தமிழ் வழியாக வடமொழி கற்க உங்களை வரவேற்கிறேன். சுஸ்வாகதம்! ஆங்கிலத்தைவிட தமிழ் மொழி வழியாக வடமொழி கற்பது மிகவும் எளிது. ஏனெனில் ஆங்கில மொழியில் சமஸ்க்ருத வார்த்தைகளின் திரிபுகள் இருந்தாலும் (मातृ – மாத்ரு – mother) அந்த மொழியில் வார்த்தைகளின் சம்ஸ்க்ருத வேர்களை கண்டு அடைவது கடினம். ஆனால் தமிழில் நேரடியாகவே பல்லாயிரக் கணக்கான சமஸ்க்ருத வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆகையால் தமிழுக்கு வடமொழி அன்னியமானதாக இருக்காது.
வாருங்கள். முதலில் நாம் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்வோம்.
ஒருவரை மரியாதையாக அழைக்க, ஆணாக இருந்தால் भवान् (ப4வாந்) என்றும் பெண்ணாக இருந்தால் भवति (ப4வதி) என்று அழைக்கலாம். சிறியவராகவோ அல்லது நன்கு அறிந்த சமவயதுடையவராகவோ இருந்தால் நேரடியாகவே கேள்வியை கேட்டு விடலாம். ஆங்கிலத்தில் Hello! என்று அழைப்பதற்கு ஈடாக சமஸ்க்ருததில் भो! (போ4) என்று அழைப்பர்.
भवान् नमस्ते! मम नाम राम: | [ப4வாந் நமஸ்தே! மம நாம ராம:]
[ப4வாந் – ஐயா நமஸ்தே! – வணக்கம் மம நாம – எனது பெயர் ராம: – ராமன்]
எதிரிலிருப்பவர் பெண்ணாக இருந்தால்
भवति नमस्ते| मम नाम राम: | [ப4வதி நமஸ்தே! மம நாம ராம: |]
ஒருவருடைய பெயரை கேட்க,
भवत: / भवत्या: नाम किम् ? [ [ப4வத: / ப4வத்யா: நாம கிம்? ]
அவர் சிறியவராக இருந்தால்,
तव नाम किम्? [தவ நாம கிம்?]
எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க
भो! कथम् असि? [போ4! கத2ம் அஸி? ]
நல்லது, ஆங்கிலத்தில் Very good என்று சொல்வதற்கு साधु [ஸாது4] என்று சொல்லலாம்.
நல்லது அல்ல – Not good என்று சொல்ல असाधु [அஸாது4] என்று சொல்லி விடலாம்.
ஒருவரை சந்தித்துவிட்டு விடைபெறும் பொழுது
पुनर्मिलाम: – [புனர்மிலாம:] – மீண்டும் சிந்திப்போம்
धन्यवाद: – த4ன்யவாத3: – நன்றி
என்று சொல்லலாம்.
அடுத்த பகுதிகளில் வார்த்தைகள் – வாக்கியங்கள் அமைக்கும் முறை குறித்து காணலாம். உங்களுக்கு இந்த பகுதியில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, தவறுகள் சுட்டிக்காட்ட விரும்பினாலோ மறுமொழி பகுதியில் தெரிவிக்கவும்.
Pls add sanskrit words in tamil fonts
\\पुनर्मिलाम: [மீண்டும் சிந்திப்போம்]\\
\\धन्यवाद: [நன்றி]\\
it is tamil meening but what is the voice pronensation of tamil.
पुनर्मिलाम:
R. Natarajan
மிக நல்ல முயற்சி. பாராட்டுகள்!
சம்ஸ்கிருத வார்த்தைகளின் தமிழ் ட்ரான்ஸ்லிடரேஷன்களையும் பிராக்கெட்டுகளில் வெளியிட்டால் பலன் இன்னமும் பூர்த்தியாகக் கிடைக்கும்,
உதாரணமாக, ‘भवत: / भवत्या: नाम किम् ?’ (பவத: பவத்யா நாம் கிம் ?’)
சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்வது மேலும் சுலபமாகும் என்பது அடியேனின் கருத்து. செய்வீர்களா?
தமிழ் ட்ரான்ஸ்லிடரேஷன் சேர்க்கப் பட்டு விட்டது. வருகை தந்து சுட்டிக் காட்டியதற்கு நன்றி. 🙂
அட்டகாசம், ஸ்ரீகாந்த்! என் சஜெஷனை உடனேயே இம்ப்ளிமெண்ட் செய்ததற்கு நன்றி.
உருப்படியாக ஏதாவது செய்வோம். (’உக்கும்’ என்று என் மனைவி முனகுவது காதில் கேட்கிறது. அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள்!
