காலம் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் நிகழ்காலம் என்று ஒன்றை சுட்டிக் காட்டுவது மிகக் கடினம். ஏனெனில் இந்த நொடி, இந்த க்ஷணம் என்று கூறும் போதே அந்தக் கணம் கடந்து சென்று இறந்த காலம் ஆகிவிடுகிறது. மனிதர்களிடையே உருவான மொழிகள் ஒவ்வொன்றிலும் இந்த காலத்தை, ஒரு செயல் நடைபெற்ற தருணத்தை வெளிப்படுத்த பலவிதமான முறைகளில் வெளிப்படுத்த வார்த்தைகள் உருவாகின்றன.
சம்ஸ்க்ருதம் போன்றதொரு செம்மையான மொழியில் செயல் நடைபெற்ற காலத்தைக் குறிப்பதொடு (Tenses) மட்டும் நின்று விடாமல் அதனோடு ஆணை, ஆசி, எதிர்பார்ப்பு போன்ற செயலுக்கு பின்னுள்ள மனநிலையையும் (Moods) குறிப்பிடும் வகையில் வினைச்சொல் அமைப்பு அமைந்துள்ளது.
சம்ஸ்க்ருதத்தில் மொத்தம் ஏழு விதமான காலங்கள் (Tenses) உள்ளன. இது தவிர ஒரு செயலைப் பற்றிச் சொல்லும்போது என்ன விதமான மனநிலையுடன் நிகழ்த்தப் படுகிறது என்பதையும் வெளிப்படுத்தும் விதமாக மூன்று விதமான மனநிலைகள் (Moods) உள்ளன. ஆக சம்ஸ்க்ருதத்தில் ஒரு செயலைப் பற்றி கூறும்போது மொத்தம் பத்து விதமாக கருத்தை வெளிப்படுத்த இயலும்.
वर्तमाने लट् (3.2.123), परोक्षे लिट् (3.2.115), अनद्यतने लुट् (3.3.15), लृट् शेषे च (3.3.13), लिङ्र्थे लेट् (3.4.7), विधिनिमन्त्रणाऽमन्त्रणाधीष्टसंप्रश्नप्रार्थनेषु लिङ् (3.3.161), लोट् च (3.3.162), अनद्यतने लङ् (3.2.111), आशिषि लिङ् लोटौ (3.3.173), लुङ् (3.2.110), लिङ्निमित्ते लृङ् क्रियाऽतिपत्तौ (3.3.139) ஆகிய பாணிநீய சூத்திரங்கள் காலங்களைப் பற்றியவை.
பாணினியின் இலக்கண சூத்திரங்களில் மிகச்சுருக்கமாக இந்த காலங்களைப் பற்றி குறிக்க வேண்டி, இவற்றின் பெயர்களை இறந்தகாலம் (भूतकाल:), நிகழ்காலம் (वर्तमान काल:) என்று நீண்ட பெயர்களாகச் சொல்லாமல் இரண்டே எழுத்து பெயர்களாக லட், லங் என்று பெயரிட்டுள்ளார். இவை அனைத்தும் ல என்கிற எழுத்தில் துவங்குவதால் லகாரங்கள் என்று பெயர் பெறுகின்றன. பாணினி இலக்கணம் தவிர்த்த வேறு சம்ஸ்க்ருத இலக்கண முறைகளில் இவ்வாறாக காலங்களுக்கு ஈரெழுத்து பெயர்கள் இடும் முறை இல்லை.
லட் (நிகழ்காலம்), லிட் (நேரில் பார்க்காத இறந்த காலம்), லங் (இன்றைக்கு முன் நிகழ்ந்த இறந்த காலம்), லுங் (சாமான்ய இறந்த காலம்), ல்ருட் (சாமான்ய எதிர்காலம்), லுட் (இன்றல்லாத எதிர்காலம்), ல்ருங் (நிபந்தனை அடிப்படியிலான எதிர்காலம்) ஆகிய காலங்களும், லேட் (விருப்பம்), லிங் (விதி லிங், ஆஸி லிங் – ஆணை, கோரிக்கை போன்றவை), லோட் (ஏவல்/கோரிக்கை) ஆகிய மனநிலைக் குறிப்புகளும் (moods) ஆக லகாரங்கள் அமைந்துள்ளன.
