சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ளுகையில் சில சொற்களை படிக்கும் பொது ஒரு வியப்பு ஏற்படுகிறது. நாம் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு சொல் சம்ஸ்க்ருதத்திலும் இருந்து, அம்மொழியில் அதன் பயன்பாடு என்ன, எப்படி, தமிழில் அந்த சொல்லின் பயன்பாடு எப்படி என்று தெரியும் போது ஏற்படும் வியப்பே அது. உதாரணமாக ஒன்று என்பதற்கு உரிய சம்ஸ்க்ருத சொல் ஏகம் என்பதாகும். ஒரு குழுவில் எல்லாரும் ஒரு முடிவுக்கு ஒப்புக் கொண்டால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப் பட்டது, ஏகமனதாக ஏற்கப் பட்டது… மேலும் படிக்க
Posts Tagged → மொழி
பாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்
தமிழ்நாட்டு மன்னர்களான சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர் கல்வி செல்வம் நிறைந்தவர்கள், கவிஞர்களைப் போற்றியவர்கள். தமிழ் கவிஞர்களை மட்டுமல்ல, சம்ஸ்க்ருத கவிஞர்களையும் தான்! மகாபாரதம் முதல் காளிதாசனின் காவியங்கள் வரை பாண்டியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாண்டியர்கள் சமஸ்க்ருதத்தை வெறுத்ததில்லை. தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்களே சம்ஸ்க்ருதத்தையும் போற்றி வந்துள்ளனர். தமிழ் தேசத்தில் வடமொழி எவ்வாறு இருந்தது என்பது பலர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே தம் மனச்சாய்வுக்கு ஏற்ப, சம்ஸ்க்ருதம் ஒரு வட இந்திய மொழி என்பன போன்ற கருத்துக்களை நம்புகிறார்கள்.
மேலும் படிக்கமனித சுபாவம்
தோட்டத்து பச்சிலைக்கு வீரியம் குறைவு என்று ஒரு பழமொழி உண்டு. மனித சுபாவத்தில் எதுவும் சுலபமாக கிடைத்தால் அதை மதிப்பதில்லை. இதை விளக்கும் சிறிய கதை இது. மலையில் வசிக்கும் ஒருவனிடம், அவன் வீட்டு வாசலில் கவனிப்பாரற்று விளங்கும் சிலை ஒன்று இருக்கிறது. அதனை ஒரு நாள் அங்கு வந்த நகரவாசி ஒருவன் கண்டு, சிலாகித்து என்ன விலை என்று கேட்கிறான். மலைவாசி அது உபயோகமற்ற கருங்கல் என்று கூறி ஒரு ரூபாய்க்கு விற்று விடுகிறான்…
மேலும் படிக்கசம்ஸ்க்ருதத்தில் காலங்கள் (Tenses)
ஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை – முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை, இருமை, பன்மை என தொண்ணூறு விதங்களில் மாறுகிறது. இவ்வளவு கடினம் எதற்கு என்றால், அதுதான் மொழியின் உச்சம். அதன் அழகு. ஒரு செய்தியை வெளிப்படுத்த இத்தனை வாய்ப்புகளை கொட்டி கொடுக்கிறது இந்த மொழி. புதிய புதிய சொற்கோவைகள் உருவாவதற்கு ஏற்ற மொழியாக, எல்லா மொழிகளுக்கும், எல்லாக் காலத்திலும், எல்லா வகை சிந்தனைகளுக்கும் உதவுவதாக இருப்பதே சம்ஸ்க்ருதத்தின் சிறப்பு.
மேலும் படிக்கபாணினியின் அஷ்டாத்யாயி – 2
பாணின என்பவரின் மகன் அல்லது “பணின்” என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக “பாணினி” என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. “பாணினி” என்ற பெயரைத் தவிர தாக்ஷி புத்ர “தாக்ஷி என்பவரின் மகன்”, ஸாலாதுரீய “ஸாலாதுர” என்ற மற்ற பெயர்களும் உண்டு. கி.மு 7ஆம் நூற்றாண்டிலிருந்து 4ஆம் நூற்றாண்டு வரை, அறிஞர்கள் இவருடைய காலத்தை ஏதோவொரு நூற்றாண்டைக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இவரது காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாமென்று நம்பப் படுகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸாலாதூர என்ற கிராமம் பாணினியின் பிறந்த இடமென்று நம்பப் படுகிறது. இது தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்ற இடமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பாலான கருத்து.
மேலும் படிக்ககுறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?
கதை என்பதை गदै என்று உச்சரிப்பதுதான் தமிழ் முறை. ‘அதை’, ‘கதை’, ‘விதை’, ‘மதி’, ‘அன்னையும் பிதாவும்’ இவைகளில் எல்லாம் தமிழர் த என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் द வாகத்தான் உச்சரிப்பார்கள். அவ்வாறு உச்சரிப்பது தமிழ் முறையில் சரியேயாகும். நான் கூறியிருப்பது வடமொழிப் பயிற்சி அடைந்தவர்களுக்கும் தெலுங்கு, கன்னடம் வழங்கும் பிரதேசங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசமாகத் தோன்றலாம். தமிழ்ச் சொற்களுக்கும் தமிழருக்குமே தமிழ் எழுத்துக் குறிகள் உண்டாக்கப் பட்டவை. பிற பாஷைகளைத் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதப் புகின் பல குறைகள் தோன்றும். அதைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை நாம் குறை கூறுவதோ இகழ்வதோ கூடாது.
மேலும் படிக்கபாணினியின் அஷ்டாத்யாயி – 1
இந்தோ ஆரிய மொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டாத்யாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டாத்யாயியென நம்பப் படுகிறது. இம்மொழியை பாணினி பாஷா என்று குறிப்பிடுகிறார். தான் வர்ணிக்கும் மொழியைப் பாணினி சம்ஸ்க்ருதம் என்ற பெயரால் தனது இலக்கணத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. (முதன்முதலாக சம்ஸ்க்ருதம் என்ற சொல் மொழியின் தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளதை இராமாயணத்தில்தான் காணலாம்) ஆயினும், பாஷாவின் தனிப்பட்ட வர்ணனையிலக்கணம் தான் அஷ்டாத்யாயி என்று கூறுவது பொருத்தமாகாது. காலத்தால் முற்பட்ட வேதமொழியின் மொழிக்கூறுகள் (சந்த³ஸி). இந்தியாவின் கீழ்பகுதி (ப்ராசாம்), வடபகுதி (உதீ³சாம்) ஆகியவைகளில் காணப்படும் மொழிக்கூறுகள், ஆகியவைகளையும் தனது இலக்கணத்தில் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிடுகிறார். இவைகளைத் தவிர தனது காலத்துக்கு முற்பட்ட காலத்து இலக்கண நூலார்களின் கருத்துக்களையும் மொழிக் கூறுகளின் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க