ஆகாசவாணியில் சம்ஸ்க்ருத வார்த்தைகள்

“நமது மக்களின் வழக்கம் எப்போதுமே நமது நாட்டு திறமைகளையும் பெருமைகளையும் மேற்குலகில் அங்கீகரிக்கப் பட்டபின்னர் தான் கண்டு கொள்வோம். சமஸ்க்ருதத்துக்கும் இதுவேதான் நடந்தது. 1960ம் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜெர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அங்கே ஒரு உள்ளூர் வானொலி நிலையம் சம்ஸ்க்ருதத்தில் நிகழ்ச்சிகளை வழக்கமாக ஒலிபரப்பி வந்ததைக் கண்டார்கள். அவர்கள் திரும்பி வந்து சம்ஸ்க்ருதத்தின் பிறப்பிடமான நமது பாரதத்தில் சம்ஸ்க்ருதத்திலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஏழு ஆண்டுகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டபின்னர் தான் சம்ஸ்க்ருத செய்திகள் துவங்கியது. இப்போது ஆல் இந்தியா ரேடியோ வானொலி நிலையம் தினம் தொண்ணூறு மொழிகளில் 647 செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் தில்லியில் இருந்து மட்டுமே 33 மொழிகளில் 178 செய்திகள் ஒலிபரப்பாகின்றன. இவற்றில் சம்ஸ்க்ருத செய்திகளும் ஒன்று

மேலும் படிக்க

பௌத்த கலப்பு சமஸ்கிருதம்

மொழியியல் ரீதியிலும் அக்காலத்து மக்களின் மொழிப்பயன்பாடு மற்றும் சாமான்யர்களிடையே புழங்கிய சமஸ்கிருதம் ஆகியவற்றைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள பௌத்த கலப்பு சமஸ்கிருதம் மிகவும் முக்கியமானதொரு கருவி ஆகும். வெகுஜன பயன்பாட்டிற்கு உரிய முறையில் பௌத்த சமஸ்கிருதம் ஆரம்ப காலத்தில் விளங்கியது. இதேபோல இதிஹாசங்களில் வரும் சமஸ்கிருத பயன்பாட்டையும் “இதிஹாஸ சமஸ்கிருதம்” (Epic Sanskrit) என்று அழைக்கின்றனர். சமஸ்கிருதம் என்பது மிகவும் கடுமையான கட்டுக்கோப்பான மொழி என்ற பொதுவான எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில், மக்களின் பயன்பாட்டிற்காக அமைந்த இது போன்ற மொழிப்பயன்பாடுகளையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். சமஸ்கிருதம் என்பது பண்டிதர்களுக்கு கட்டுப்பட்ட மொழி மட்டுமல்ல, சாமான்யர்களுக்கும் நெகிழ்ந்து செல்லக்கூடியமொழி என்பதையே இது மீண்டும் வலியுறுத்துகிறது.
— திரு.வினோத் ராஜன்.

மேலும் படிக்க

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் [..]

மேலும் படிக்க

சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது. ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம். அதைத்தான்… மேலும் படிக்க

தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்

தேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்பண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி – நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.

மேலும் படிக்க

பேரறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை

வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க