கேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…

சில வாராந்திர பத்திரிகைகளில் விடுகதை மாதிரியான புதிர் கேள்வி ஒரு பக்கத்தில் கொடுத்திருப்பார்கள். அதற்கான பதில் வேறொரு பக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருக்கும். விடை உடனே கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு. விடை கண்டு பிடிக்க முயற்சிப்பவர்கள், அதைக் கண்டு பிடித்து விட்டால் சரி பார்த்துக் கொள்ளவும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும் அந்த விடை இருக்கும் பக்கத்தைத் தேடிப் போகவேண்டும். இது மாதிரியான ஒரு ஏற்பாட்டை ஏற்கனவே பழைய சம்ஸ்க்ருத கவிகளும் கடைபிடித்திருக்கிறார்கள் என்று… மேலும் படிக்க

மதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…

இப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று சிறப்பு தினங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் டீவி சானல்களில் வரும்போது, அதுவரை அதுகுறித்து எதுவும் தெரியாதவர் கூட கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடுகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், அதனை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் மீடியாக்கள் பெரும்விழாவாகவே ஆக்கி விடுகின்றன. இது மட்டும் அல்லாது நண்பர்கள்… மேலும் படிக்க