நீங்கள் பழைய மரத்தடி / ராகாகி நண்பர் என்பது போனஸ் நியூஸ்.
மறு-சந்திப்பில் மிக்க சந்தோஷம். லெட்ஸ் மூவ் ஃபார்வார்ட்!
வணக்கம் சார்! தங்களின் வடமொழி பாடம் எளிதாக உள்ளது. மிகவும் நன்றி!
நான் படித்தது தமிழ் வழி பள்ளி கூடத்தில். நான் மற்ற மொழிகளில் தேர்ந்தவனும் கிடையாது. சில வார்த்தைகளை உச்சரிக்க கடினமாக உள்ளது. தவறாக இருக்குமோ என சந்தேகம் தோன்றுகிறது. அகவே தயவு செய்து வார்த்தைகளின் முடிவில் ஒலி பெட்டிகளை(flash box) இணைத்தால் வார்த்தைகளை எளிதாக, பயமின்றி உச்சரிக்க முடியும் என நினைக்கிறேன்.
நன்றி.
ஆமாம், அடுத்த பகுதி எப்பொழுது வரும்? ஏனென்றால் முதல் பகுதி வந்து ஒரு மாதம் ஆகிவிட்டதே.
Pingback: செயலில் இறங்குவோம் “க்ரியாபத3ம்” ! | Sangatham
கலை வணக்கம் என் பெயர் ந.கோ .இரா.திரு வேங்கட பூபதி மிகவும் சந்தோசம் இந்த சங்கதம் வலைத்தளம் எனக்கு ஒரு குருவை போல் தன்யவாத்:
Sir,
The site is a superb one !!
டியர் சார்
இன்றுதான் இந்த வலைதளத்தை நான் பார்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. எனது முயற்சிக்கு இறைவனின் பரிசாக இதை உணர்கிறேன். என்னை உயர்த்திக்கொள்ள இது உதவும்.
ஒரு விண்ணப்பம் சம்ச்க்ரித்த உச்சரிப்புடன் (ஆடியோ) அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறன்.
நன்றி
बहु सम्यक अस्ति सर्वे विषया: | उत्तम प्रयत्न: | हार्दिक शुबाशाया: |
रमा
சமஸ்க்ருதம் படிக்க வைபுகொடுதமிகு நன்றி
संस्कृते लकारा: कठिना: सन्ति | तस्य विवरणं हिंदी भाषया अथवा तमिल भाषया ददातु| प्रत्येकवाक्यम् उदाहरणेंन लिखतु|
“மீண்டும் சந்திப்போம் ” என்றிருக்க வேண்டும். “சிந்திப்போம் ” என்று உள்ளது.
இன்றுதான் இந்த தளத்தை பார்த்தேன். சில மாதங்களுக்கு முன் சமஸ்க்ரித்த பாரதியில் சேர்ந்தேன். இங்கே எனக்கு கிடைத்தவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
விநோத்ராஜன் அவர்களின் தனி வலை பக்கங்களில் எனக்கு கிடைத்த கிரந்த பாடங்கள் எனக்கு மேலும் பயனுள்ளதாக உள்ளது. தேவநாகரி மற்றும் கிரந்த எழுத்து வடிவங்களையும் பயின்று வருகிறேன். விநோத்ராஜன் அவர்களுக்கு நன்றி கூற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.
மேலும் இங்கே கருத்து கூறும் அனைத்து நண்பர்களும் தமிழ் மற்றும் தேவநாகரி தட்டச்சினை பயின்று கொள்ள வேண்டுகிறேன்.
கிரந்த லிபியிலும் தட்டச்சு செய்ய வசதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ஏனெனில் தமிழ், தெலுகு, மலையாளம் தெரிந்தவர்கள் எளிதாக கிரந்தத்தை கற்று கொள்ள இயலும். கிரந்தம் தெரிந்தால் தேவநாகரி மற்றும் பிற தெலுகு கன்னட மலையாள லிபியும் எளிதில் கற்கலாம்.
पुनर्मिलाम: – [புனர்மிலாம:] – மீண்டும் சிந்திப்போம் should be replaced by पुनर्मिलाम: – [புனர்மிலாம:] – மீண்டும் சந்திப்போம்
Thank you. Great site to learn Samskrit through Tamil.
Ramanathan
நமஸ்தே. இன்நைய இனிய காலைப் பொழுதில் நல் வரவைப் படித்தேன் அது எனக்கு நல்வரவாக அமைந்தது.தன்யவாதக. புனர்மிலாம. எழுத்துக்கள் தொியாததால் தமிமிலேய எழுதியுள்ளேன்.
பவாந்/,,பவதி -நமஸ்தே. ஸுப்ரபாதம்.