ஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா!

சிலப்பதிகாரச் செல்வி! அற்புதங்களின் தாய்! கற்பிற்கரசி! தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம், பெருமை, பேரருளின் அம்மை, கண்ணகி வரலாறு பேசும் நவரத்ன மாலா புதிதாக இயற்றியது.. கண்ணகிக்கு ஈழத்தின் பல பாகங்களிலும் அநேக ஊர்களில் எல்லாம் பழங்காலம் தொட்டு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் வற்றாப்பளை போன்றவை உலகப்புகழ் பெற்றவை. இவ்வாறு கண்ணகி ஆலயங்கள் நிமிர்ந்து நின்ற போதும், இன்றைக்கு ஆகம வழிப்பட்ட ஆராதனைகளும் உற்சங்களும் கண்ணகா பரமேஸ்வரிக்கு முன்னெடுக்கப்படும் போதும், சம்ஸ்கிருத வழி துதிப்பாக்கள் இந்த அன்னைக்கு இன்று வரை இல்லாதே இருக்கின்றன (அண்மையில் வெளியான அஷ்டோத்திரசதம் தவிர..) இந்நிலையில் இந் நவரத்னஸ்துதி அம்பிகை திருவடிகளில் சமர்ப்பிக்கின்றோம்..

மேலும் படிக்க