காவிய அலங்காரம்

இலக்கியம் அல்லது காவியம் என்பது எளிமையாகச் சொல்லப் போனால் சொற்களை, வாக்கியங்களை சரியான விதத்தில் பொருள் பொதிந்ததாக அமைப்பது என்று கருதலாம். இவ்வாறு உருவாகும் காவியங்கள் தமது கருப்பொருளாலும், அமைந்த விதத்தாலும் ஜீவனுள்ளவை ஆகின்றன. இவ்வாறான காவியங்களுக்கு மனிதர்களைப் போலவே உயிர் உண்டு. அங்கங்கள் உண்டு. பண்புகள் உண்டு. காவியத்திற்கு இனிமையே முதன்மையான பண்பு என்று சிலர் கூறுவர். மனிதர்கள் ஆபரணங்களை அணியும்போது அழகு மேலும் கூடித் தெரிவது போல அலங்காரங்கள் காவியத்தின் இனிமையை அழகை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க

வடமொழியும் தென்மொழியும்…

நான் பார்த்தவரை எல்லா தகவற்செறிவுள்ள நூல்களுமே தெலுங்கை ஒரு திராவிட மொழி என்றே கூறுகின்றன – ஆனால் தெலுங்கை தாய்மொழியாக பேசும் எனக்கு, தொண்ணூறு சதவீதம் தெலுங்கு வார்த்தைகள் சம்ஸ்க்ருத வேரில் இருந்து உருவானதாகவே தோன்றுகின்றன – இவ்வாறு இருக்கையில் “திராவிட மொழி” என்று கூறும் மொழியியலின் நிலைப்பாடு குறித்து என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ராஜீவ் மல்ஹோத்ரா – அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் “உடையும் இந்தியா..?” என்கிற நூல் வேறு ஒரு காரணத்தைக் கூறுகிறது. ஒரு நூற்றாண்டுக்குள், பத்தொன்பதாம் நூற்றாண்டு துவக்கத்தில், நமக்கு திராவிட மொழிக் குடும்பம் என்ற பெயர் கிடைக்கிறது – சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் இதுவே திரும்ப திரும்பச் சொல்லப் பட்டு இப்போது படித்த (தென்னிந்திய மொழிகளில் எழுதப் படிக்க தெரிந்த) வட இந்திய மக்கள், “திராவிட” மொழிகளில் இத்தனை சம்ஸ்க்ருத வார்த்தைகளா என்று வியக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் மொழியியல் குறித்து கற்பிக்கும் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப் படவேண்டும் என்று எண்ணுகிறேன்.

மேலும் படிக்க

சிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்

கீரிப்பிள்ளை கதை ஒரு இன்றியமையாத நீதியை, இளங்கோவடிகள் கோவலனுக்கு மாடலன் கூறியதாக அமைத்துள்ளார். அதில், ஒரு பெண், கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இந்த கதை, “பஞ்ச தந்திரம்’ எனும், சமஸ்கிருத நூலில் உள்ளது. அது, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கதையை மேலும் விரித்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். அதை, “வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடன் அறி மாந்தர் கைநீ கொடுக்க’ என்று குறிக்கிறார். வட மொழி வாசகம் என்பது பற்றி, அரும்பத உரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தமது உரையில் கூறும்போது, இது ஒரு “கிரந்தம்’ என்று குறித்து, அதை, “அபரீட்ச ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் சுபரீட்சிதம் பர்ஷா பவதி சந்தாபம் பிராம்மணி நகுலம் யதா’ என, சமஸ்கிருத மொழியில் அப்படியே கொடுத்திருக்கின்றனர். இதை அடியார்க்கு நல்லார், “கவி’ என்றும் கூறுகிறார்.

மேலும் படிக்க

மஹாகவி பவபூதி

தமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும் கூட. மகாவீரசரிதம், உத்தரராம சரிதம் மற்றும் மாலதீமாதவம் ஆகிய நாடகங்களை இயற்றியவர். காளிதாசரும், பாஸரும் வாழ்ந்த காலத்தில் இருந்து சுமார் நானூறு – ஐநூறு ஆண்டுகள் கழித்து, எட்டாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று கணக்கிடப் படுகிறது. இவரது பிறப்பிடம் மகாராஷ்டிரத்தில் கோண்டியா மாவட்டத்தில் உள்ள பத்மபுர் என்கிற கிராமம் என்று தெரிகிறது. இந்த கிராமம் விதர்ப தேசத்து மன்னர்களின் தலைநகரமாக சில காலம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் பவபூதி வாழ்ந்த காலத்தில் அவரை ஆதரிக்க அரசர்கள் – புரவலர்கள் இல்லாத காரணத்தால் அங்கிருந்த இடம்பெயர்ந்து வடக்கே கந்நௌசியில் மாமன்னர் யசோவர்மனின் ஆதரவில் இருந்ததாக தெரிகிறது.

பவபூதி குறித்து சுவாரசியமான பல கதைகள் உண்டு. இவரும் காளிதாசரும் ஒரே காலத்தில் வாழவில்லை என்று தெரிந்தாலும் அப்படி வாழ்ந்தது போல கற்பனையான கதைகள் உண்டு.

மேலும் படிக்க

ரகுவம்சம் – சில பாடல்கள்

ரகுவம்சம் சம்ஸ்க்ருத மகாகவி காளிதாசனின் தலைசிறந்த காவியங்களுள் முக்கியமானது. இது கேட்டு ரசிக்கத் தக்க வகையில் உள்ள ஸ்ரவ்ய காவ்ய வகுப்பைச் சேர்ந்தது. (சாகுந்தலம் போன்ற நாடகங்கள் த்ருச்ய காவியம் – பார்த்து ரசிக்கத் தக்கவை). அதோடு சம்ஸ்க்ருதத்தில் ஐம்பெருங்காவியங்களில் பஞ்ச மகா காவியங்கள் ஒன்று ரகுவம்சம் [..]

மேலும் படிக்க