சென்னை மயிலாப்பூரில் உள்ள சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் ஒரு பகுதியாக, அதன் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது குப்புசாமி சாஸ்திரி சம்ஸ்கிருத ஆய்வு மையம். 1927ம் ஆண்டு சம்ஸ்கிருத அறிஞர் குப்புசாமி சாஸ்திரி அவர்களால் தொடங்கப் பட்ட இந்த ஆய்வு மையம் இந்தியவியல் (indology) துறையிலும் சம்ஸ்கிருத மொழி குறித்தும் பல குறிப்பிடத் தக்க புத்தகங்களை வெளியிட்டுள்ளது. வேதம், வேதாந்தம், நியாய சாஸ்திரம், மொழியியல், இலக்கணம், யோகம், காவியம், சிற்பம் இசை நடனம் முதலான நுண்கலைகள், சோதிடம், சைவம், வைணவம் தொடர்பான நூல்களும் இதில் அடங்கும். முதன்முதலில் தொல்காப்பியத்தின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டதும் இந்த ஆய்வு மையமே. இன்றும் நூற்றுக்கணக்கான சுவடிகள் இந்த ஆய்வகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன; இந்த சுவடிகளில் பல 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை.
மேலும் படிக்க