சந்தத்தில் மாறாத நடை!

நன்னெறி போதனை, ஆன்மீகம் போன்றவை மட்டும் அல்லாது, இலக்கணம், அறிவியல், கணிதம், வைத்தியம் என்று எதை எடுத்தாலும் வடமொழியில் செய்யுள்கள் (அல்லது ஸ்லோகங்கள்) தான். அதிலும் Technical treatises என்று சொல்லப் படுகிற நூல்களில் கூட அழகழகான சந்தங்களைக் கொண்ட கவிதைகள்.. செய்யுள்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் அரசாணை கூட சந்தம் நிறைந்த சம்ஸ்க்ருத கவிதைகளைக் கொண்டதாக இருக்கிறது. அந்த மரபில் இன்றும் கூட இறந்த பின் பத்தாம் நாள் இறந்தவரைப் பற்றி ஒரு நான்கு வரி சம்ஸ்க்ருத செய்யுள் (சரம ஸ்லோகம்) எழுதுவித்து படிக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. ஏன் இவ்வாறு சந்தங்களை எடுத்தாண்டு செய்யுள்கள் இயற்றப் பட்டன?

மேலும் படிக்க

சம்ஸ்க்ருதத்தில் காலங்கள் (Tenses)

ஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை – முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை, இருமை, பன்மை என தொண்ணூறு விதங்களில் மாறுகிறது. இவ்வளவு கடினம் எதற்கு என்றால், அதுதான் மொழியின் உச்சம். அதன் அழகு. ஒரு செய்தியை வெளிப்படுத்த இத்தனை வாய்ப்புகளை கொட்டி கொடுக்கிறது இந்த மொழி. புதிய புதிய சொற்கோவைகள் உருவாவதற்கு ஏற்ற மொழியாக, எல்லா மொழிகளுக்கும், எல்லாக் காலத்திலும், எல்லா வகை சிந்தனைகளுக்கும் உதவுவதாக இருப்பதே சம்ஸ்க்ருதத்தின் சிறப்பு.

மேலும் படிக்க

சொற்குற்றம், பொருட்குற்றம்…

சரியான உச்சரிப்பு சரியான அர்த்தத்தைத் தரும் என்ற வகையில் சாத்திரங்கள் சொன்னாலும், இக்காலத்தில் அர்த்தத்தை விட்டு விட்டு வாயால் ஓதுவதே போதும் என்று கூறுவோர் பலர் இருக்கிறார்கள். ஒரு மந்திரம் எவ்வளவுக்கெவ்வளவு புரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறந்த புனிதமான மந்திரம் என்று கூட கருதத் துவங்கி விட்டனர். மந்திரங்களின் அர்த்தங்கள் வெகு சிலரே அர்த்தம் புரிந்து ஓத முடியும். பெரும்பாலும் புரோஹிதர்கள் அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்த படியால் அப்படியே மனப்பாடம் செய்தவாறு ஓதுகிறார்கள். இதற்கு மந்திரம் ஓதுகிற சத்தத்தில் இருந்து வைப்ரேஷன் (மந்திர அதிர்வு) எழுகிறது – அது கும்பத்தில் இருக்கும் நீரில் தர்ப்பை புல்லின் வழியாகப் பாய்கிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை கதைகள் பின்னப் பட்டு விட்டன. அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டால் அதன் ஒளிக்கதிர்கள் பட்டு அதிருஷ்டம் வரும் என்று சொல்வதைப் போன்றது தான் இது.

மேலும் படிக்க

அம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு

ஹிந்து மதத்தின் பெரும்பான்மையான பழமையான சமய, கலாசார, கலை, இலக்கிய நூல்கள் சம்ஸ்க்ருதத்திலேயே உள்ளன. இவற்றில் பெருமளவு பிராமணர் அல்லாத இதர வகுப்பைச் சேர்ந்த ஞானிகளாலேயே இயற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணம் இயற்றிய வால்மீகியோ, மகாபாரதம் இயற்றிய வியாசனோ பிராமணர்கள் அல்லர். ஆக பிராமணர் மட்டும் அல்லாது எல்லாருக்குமாக இருந்த பண்பாட்டு சின்னமான சம்ஸ்க்ருதம் இன்று சாதியத்தால் மறுக்கப் படுவதை அம்பேத்கர் உணர்ந்திருக்க வேண்டும். உயர்சாதிக் காரர்களின் மேட்டிமைத்தனத்துக்கு சவால் விடுவதாக, சம்ஸ்க்ருத மொழி, அதன் வாயிலாக பெறப்படும் வேத, சாத்திர, இதிகாச, புராணங்களின் ஞானம் தலித் மக்கள் கையில் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும் என்று அவர் திட்ட வட்டமாக நம்பி இருக்க வேண்டும். இதுவே அவர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று விரும்பியதற்கான முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க

வியாகரண மண்டபம்

அதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார்! இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது! “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்

மேலும் படிக்க

தமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்

திருமுறைகள் பலவற்றிலும் வேத மந்திரங்களால் ஈசன் வழிபடப் பட்டதை “வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக” என்றும் “மறையாயின சொல்லி ஒண்மலர் சாந்தவை கொண்டு முறையான் மிகுமுனிவர் தொழு முதுகுன்றடைவோமே” என்றும் வேத உபாசனை பாடப் பெற்றுள்ளது.
திருவாசகத்தில் “வேதங்கள் தெரிழுதேத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே” என்று தில்லையில் வேதங்களே சிவனை தொழுதவாறு உள்ளன என்று கூறப் படுகிறது. சம்பந்தரின் மற்றோர் தேவாரத்தில் “வேதங்கள் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று முடிந்த முடிவாகக் கூறுகிறார். சைவம் வேறு வேதம் வேறு அல்ல என்பதை “சைவநெறி வைதிகம் நிற்க” என்று கூறுகிறார் சேக்கிழார்.

மேலும் படிக்க