லங், லிங் என்றெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது கடினம், அதை சுலபமாக்க ஒரு வழி உண்டு. அதாவது அ, இ, உ, ரு, ஏ, ஒ ஆகிய எழுத்துக்களுடன் ல்-ஐ முதலிலும், ட்-ஐ இறுதியிலும் சேர்க்க ஆறு காலங்கள் கிடைத்துவிடும். (லட், லிட், லுட், ல்ருட், லேட், லோட்). அதே போல அ, இ, உ, ரு வுடன் ல்-ஐயும், ங்-ஐயும் முறையே முன்னும் பின்னும் இணைக்க மீதமுள்ள நான்கும் கிடைக்கும் (லங், லிங், லுங், ல்ருங்).
மேலும் சுலபமாக நினைவில் வைக்க எல்லா லகாரங்களையும் தொகுத்து கூறும் விதமாக ஸ்லோகம் ஒன்று உண்டு:
लट् वर्तमाने लेट् वेदे भूते लुङ् लङ् लिटस्तथा ।
विध्याशिषौ लिङ्लोटौ लुट् लृट् लृङ् च भविष्यतः ॥
***
லட் (वर्तमाने लट् ) – Present
நிகழ்காலத்தைக் குறிக்கும் லட் லகாரம். உதாரணம்: देवदत्त: गच्छति (தேவதத்தன் செல்கிறான்) என்பன போன்ற வாக்கியங்கள். அதே போல என்றும் மாறாத தன்மையுடையவற்றைச் சொல்லும் போதும் லட் லகாரம் உபயோகிக்கப் படுகிறது. உதாரணம்: पर्वता: सन्ति | आत्मा अस्ति |. மலைகள் எத்தனையோ காலங்களாக இருக்கின்றன. அவற்றைப் பற்றி சொல்லும் போது லட் லகாரமே உபயோகிக்கப் படுகிறது. வர்த்தமானம் என்பது இருப்பு, தற்சமயம் இருப்பது என்று பொதுவாக அர்த்தம். இதனை நான்கு விதமாக பிரிக்கிறார்கள்:
प्रवृत्तोपरतश्चैव वृत्तविरत एव च
नित्यप्रवृत्त: सामीप्यो वर्तमानश्चतुर्विध: ||
- प्रवृत्तोपरत – முன்பே துவங்கி தற்சமயம் தொடருகிற நிலை உதா: मांसं न खादति
- वृत्तविरत – தற்சமயம் நடைபெற்றுக் கொண்டு, இனியும் தொடர்கிற நிலை உதா: बाला: क्रीडन्ति
- नित्यप्रवृत्त: – எப்போதோ துவங்கி இனி எக்காலத்துக்கும் தொடரும் நிலை உதா: मेरु: तिष्ठति
- सामीप्य: – இன்னும் சில நொடிகளில் அடையப் போகிற நிலை உதா: ओदन: सिद्ध: भवति
***
லிட் (परोक्षे लिट्) – Perfect
பேசுபவர் நேரில் பார்க்காத, இறந்த காலத்தில் நடந்த, ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறும்போது அதற்கு லிட் லகாரம் உபயோகிக்க வேண்டும்.
சகார (चकार) – அவன் செய்தான்,
பபூவ (बबूव) – ஆனான் ஆகியவை லிட் வகையை சேர்ந்தவை.
रामो नाम: राजा बभूव |
இதில் தன்னிலை வினைச்சொற்கள் அமையுமா என்ற விசாரணை இலக்கண ஆசிரியர்களால் எழுப்பப் பட்டு பதிலும் சொல்லப் படுகிறது. ஒருவர் தன் நினைவோடு ஒரு நிகழ்ச்சியை பார்க்காதவராகவோ, செய்யாதவராகவோ இருக்கக் கூடும். சுயநினைவின்றி ஒரு செயலை செய்திருக்கக் கூடும். அதைப் பற்றி பேசுகையில் தன்னிலையில் லிட் பயன்படுத்த முடியும்.
ஸுப்தோ (அ)ஹம்ʼ கில விலலாப (सुप्तो ऽहं किल विललाप)
தூங்கும்போது நான் புலம்பினேன்
இங்கே புலம்பியது சுயநினைவில் அல்ல என்பதால் பரோக்ஷ லிட் காலத்தில் அடங்கும்.
