சம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தி.
Posts Tagged → புத்தகம்
காசிகா – இலக்கண உரை
சம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண விதிகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்றி வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி… மேலும் படிக்க
மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்… (சம்ஸ்க்ருதத்தில்)
சுவாமி சுகபோதானந்தா அவர்களின் “மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு “நிழல்கள்” ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்கிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலருக்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன. மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்! என்ற இந்த புத்தகம் தற்போது சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு “ஹே மன:! ஸமாஸ்வசிது!” என்ற தலைப்புடன் சம்ஸ்க்ருத பாரதி அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.
மேலும் படிக்க