நூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி

சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியில் மாணவர்கள் உலக அளவில் புகழ் பெற்ற பண்டிதர்களாக ஆனார்கள். மகாமகோபாத்யாயர் போன்ற பெருமைவாய்ந்த பட்டங்களைப் பெற்றனர். கல்வித் துறையில் மேன்மையைக் கூறும் சான்றிதழ்களை பாரத ஜனாதிபதியால் வழங்கப் பெற்றனர். சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி எந்த நிலையிலும் தனது கல்வித்தரத்தைக் குறைத்ததில்லை. 2006 பிப்ரவரியில் சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடியது குறிப்பிடத் தக்கது. சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி 1906ம் ஆண்டு அமைக்கப் பட்டது. சென்னை வக்கீல் ஸ்ரீ V.கிருஷ்ணசாமி ஐயர் என்பாரின் ஆதரவில் தான் இக்கல்லூரி துவங்கியது. மகாத்மா காந்தியே அவரை ஐயர் என்று தான் அழைப்பாராம். ஐயர் சென்னை பார் கவுன்சிலில் தலைவராகவும், பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் பிறகு இறுதியில் கவர்னரின் செயற்குழு உறுப்பினராகவும் தனது மறைவு (20, திசம்பர் 1911) வரை இருந்தவர்.

மேலும் படிக்க