ஒருவர் தான் செய்த செயலை மறுக்கும் போதும் லிட் லகாரம் உபயோகிக்கலாம்.
நா(அ)ஹம்ʼ கலிங்கா³ன் ஜகா³ம| (नाऽहं कलिङ्गान् जगाम।)
நான் கலிங்கத்துக்கு போனதே இல்லை.
ஜகாம என்பது தன்னிலையில் உள்ள லிட் லகார சொல்.
***
லங் (अनद्यतन भूते लङ्) – Imperfect
இன்றைய நாள் தவிர்த்த இறந்த காலம். ஹ்ய: வ்ருʼஷ்டி: அப⁴வத் |(ह्य: वृष्टि: अभवत् |) நேற்று மழை பெய்தது.
அதே சமயம், இன்றோ அல்லது நேற்றோ என்று சேர்த்து சொல்லும் பொது லங் லகாரம் வராது, லுங் வரும். அதே போல அண்மையில் நிகழ்ந்த செய்தி, அது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருப்பின், பேசுபவர் நேரில் பார்க்காத போதும் அது லங் லகாரத்திலேயே அமையும்.
த³ஸ²ரத²: நாம ராஜா அப⁴வத் | (दशरथ: नाम राजा अभवत् |)
தசரதர் என்ற ராஜா இருந்தார்.
பா³ல: து³க்³த³ம் அபிப³த் | (बाल: दुग्दम् अपिबत् | )
குழந்தை பால் அருந்தியது.
பொதுவாக இறந்த, நிகழ், எதிர் காலங்கள் தான் பல மொழிகளில் காணப்படுகிறது. சம்ஸ்க்ருதத்தில் தான் இன்று நடந்த நிகழ்வு (अद्यतन), இன்று அல்லாத (अनद्यतन) என்று இரு வேறுபாடுகள் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் உண்டு. அதாவது இன்று அல்லாத இறந்த காலம், இன்றைய இறந்த காலம், இன்று அல்லாத எதிர்காலம், இன்றைய எதிர்காலம் என்று நான்கு வகை உண்டு.
***
லுங் (भूत सामान्ये लुङ्) – இறந்த காலம்
கண்ணால் காணாத இறந்த காலம், இன்றைய நாள் தவிர்த்த இறந்த காலம் என்று ஏற்கனவே இரண்டு வகை பார்த்தோம். இரண்டிற்கும் பொதுவாக, எல்லா இறந்தகாலங்களையும் குறிக்க உதவுவது லுங் லகாரம். இருந்தும் இந்த வகை வினைச்சொற்களை அதன் அமைப்பை புரிந்து கொள்வது கடினம் என்பதால் அதிகம் உபயோகிக்கப் படுவது இல்லை.
அத்³ய வ்ருʼஷ்டி: அபூ⁴த் | अद्य वृष्टि: अभूत् |
இன்று மழை பெய்தது.
ராம: நாம ராஜா அபூ⁴த் | राम: नाम राजा अभूत् |
ராமன் என்ற ராஜா இருந்தார்.
***
லுட் (अनद्यतन भविष्यति लुट्) – First Future
இன்றைய நாளைத் தவிர்த்த எதிர்காலம். பொதுவான எதிர்காலம் ல்ருட் லகாரத்தில் குறித்தாலும் இன்றைய நாளைத் தவிர்த்த ஒரு தினத்தில் நடப்பதை குறிக்க இந்த லுட் லகாரம் வரும். श्व: वृष्टि: भविता |
அதே சமயம் ஒரே சொல்லில் இன்றைக்கோ நாளைக்கோ என்று இரு தினங்களும் குறிக்கும் பொது லுட் லகாரம் பயன்படுத்தப் படமாட்டாது – अद्य: श्व: वा गमिष्यति | (இன்றோ அல்லது நாளையோ என்பதில் லுட் லகாரம் வாராது).
மேலும் எதிர்கால வருத்தத்தினைக் குறிக்கவும் லுட் லகாரம் வரும்.
इयं नु कदा गन्ता, या एवं पादौ निदधाति।
இயம்ʼ நு கதா³ க³ந்தா, யா ஏவம்ʼ பாதௌ³ நித³தா⁴தி|
இப்படி மெதுவாக நடப்பவள் எப்போது போவாள்?
