சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் [..]

மேலும் படிக்க

கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி

இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள் [..] இசைமயமான இந்த மொழியை அந்தப் பிஞ்சுகளின் வாய்வழியாகக் கேட்பதில் ஓர் அலாதியான அனுபவம் [..] இதுவரை இந்தப் பள்ளியில் யாரும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லையாம். சமஸ்கிருதம் படிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு சிறப்புப் பயிற்சியும் தருகிறார்கள்.

மேலும் படிக்க

சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…

சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி, அதில் ரிக் வேத காலம் தொட்டு மனிதன் கண்டடைந்த அனுபவங்களும், ஞானமும் பொதிந்திருப்பது குறித்து பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருப்பது தான். காலப் போக்கில் சமஸ்க்ருதம் ஒரு சாரார் மட்டுமே கற்றுக் கொள்ளும் மொழி என்று ஆனது எப்போதிலிருந்து தெரியுமா? ஆங்கில முறைக் கல்வி வந்ததிலிருந்து தான்! சமஸ்க்ருதத்தின் ஆகச் சிறந்த கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ ஒரு தனிப்பட்ட ஜாதி – வர்ண பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். வால்மீகி ஒரு… மேலும் படிக்க

பேரறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை

வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க