காசுக்காக கல்வியை விற்கும் இக்காலத்தில், கல்வி கற்பிப்பதையும் கற்பதையும் ஒரு கலையாக கருதிய நம் முன்னோர்களின் மொழிகள் நமக்கு அந்நியமாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. நால்வகையாக வாழ்வின் பயனை பெரியோர் கூறுவர், அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு ஆகிய அந்த நான்கு குறிக்கோளுக்கும் கல்வி அவசியம். வெறும் செல்வத்திற்காக மட்டும் அன்று என்று உணர்ந்தால் உண்மையான கல்வியை அடையலாம்.
மேலும் படிக்கPosts Tagged → ஸ்லோகம்
சந்தத்தில் மாறாத நடை!
நன்னெறி போதனை, ஆன்மீகம் போன்றவை மட்டும் அல்லாது, இலக்கணம், அறிவியல், கணிதம், வைத்தியம் என்று எதை எடுத்தாலும் வடமொழியில் செய்யுள்கள் (அல்லது ஸ்லோகங்கள்) தான். அதிலும் Technical treatises என்று சொல்லப் படுகிற நூல்களில் கூட அழகழகான சந்தங்களைக் கொண்ட கவிதைகள்.. செய்யுள்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் அரசாணை கூட சந்தம் நிறைந்த சம்ஸ்க்ருத கவிதைகளைக் கொண்டதாக இருக்கிறது. அந்த மரபில் இன்றும் கூட இறந்த பின் பத்தாம் நாள் இறந்தவரைப் பற்றி ஒரு நான்கு வரி சம்ஸ்க்ருத செய்யுள் (சரம ஸ்லோகம்) எழுதுவித்து படிக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. ஏன் இவ்வாறு சந்தங்களை எடுத்தாண்டு செய்யுள்கள் இயற்றப் பட்டன?
மேலும் படிக்கசம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்
வெங்கடேச சுப்ரபாதம் கேட்டிருப்பீர்கள். அதில் சுப்ரபாதம், ஸ்தோத்திரம்,
மங்களாசாசனம் என்று ஒவ்வரு பகுதியும் ஒவ்வொரு சந்தத்தில் இருக்கும்.
இது போல முப்பத்தி இரண்டு சந்தங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும்
எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அழகாக இங்கே ஒருவர பதிவு
செய்திருக்கிறார்.
வழிபாட்டுத் துதிகளின் வகைகள்
சமஸ்க்ருத மொழியிலமைந்த பக்தி பாக்களை பலவகையாக அழைக்கின்றனர். அவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே: ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns (ச்ருதி =என்பது காதால் மட்டும் கேட்கப்படும் வேதம், மந்திரங்கள் ஆகியவற்றைக்குறிக்கும்; ஸ்ம்ருதி என்பது மனத்தால் நினைக்கப்படுவது). இவை செய்யுளாகவோ உரைநடைகளாகவோ இருக்கலாம், பொதுவாகச் செய்யுள் வடிவில் அமையும். ஸ்லோகம்: செய்யுள் வடிவில் அமையும் துதி; பல்வேறு [அனுஷ்டுப் சந்தம் போன்ற] சந்த வடிவில் இருக்கும். [Generally has 8… மேலும் படிக்க