ஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.
மேலும் படிக்கPosts Tagged → சம்ஸ்க்ருதம்
சீன மொழியும் சம்ஸ்க்ருதமும்
சீனமொழியும் சம்ஸ்க்ருத மொழியும் இந்த உலகின் மிகப் பழைய, பரவலான தாக்கத்தைக் கொண்ட செழுமையான மொழிகள். இவ்விரு மொழிகளுக்கும் பல ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. இவ்விரண்டு மொழிகளுமே மானுட இனத்தின் முக்கியமான மொழிகளாம்.
மேலும் படிக்கஅநேகமாக தெரிந்தது தான்!
சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ளுகையில் சில சொற்களை படிக்கும் பொது ஒரு வியப்பு ஏற்படுகிறது. நாம் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு சொல் சம்ஸ்க்ருதத்திலும் இருந்து, அம்மொழியில் அதன் பயன்பாடு என்ன, எப்படி, தமிழில் அந்த சொல்லின் பயன்பாடு எப்படி என்று தெரியும் போது ஏற்படும் வியப்பே அது. உதாரணமாக ஒன்று என்பதற்கு உரிய சம்ஸ்க்ருத சொல் ஏகம் என்பதாகும். ஒரு குழுவில் எல்லாரும் ஒரு முடிவுக்கு ஒப்புக் கொண்டால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப் பட்டது, ஏகமனதாக ஏற்கப் பட்டது… மேலும் படிக்க
சம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்
தமிழ் ஒரு தனிச்செம்மொழி, வடமொழிக்கு ஈடான பாரத நாட்டின் செல்வம் என்பதில் ஐயமில்லை. சம்ஸ்க்ருதம் போன்றே தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்கள் தமிழ் அறிஞர் பெருமக்களால் இயற்றப் பட்டு வந்துள்ளன. அவற்றில் சம்ஸ்க்ருதமும் தமிழும் அறிந்த சிலர் இவ்விரண்டு மொழிகளின் சிறப்பையும் போற்றி இவற்றுக்கு ஒரே இலக்கணம் எழுத முற்பட்டனர். மு.வை. அரவிந்தன் என்பார் எழுதியுள்ள “உரையாசிரியர்கள்” என்ற நூலில் இவர்களில் சிலர் பற்றிய தகவல் உள்ளது. ஒரு தகவலாக அந்த நூலில் ஒரு பகுதியை இங்கே… மேலும் படிக்க
பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015
பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு தாய்லாந்து சில்பகார்ன் பல்கலைக் கழகத்தில் ஜூன் 28 துவங்கி, ஜூலை 2 ம் தேதி வரை நடை பெற உள்ளது. இம்மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல நாடுகளில் ஒன்றில் நடத்தப் படுவதாகும். சம்ஸ்க்ருத மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகிய பல துறைகளில் ஆய்வுகள், உரைகள் நிகழ்த்தப் படும்.
பாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்
தமிழ்நாட்டு மன்னர்களான சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர் கல்வி செல்வம் நிறைந்தவர்கள், கவிஞர்களைப் போற்றியவர்கள். தமிழ் கவிஞர்களை மட்டுமல்ல, சம்ஸ்க்ருத கவிஞர்களையும் தான்! மகாபாரதம் முதல் காளிதாசனின் காவியங்கள் வரை பாண்டியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாண்டியர்கள் சமஸ்க்ருதத்தை வெறுத்ததில்லை. தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்களே சம்ஸ்க்ருதத்தையும் போற்றி வந்துள்ளனர். தமிழ் தேசத்தில் வடமொழி எவ்வாறு இருந்தது என்பது பலர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே தம் மனச்சாய்வுக்கு ஏற்ப, சம்ஸ்க்ருதம் ஒரு வட இந்திய மொழி என்பன போன்ற கருத்துக்களை நம்புகிறார்கள்.
மேலும் படிக்கமனித சுபாவம்
தோட்டத்து பச்சிலைக்கு வீரியம் குறைவு என்று ஒரு பழமொழி உண்டு. மனித சுபாவத்தில் எதுவும் சுலபமாக கிடைத்தால் அதை மதிப்பதில்லை. இதை விளக்கும் சிறிய கதை இது. மலையில் வசிக்கும் ஒருவனிடம், அவன் வீட்டு வாசலில் கவனிப்பாரற்று விளங்கும் சிலை ஒன்று இருக்கிறது. அதனை ஒரு நாள் அங்கு வந்த நகரவாசி ஒருவன் கண்டு, சிலாகித்து என்ன விலை என்று கேட்கிறான். மலைவாசி அது உபயோகமற்ற கருங்கல் என்று கூறி ஒரு ரூபாய்க்கு விற்று விடுகிறான்…
மேலும் படிக்க