ஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.
மேலும் படிக்கPosts Tagged → கல்வி
கையளவு கல்வி…
காசுக்காக கல்வியை விற்கும் இக்காலத்தில், கல்வி கற்பிப்பதையும் கற்பதையும் ஒரு கலையாக கருதிய நம் முன்னோர்களின் மொழிகள் நமக்கு அந்நியமாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. நால்வகையாக வாழ்வின் பயனை பெரியோர் கூறுவர், அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு ஆகிய அந்த நான்கு குறிக்கோளுக்கும் கல்வி அவசியம். வெறும் செல்வத்திற்காக மட்டும் அன்று என்று உணர்ந்தால் உண்மையான கல்வியை அடையலாம்.
மேலும் படிக்கநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி
சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியில் மாணவர்கள் உலக அளவில் புகழ் பெற்ற பண்டிதர்களாக ஆனார்கள். மகாமகோபாத்யாயர் போன்ற பெருமைவாய்ந்த பட்டங்களைப் பெற்றனர். கல்வித் துறையில் மேன்மையைக் கூறும் சான்றிதழ்களை பாரத ஜனாதிபதியால் வழங்கப் பெற்றனர். சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி எந்த நிலையிலும் தனது கல்வித்தரத்தைக் குறைத்ததில்லை. 2006 பிப்ரவரியில் சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடியது குறிப்பிடத் தக்கது. சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி 1906ம் ஆண்டு அமைக்கப் பட்டது. சென்னை வக்கீல் ஸ்ரீ V.கிருஷ்ணசாமி ஐயர் என்பாரின் ஆதரவில் தான் இக்கல்லூரி துவங்கியது. மகாத்மா காந்தியே அவரை ஐயர் என்று தான் அழைப்பாராம். ஐயர் சென்னை பார் கவுன்சிலில் தலைவராகவும், பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் பிறகு இறுதியில் கவர்னரின் செயற்குழு உறுப்பினராகவும் தனது மறைவு (20, திசம்பர் 1911) வரை இருந்தவர்.
மேலும் படிக்கவேதாந்த உண்மைகளை அறிய வடமொழி பயிற்சி தேவை
ஆகமங்கள் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி சொல்லித்தருபவை. வேதாந்த உண்மைகளை, வடமொழி பயிற்சி இல்லாத தமிழர்கள், அறிந்து கொள்ள வேண்டும், என்ற சீரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திருமடம், கோவிலூர் மடம். “குரு’ என்பவர் பழுக்காத வாழைப்பழத்தாரில் உள்ள, ஒரு பழுத்த பழத்தோடு ஒப்பிடப்படுகிறார். இந்த பழுத்த பழத்தின் அண்மையே, ஏனைய காய்களை பழுக்க வைத்துவிடும்.கற்றோருக்கு கண்கள் இரண்டோடு, கல்வியும் சேர்த்து மூன்று விழியாகிறது. ஈகை புரிவோருக்கு நகக்கண்கள் சேர்த்து, ஏழு கண்கள் ஆகின்றது. ஞானிகள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு கண்கள் எண்ணிலடங்காதவை.
மேலும் படிக்கஎல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா
ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.
மேலும் படிக்க