செயலில் இறங்குவோம் “க்ரியாபத3ம்” !

ஸுஸ்வாக3தம்! போ4! கத2ம் அஸி?
[सुस्वागतम्! भो कथम् असि?]

அஹம் குசலீ [अहम् कुसली]   – I’m fine 🙂

வடமொழி கற்க விருப்பத்துடன் வந்திருப்பவர்களுக்கு வந்தனம்.  முந்தைய பதிவில் ஒருவரை ஒருவர் வரவேற்று அறிமுகப் படுத்திக் கொள்வதைப் பார்த்தோம். இந்த பகுதியில் வினைச்சொல் அமைப்பு பற்றியும், “ராமன் வருகிறான்”, “சீதா போகிறாள்” போன்ற  சில சுலபமான வாக்கியங்கள் அமைப்பது குறித்து காண்போம்.

வினைச்சொற்களை உபயோகிக்க சில அடிப்படைகள் தேவை. அதாவது “படிக்கிறான்” என்ற சொல் படித்தல் என்னும் செயல், அச்செயலை ஒரே ஒருவர் செய்கிறார், படிப்பவர் ஆண், செயல் நிகழ்காலத்தில் நடைப் பெறுகிறது என்று இத்தனை தகவலும் நமக்கு கிடைக்கிறது.

இத்தனை தகவலையும் சமஸ்க்ருத மொழியில் எப்படி வெளிப்படுத்துவது?

சற்று விரிவாக பார்ப்போம்.

வடமொழியில் ஒவ்வொரு வினைச்சொல்லும் ஒரு வேர்ச் சொல்லிலிருந்து உருவாகிறது. இந்த வேர்ச்சொல்லுக்கு தா4து (धातु) என்று பெயர். ஒரு செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை வசன: (वचन:) எனப்படும். தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை ஆகிய இடங்கள் வடமொழியில் முறையே, உத்தம புருஷ:, மத்யம புருஷ:, பிரதம புருஷ: எனப்படுகிறது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருமை – பன்மை (singular & plural) மட்டுமே இருக்கின்றது – வடமொழியில் ஒருமை – இருமை – பன்மை (singular, dual and plural ) என்று மூன்று வகை உண்டு.  இதற்கு ஏகவசன: (एकवचन), த்3விவசன: (द्विवचन:), ப3ஹு வசன: (बहुवचन:)  என்று பெயர்.

முதலில் நிகழ்கால வினைச் சொற்களை பார்ப்போம்.  நிகழ் காலத்துக்கு, வர்த்தமானகால: (वर्तमानकाल:)  என்று பெயர். பாணினி இதை லட் லாகார: (लट् लकार) என்று அழைத்தார்.

நிகழ்காலத்தில் வினைச்சொற்களை அமைப்பதற்கு இந்த ஃபார்முலாவை உபயோகிக்கலாம்:

ஏகவசன:, த்3விவசன:, ப3ஹு வசன:
பிரத2ம புருஷ:

प्रथम पुरुष:

தி (ति) த: (तः) அந்தி (अन्ति)
மத்3யம புருஷ:

मध्यम पुरुष:

ஸி (सि) 2: (थः) 2 (थ)
உத்தம புருஷ:

उत्तम पुरुष:

மி (मि) வ: (वः) ம: (मः)

சில வினைச்சொற்கள்

1. பட்2 [पठ्] = படித்தல்  [பட்2 என்பது தா4து]

ஏகவசன: (एकवचन:) த்3விவசன: (द्विवचन:) ப3ஹுவசன: (बहुवचन:)
பிரத2ம புருஷ:

प्रथम पुरुष:

पठति பட2தி (படிக்கிறான்(ள்)) पठतः பட2த: (இருவர் படிக்கிறார்) पठन्ति பட2ந்தி (பலரும் படிக்கிறார்கள்)
மத்3யம புருஷ:

मध्यम पुरुष:

पठसि பட2ஸி  படிக்கிறாய் पठथः பட22: (இருவரும் படிக்கிறீர்) पठथ பட22 (படிக்கிறீர்கள்)
உத்தம புருஷ:

उत्तम पुरुष:

पठामि படா2மி (படிக்கிறேன்) पठावः படா2வ: (இருவரும் படிக்கிறோம்) पठामः படா2ம: (எல்லோரும் படிக்கிறோம்)

2. க3ம் [गम्] = போதல் [க3ம் என்பது தா4து]

ஏகவசன:  (एकवचन:) த்3விவசன:  (द्विवचन:) பஹு வசன: (बहुवचन:)
பிரத2ம புருஷ:

प्रथम पुरुष:

गच्छति கச்ச2தி (போகிறான்(ள்)) गच्छतः கச்ச2த: (இருவர் போகிறார்) गच्छन्ति கச்ச2ந்தி (பலரும் போகிறார்கள்)
மத்3யம புருஷ:

मध्यम पुरुष:

गच्छसि கச்ச2ஸி – போகிறாய் गच्छथः கச்ச22: (இருவரும் போகிறீர்) गच्छथ கச்ச22 (போகிறீர்கள்)
உத்தம புருஷ:

उत्तम पुरुष:

गच्छामि கச்சா2மி (போகிறேன்) गच्छावः கச்சா2வ: (இருவரும் போகிறோம்) गच्छामः கச்சா2ம: (எல்லோரும் போகிறோம்)

வினைச்சொற்களே இடத்தையும் குறிப்பதால் நான் படிக்கிறேன் (अहम् पठामि) என்று சொல்ல தேவை இல்லை – படிக்கிறேன் (पठामि) என்று சொன்னாலே அதை செய்வது “நான்” என்பது விளங்கி விடுகிறது.

