகவி காளிதாசனின் தலைசிறந்த காவியங்களுள் முக்கியமானது. இது கேட்டு ரசிக்கத் தக்க வகையில் உள்ள ஸ்ரவ்ய காவ்ய வகுப்பைச் சேர்ந்தது. (சாகுந்தலம் போன்ற நாடகங்கள் த்ருச்ய காவியம் – பார்த்து ரசிக்கத் தக்கவை). அதோடு சம்ஸ்க்ருதத்தில் ஐம்பெருங்காவியங்களில் பஞ்ச மகா காவியங்கள் ஒன்று ரகுவம்சம் [..]

மேலும் படிக்க

சோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்

குழந்தை பிறப்பதை உதிக்கும் சூரியனின் இளம் சூட்டுடன் ஒப்பிடுவது கவிஞரின் கற்பனை வளத்தின் உச்சம். வெற்றுச் சொற்களால் அரசனை புகழ்ந்து விட்டுப் போகாமல் உள்ளபடியே தம் கவித்திறனால் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படிக்கும் போதும் தன் உணர்ச்சியை நமக்குள் பதிந்து விடுகிறார் இந்த பெயர் தெரியாத கவிஞர். இக்கவிதையை படிக்கும் போதே கவிஞரின் உள்ளத்தில் குழந்தைக்காக எழும் வாஞ்சை உணர்வுகளை உணர முடியும். 

மேலும் படிக்க