எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.

மேலும் படிக்க

கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி

இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள் [..] இசைமயமான இந்த மொழியை அந்தப் பிஞ்சுகளின் வாய்வழியாகக் கேட்பதில் ஓர் அலாதியான அனுபவம் [..] இதுவரை இந்தப் பள்ளியில் யாரும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லையாம். சமஸ்கிருதம் படிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு சிறப்புப் பயிற்சியும் தருகிறார்கள்.

மேலும் படிக்க

சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…

சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி, அதில் ரிக் வேத காலம் தொட்டு மனிதன் கண்டடைந்த அனுபவங்களும், ஞானமும் பொதிந்திருப்பது குறித்து பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருப்பது தான். காலப் போக்கில் சமஸ்க்ருதம் ஒரு சாரார் மட்டுமே கற்றுக் கொள்ளும் மொழி என்று ஆனது எப்போதிலிருந்து தெரியுமா? ஆங்கில முறைக் கல்வி வந்ததிலிருந்து தான்! சமஸ்க்ருதத்தின் ஆகச் சிறந்த கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ ஒரு தனிப்பட்ட ஜாதி – வர்ண பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். வால்மீகி ஒரு… மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி

நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தாமாகவே முன்வந்து வடமொழியை தமது இரண்டாம் மொழியாக பதிவு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. மக்கள் இவ்வாறு பதிவு செய்வதால் இறுதியில் கிடைக்கும் கணக்கெடுப்பில் வடமொழி கல்வியறிவு மிகுதியாக காணப்படும் – இது வடமொழியை பாதுகாக்க அரசாங்கத்தை நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவதாக அமையும் என்று அந்த அமைப்பு கருதுகிறது. “சென்ற முறை கணக்கெடுப்பில் மொத்தம் 14, 135 பேர்கள் மட்டுமே… மேலும் படிக்க

நல்வரவு – सुस्वागतम् – ஸுஸ்வாக3தம்

வாருங்கள். முதலில் நாம் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்வோம். ஒருவரை மரியாதையாக அழைக்க, ஆணாக இருந்தால் भवत: என்றும் பெண்ணாக இருந்தால் भवत्या: என்று அழைக்கலாம். சிறியவராகவோ அல்லது நன்கு அறிந்த சமவயதுடையவராகவோ இருந்தால் நேரடியாகவே கேள்வியை கேட்டு விடலாம். ஆங்கிலத்தில் Hello! என்று அழைப்பதற்கு ஈடாக சமஸ்க்ருததில் भो! என்று அழைப்பர்.

மேலும் படிக்க

சங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்

சில மேற்கத்திய போலி சம்ஸ்க்ருத மொழியாளர்களும், இந்தியாவின் சில ‘பெயர் பெற்ற’ வரலாற்று ஆய்வாளர்களும் இந்த “இறந்து போன மொழி” பிரசாரத்தை துவக்கி தம்மை தாமே மகிழ்வித்துக் கொண்டுள்ளனர். இது இப்படியே படித்தவர்களின் ஃபேஷனும் ஆகிவிட்டது. இதே வகையில் பார்த்தால் லத்தீன் மொழிகூட பேச்சு மொழியாக இல்லாததால் இறந்து போன மொழி என்று யாராவது சொல்கிறார்களா? அப்படி பார்த்தால் சுமேரிய எகிப்திய மொழிகள் கூட இறந்து போனவைதான். இதே வகையில் தான் சங்கதமும் இருக்கிறதா?

மேலும் படிக்க

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சங்கதம்

இந்திய மொழிகளின் செறிவுக்கு மிகவும் உதவிய காரணி என்று சிந்தித்துப் பார்த்தால் சங்கதத்தின் பங்களிப்பு மகத்தானது. சங்கதத்தில் அமைந்த காவியங்களின் சிந்தனைகள், அழகியல், இலக்கண அமைப்பு, நீதிகள், சாத்திரங்கள் என்று பலவற்றின் பாதிப்பு ஏனைய மொழிகளில் இருப்பது மறுக்க முடியாதது. ஆனால் சங்கதத்தின் இன்றைய நிலை திருப்திகரமாக இல்லை – ஆதரவு அற்ற நிலையில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்போது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது முதல் பத்து ஆண்டுகளுக்குள் இருக்கிறோம்.   இந்த நூற்றாண்டில்… மேலும் படிக்க