சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…

சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி, அதில் ரிக் வேத காலம் தொட்டு மனிதன் கண்டடைந்த அனுபவங்களும், ஞானமும் பொதிந்திருப்பது குறித்து பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருப்பது தான். காலப் போக்கில் சமஸ்க்ருதம் ஒரு சாரார் மட்டுமே கற்றுக் கொள்ளும் மொழி என்று ஆனது எப்போதிலிருந்து தெரியுமா? ஆங்கில முறைக் கல்வி வந்ததிலிருந்து தான்! சமஸ்க்ருதத்தின் ஆகச் சிறந்த கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ ஒரு தனிப்பட்ட ஜாதி – வர்ண பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். வால்மீகி ஒரு… மேலும் படிக்க

சீனாவில் காளிதாசன் சிலை!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நாடக அகாதமியில் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞனும், நாடக இலக்கியத்தின் முன்னோடியுமான காளிதாசனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2006 ம் ஆண்டு ஷாங்காய் மாவட்ட அரசால் திறந்து வைக்கப் பட்டது. ஷாங்காய் நகரத்தின் அழகினை வெளிப்படுத்துவதாகவும், உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாகவும் பல்வேறு சிலைகள் இங்கே உள்ளன. இந்த காளிதாசன் சிலை மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தைச் சேர்ந்த சிற்பி திரு. ராபின் டேவிட் என்பவரால் வடிவமைக்கப்… மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி

நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தாமாகவே முன்வந்து வடமொழியை தமது இரண்டாம் மொழியாக பதிவு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. மக்கள் இவ்வாறு பதிவு செய்வதால் இறுதியில் கிடைக்கும் கணக்கெடுப்பில் வடமொழி கல்வியறிவு மிகுதியாக காணப்படும் – இது வடமொழியை பாதுகாக்க அரசாங்கத்தை நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவதாக அமையும் என்று அந்த அமைப்பு கருதுகிறது. “சென்ற முறை கணக்கெடுப்பில் மொத்தம் 14, 135 பேர்கள் மட்டுமே… மேலும் படிக்க

உத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு

உத்தர கண்ட மாநிலத்தில் சம்ஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் என்று அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் நிஷான்க் அறிவித்தார். பொதுவாக நடைமுறை உபயோகத்திற்கு சம்ஸ்க்ருதம் உபயோகப்பட இந்த முயற்சி உதவும் என்பதே நோக்கம் என்று அவர் கூறினார். BHEL நிறுவனத்தின் சரஸ்வதி கலா மந்திர் பள்ளியில், அகில உலக நேபாளி – சம்ஸ்க்ருத மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசினார்.

மேலும் படிக்க

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சங்கதம்

இந்திய மொழிகளின் செறிவுக்கு மிகவும் உதவிய காரணி என்று சிந்தித்துப் பார்த்தால் சங்கதத்தின் பங்களிப்பு மகத்தானது. சங்கதத்தில் அமைந்த காவியங்களின் சிந்தனைகள், அழகியல், இலக்கண அமைப்பு, நீதிகள், சாத்திரங்கள் என்று பலவற்றின் பாதிப்பு ஏனைய மொழிகளில் இருப்பது மறுக்க முடியாதது. ஆனால் சங்கதத்தின் இன்றைய நிலை திருப்திகரமாக இல்லை – ஆதரவு அற்ற நிலையில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்போது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது முதல் பத்து ஆண்டுகளுக்குள் இருக்கிறோம்.   இந்த நூற்றாண்டில்… மேலும் படிக்க