अयं नु कदा ऽध्येता, य एवम् अनभियुक्तः।
அயம்ʼ நு கதா³ (அ)த்⁴யேதா, ய ஏவம் அனபி⁴யுக்த:|
இப்படி கவனமில்லாமல் இருப்பவன் எப்போது படிப்பான்?
***
ல்ருட் (भविष्यति सामान्ये लृट्) – Second Future
எல்லா எதிர்கால (Simple future) வினைகளுக்கும் பொதுவாக உபயோகிக்கப் படும் லகாரம் இது.
உதா: श्व: गुरुवासर: दीपावली भविष्यति |
***
ல்ருங் (हेतुहेतुमद् भविष्यति लृङ्) – Conditional
ஒரு செயல் நடைபெற்றிருந்தால் என்கிற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி பேசுவது. பொதுவாக यदि… तर्हि ஆகிய வற்றுடன் இணைந்தே இந்த கால வினைகள் இடம் பெரும்.
உதா: यदि वृष्टि: अभविष्यत् तर्हि सुभिक्षम् अभविष्यत् |
***
லோட் – (लोट्) – Imperative
ஆணை அல்லது கோரிக்கை
ஆணை, கோரிக்கை ஆகிய மனநிலைகளில் லோட் லகாரம் உபயோகிக்கப் படுகிறது. இது லிங் லகாரத்தைப் போன்றே அமைந்தாலும் சிறு வேறுபாடுகளே இவற்றின் நடுவில் உள்ளது.
ப⁴வான் க்³ராமம்ʼ ஆக³ச்ச²து (भवान् ग्रामं आगच्छतु)
நீங்கள் கிராமத்துக்கு வாருங்கள்
அத்ர திஷ்ட²து (अत्र तिष्ठतु)
இங்கே இருங்கள்
***
விதி⁴நிமந்த்ரணாமந்த்ரணாதீ⁴ஷ்டஸம்ப்ரஸ்²நப்ரார்த²நார்தே²ஷு லிங் – (विधिनिमन्त्रणामन्त्रणाधीष्टसंप्रश्नप्रार्थनार्थेषु लिङ्) – Potential & Benedictive
விதி, அழைப்பு (நிமந்தரண), அனுமதி (ஆமந்தரண), மரியாதையுடன் விருப்பத்தை தெரிவித்தல் (அதீ⁴ஷ்ட), வினா எழுப்புதல் (ஸம்ப்ரஸ்ந), வேண்டுதல் (ப்ரார்தநா) ஆகிய மனநிலைகளில் உபயோகிக்கப் படுவது லிங் லகாரம்.
இதில் இரண்டு வகை உண்டு.
- விதி லிங் (विधि लिङ्) ஆணை, கோரிக்கை, வேண்டுதல் ஆகியவை உதா: भवान् मम सहचरो भवेत् | – நீங்களே என் நண்பராக ஆகட்டும்.
- ஆசி லிங் (आशिष् लिङ्) – ஆசீர்வாதம் செய்யும் மனநிலை உதா: तव कल्याणं भूयात् | உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்.
***
லேட் (लिङर्थे लेट्) – Subjunctive (is used only in vedas)
வேதத்தில் விருப்பம்/ஆசீர்வாதம் செய்வது போன்ற மன நிலையில் உபயோகிக்கப் படுகிறது. லௌகிக சம்ஸ்க்ருதத்தில் இதன் பயன்பாடு இல்லை.
பதாதி வித்³யுத் (पताति विद्युत् |) – மின்னல் விழட்டும்
ஜீவாதி ஸ²ரத³: ஸ²தம் (जीवाति शरद: शतम्) – நூறு ஆண்டு வாழட்டும்
***
இவ்வாறு ஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை – முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை, இருமை, பன்மை என தொண்ணூறு விதங்களில் மாறுகிறது. இவ்வளவு கடினம் எதற்கு என்றால், அதுதான் மொழியின் உச்சம். அதன் அழகு. ஒரு செய்தியை வெளிப்படுத்த இத்தனை வாய்ப்புகளை கொட்டி கொடுக்கிறது இந்த மொழி. புதிய புதிய சொற்கோவைகள் உருவாவதற்கு ஏற்ற மொழியாக, எல்லா மொழிகளுக்கும், எல்லாக் காலத்திலும், எல்லா வகை சிந்தனைகளுக்கும் உதவுவதாக இருப்பதே சம்ஸ்க்ருதத்தின் சிறப்பு.
