பாணினியின் அஷ்டாத்யாயி – 2

பாணின என்பவரின் மகன் அல்லது “பணின்” என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக “பாணினி” என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. “பாணினி” என்ற பெயரைத் தவிர தாக்ஷி புத்ர “தாக்ஷி என்பவரின் மகன்”, ஸாலாதுரீய “ஸாலாதுர” என்ற மற்ற பெயர்களும் உண்டு. கி.மு 7ஆம் நூற்றாண்டிலிருந்து 4ஆம் நூற்றாண்டு வரை, அறிஞர்கள் இவருடைய காலத்தை ஏதோவொரு நூற்றாண்டைக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இவரது காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாமென்று நம்பப் படுகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸாலாதூர என்ற கிராமம் பாணினியின் பிறந்த இடமென்று நம்பப் படுகிறது. இது தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்ற இடமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பாலான கருத்து.

மேலும் படிக்க

பாணினியின் அஷ்டாத்யாயி – 1

இந்தோ ஆரிய மொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டாத்யாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டாத்யாயியென நம்பப் படுகிறது. இம்மொழியை பாணினி பாஷா என்று குறிப்பிடுகிறார். தான் வர்ணிக்கும் மொழியைப் பாணினி சம்ஸ்க்ருதம் என்ற பெயரால் தனது இலக்கணத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. (முதன்முதலாக சம்ஸ்க்ருதம் என்ற சொல் மொழியின் தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளதை இராமாயணத்தில்தான் காணலாம்) ஆயினும், பாஷாவின் தனிப்பட்ட வர்ணனையிலக்கணம் தான் அஷ்டாத்யாயி என்று கூறுவது பொருத்தமாகாது. காலத்தால் முற்பட்ட வேதமொழியின் மொழிக்கூறுகள் (சந்த³ஸி). இந்தியாவின் கீழ்பகுதி (ப்ராசாம்), வடபகுதி (உதீ³சாம்) ஆகியவைகளில் காணப்படும் மொழிக்கூறுகள், ஆகியவைகளையும் தனது இலக்கணத்தில் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிடுகிறார். இவைகளைத் தவிர தனது காலத்துக்கு முற்பட்ட காலத்து இலக்கண நூலார்களின் கருத்துக்களையும் மொழிக் கூறுகளின் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

ப்ரத்யாஹாரம் என்றால் என்ன?

சம்ஸ்க்ருத வியாகரணத்தில் ப்ரத்யாஹாரம் என்பவை மிகவும் அடிப்படையும் முக்கியமானதும் கூட. எழுத்துக்களை தொகுத்து அவற்றை குறிப்பாக – ஸமிஜ்ஞை ஆக கொண்டு இலக்கண விதிகள் விதிக்கப் படுகின்றன. பாணினி இறைவன் நடராஜனாக ஆடிய தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு இந்த ப்ரத்யாஹார ஸமிஜ்ஞைகள் உருவானதாக கூறுவது மரபு.

மேலும் படிக்க

சொற்குற்றம், பொருட்குற்றம்…

சரியான உச்சரிப்பு சரியான அர்த்தத்தைத் தரும் என்ற வகையில் சாத்திரங்கள் சொன்னாலும், இக்காலத்தில் அர்த்தத்தை விட்டு விட்டு வாயால் ஓதுவதே போதும் என்று கூறுவோர் பலர் இருக்கிறார்கள். ஒரு மந்திரம் எவ்வளவுக்கெவ்வளவு புரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறந்த புனிதமான மந்திரம் என்று கூட கருதத் துவங்கி விட்டனர். மந்திரங்களின் அர்த்தங்கள் வெகு சிலரே அர்த்தம் புரிந்து ஓத முடியும். பெரும்பாலும் புரோஹிதர்கள் அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்த படியால் அப்படியே மனப்பாடம் செய்தவாறு ஓதுகிறார்கள். இதற்கு மந்திரம் ஓதுகிற சத்தத்தில் இருந்து வைப்ரேஷன் (மந்திர அதிர்வு) எழுகிறது – அது கும்பத்தில் இருக்கும் நீரில் தர்ப்பை புல்லின் வழியாகப் பாய்கிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை கதைகள் பின்னப் பட்டு விட்டன. அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டால் அதன் ஒளிக்கதிர்கள் பட்டு அதிருஷ்டம் வரும் என்று சொல்வதைப் போன்றது தான் இது.

மேலும் படிக்க

வியாகரண மண்டபம்

அதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார்! இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது! “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்

மேலும் படிக்க

வியாகரண சித்தாந்த கௌமுதி

கௌமுதி என்றால் நிலவொளி என்று அர்த்தம். அஷ்டாத்யாயியை கற்பதற்கு அணுகும் மாணவர்களை, சூரியனின் வெப்பம் போன்ற அதன் கடினத் தன்மை நெருங்க விடாமல் செய்துவிடக் கூடும். அதற்கு மாற்றாக அநேக உதாரணங்களுடன் நிலவொளியின் குளுமையை ஒத்ததாக அமைந்த நூலே வியாகரண சிந்தாந்த கௌமுதி என்று அழைக்கப் படுகிறது.

மேலும் படிக்க