சில முக்கிய குறிப்புகள் உங்கள் கவனத்திற்கு:

  • சமஸ்க்ருத மொழியில் உச்சரிப்பு மிகவும் முக்கியம்.   ஆகவே முடிந்த வரை பிரபலமாக உள்ள  நாகரி எழுத்து முறையை கற்றுக் கொள்வது வடமொழியை சரியான உச்சரிப்புடன் எழுத படிக்க உதவும்.
  • சமஸ்க்ருதத்தைப் படிக்கும் போது,  கவனித்திருக்கலாம் – அதில் ஆங்கிலத்தைப் போல கமா, காற்புள்ளி, மேற்கொள் ” ” போன்ற குறிகள் இல்லை.
  • சில வார்த்தைகளுக்கு முடிவில் முக்கால் புள்ளி  :  (colon)  வரும் – இதற்கு விசர்க்கம் (विसर्ग:) என்று பெயர். இது வார்த்தையின் கடைசியில் வந்தால், அதற்கு முந்தைய எழுத்து அ-வில் முடிந்தால் அஹ என்றும், ‘ஆ’வில் ஆஹா என்றும் ‘இ’ யில் முடிந்தால் இஹி என்றும் உ-வில் முடிந்தால் உஹு என்றும் உச்சரிக்கப் படுகிறது. உதாரணம்: ராம: என்பது படிக்கும் போது ராமஹ என்று படிக்கப் படுகிறது.  சீதா: என்பது சீதாஹா,  நதி: என்பது நதிஹி, பானு: என்பது பானுஹு என்று படிக்க வேண்டும்.
  • நாகரியில் வாக்கியங்களைப் படிக்கும்போது இந்தியைப் போல கடைசி எழுத்தை ஒற்றாக படிக்கக் கூடாது. राम என்பதை ராம என்றுதான் படிக்க வேண்டும். இந்தியைப் போல ராம் என்று படிக்கக் கூடாது.
  • சமஸ்க்ருத வினைச்சொற்கள் ஒரே சமயத்தில், அந்த செயல், (கடந்த – நிகழ் – எதிர்) காலம், தன்மை-முன்னிலை-படர்க்கை ஆகியவற்றை ஒருங்கே சுட்டும். ஆனால் ஆண்-பெண் ஆகிய எந்த பாலாக (லிங்க3ம் என்று சமஸ்க்ருதத்தில் பெயர்) இருந்தாலும் அதற்கு வினைச்சொற்கள் பொதுவாகவே வரும் – அதாவது தமிழில் போகிறாள் – போகிறான் என்று போதல் என்னும் செயல் அதை செய்வது ஆணா பெண்ணா என்று சுட்டுவது போல் சமஸ்க்ருதத்தில் கிடையாது.

18 Comments செயலில் இறங்குவோம் “க்ரியாபத3ம்” !

  1. Pingback: சமஸ்க்ருதத்தில் தாதுக்கள் | Sangatham

  2. v subramanian

    இதை பிரிண்டர் friendly format இல் கொடுத்தால் உபயோகமாக இருக்கும். முடியுமா?

  3. Pingback: வேற்றுமை உருபுகள் | Sangatham

  4. வேங்கடசுப்ரமணியன்

    उत्तमं.
    உங்கள் பதிவுகள் மிக்க மதிப்பு மிக்கவை. ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன். இது நாள் வரை கீதை உரையில் இருந்தே சொற்ப சமஸ்கிருதம் கற்றிருந்தேன். ஆங்கில வழி இலக்கண நூல்கள் பாடாய்ப் படுத்தின. இதோ தமிழிலேயே கற்க அற்புத வழி. நன்றி
    வேங்கடசுப்ரமணியன்

  5. कृष्णकुमार्

    பல ஸம்ஸ்க்ருத நூல்களை வ்யாக்யானம் வழியே படித்திருந்தாலும் முறையான ஸம்ஸ்க்ருத பாடம் படித்ததில்லை. தங்களது வழிமுறை மிக சுலபமாக உள்ளது. धन्यॊस्मि.

  6. Purushothaman

    மிக மிக அருமையாக இருக்கிறது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது என்னைப்போல் சமஸ்க்ரிதம் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு மிக மிக உபயோகமாக உள்ளது

  7. ramakrishnan

    dear sir,

    I want to learn sanskrit thro tamil. The lessons given in this web site is very useful.

    Kindly guide for the lesson plan for learning to write the letters and their pronunciation

    namaskaram

    ramakrishnan h

  8. P.Jayaraman

    google -ல் இருப்பது போல சம்ஸ்க்ருதம் to இங்கிலீஷ் மற்றும் தமிழ் மொழி மாற்றி (translator) – உதாரணத்திற்கு, “உவாச” என்றால் “கூறியதாவது” என்று தமிழிலும், “said that” என்று ஆங்கிலத்திலும் வந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். நானும் அப்படிப்பட்ட மொழி மாற்றியைக் கண்டுபிடிக்க என்ன முயன்றாலும் இயலவில்லை. தயவு செய்து நீங்களாவது உதவவும். என்னுடைய மின்னஞ்சலுக்கு பதில் எழுதவும்.

  9. v.subramanian

    Samskritha பாரதி வெளியுட்டுள்ள ஆங்கில தமிழ் புஸ்தகங்கள் சென்னையில் எங்கே கிடைக்கும் ப்ளீஸ்.

  10. vasanthasyamalam

    மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் இருக்கிறது . வாழ்த்துக்கள்.

  11. vasanthasyamalam

    அடுத்த பாடங்களை எப்பொழுது பார்க்கலாம் ? ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  12. vasanthasyamalam

    पाणिनीय सूत्रे एकः संशयः | ‘नश्च अपदान्तस्य झलि’ स्पष्टीकरोतु कृपया|

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)