மிக சிறந்த கட்டுரையை வழங்கிய தளத்துக்கு மிக்க நன்றி. கட்டுரையை எழுதிய ஆசிரியரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் நல்லது. பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் பெயர் குறிக்கப்படாத அந்த ஆசிரியருக்கும் நமது பணிவான வணக்கங்களும், நன்றியும் போய்ச் சேரட்டும். படிக்க மிக நன்றாக இருக்கிறது. உங்களுக்கு ஞான மூர்த்தியாம் தந்தைக்கு உபதேசித்த குமர குருபரன் மேலும் மேலும் அருள்வானாக. எங்களுக்கும் இதுபோன்ற அற்புதமான கட்டுரைகளை மேலும் மேலும் படித்து மகிழ எல்லாம் வல்லான் அருள்புரியட்டும்.
சிறந்த பதிவு. மிகவும் அருமையான தளம். மென்மேலும் சிறக்க இன் வாழ்த்துக்கள்.
Namaskaram. I happen to be the editor of the monthly bi-lingual magazine Brahmintoday, published from Chennai for t5he past 124 months and the 125th Spl issue is to be released in Mumbai on 13th July 2014. Pl visit brahmintoday.org to know more.
I would like to publish this most useful article in that spl issue, of course with your kind permission and due acknowledgement. kindly reply
vasan
Editor Brahmintoday.
தமிழுக்குமுதல்இலக்கணம்வகுத்தஆரியமைந்தன்அகஸ்த்தியரின்முதற்
சங்கம்/தொல்காப்பியரின்இடைச்சங்கம்/நக்கீரரின்கடைச்சங்கம்ஆகிய
எவருக்கும்/அதற்குப்பின்தோன்றியபலதமிழறிஞர்கள்,கவிச்சக்கரவர்த்திகள்
(கம்பன்,கபிலர்,வில்லிபுத்தூரார்,ஆழ்வார்கள்இன்னும்பலர்)ஆகியவர்கள்
எவருக்கும்”ஒப்பிலக்கணம்”படைப்பதற்குவேண்டியதமிழ்ஞானம்/தமிழ்ப்பற்று
இல்லையா?அதற்கானமுயற்சிமில்லையா?.”ஒப்பிலக்கணம்’’
என்றசொல்கூடஅந்ததமிழ்ச்சான்றோர்களின்படைப்புக்களில்பதிவு
செய்யப்படவில்லையே?ஆனால்கால்டுவெல்மட்டுமேன்ஒப்பிலக்கணம்’
படைக்கிறார்? இந்தியாவைபிரிப்பதற்காகப்படைத்தார் என்பது தெள்ளத்தெளிவு.
இருப்பினும்சில/பலகிருத்துவதிராவிடத்தமிழ்”ஒப்பிலக்கணம்” ஒப்பாரிவைத்து
கால்டுவெல்விழாயெடுத்தஇந்தச்சூழலில்கால்டுவெல்லின்ஒப்பிலக்கணம்இந்த
சமஸ்கிருதஇலக்கண முறையில் உள்ளதாயென்றுஆய்வுசெய்துவிளக்குமாறு
உங்களிடம் விண்ணப்பம்கோருகிறேன்.
மிகவும் பயனுள்ள கட்டுரை. சம்ஸ்க்ருத இலக்கணம் தமிழ் மொழி மூலமாக விளக்கப்பட்டால் நிச்சயமாக தமிழ் நாட்டில் நிலவி வரும் சம்ஸ்க்ருத எதிர்ப்பு விரைவில் தீரும் என்பது எனது தாழ்மையான எண்ணம். உங்கள் ஒப்பற்ற முயற்சி தொடரட்டும். நன்றி.
மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது காலங்கள் பற்றிய உரை. மிகக் நன்றி.
Good Article on understanding the 10 lakaras. I am a beginner and always had the difficulty to understand the tenses in sanskrit. This article is helpul.
P>S.Raman
I like it
Pingback: Thai phrases
I always had difficulty in memorizing the lakaras. Thanks for this article now I know how to do that. Simple and effective presentation. My organisms to the author.
உபயோகமான மற்றும் அருமையான பாடம்.
நன்றி. வணக்கம்.