சமஸ்க்ருதத்தில் சுமார் இரண்டாயிரம் வினைச்சொற்கள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப் படுகிறது. இதில் ஒவ்வொரு வினைச்சொல்லும் ஒரு வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிறது. வேர் சொல்லை தா4து, தா4து ரூபம் என்று சொல்வார்கள்.
இந்த வேர்சொல்லுடன் வேறு சில எழுத்துக்களை முன்னும் பின்னும் இணைப்பதன் மூலம், தன்மை முன்னிலை படர்க்கை போன்ற இடங்கள், ஒருமை – பன்மைகள், காலங்களைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் உருவாகின்றன. முந்தைய பதிவில் பட்2 என்ற தா4து – தி என்ற எழுத்தை சேர்ப்பதால் பட2தி என்று ஆகி “படிக்கிறான்” என்ற பொருளில் பிரத2ம புருஷ (படர்க்கை) ஏக வசனமாக (ஒருமை) வர்த்தமான காலத்தை (நிகழ் காலத்தை) குறிக்கிறது என்று பார்த்தோம்.
சமஸ்க்ருத வியாகரணத்தை (இலக்கணத்தை) இயற்றிய பாணினி இந்த இரண்டாயிரம் வினைச்சொல் கூட்டத்தின் தாதுக்களை பத்து வகையாக பிரித்திருக்கிறார். ஒரு வேர்ச்சொல் பகுப்பில் எந்த சொல் அதிகம் பயன்படுகிறதோ, எதில் தாது ரூபம் நன்கு வெளிப்படுகிறதோ அதையே அந்த தாது வகையின் பெயராக பாணினி வைத்திருக்கிறார். அவையாவன:
வேர்ச்சொல் | வினைச்சொல் | தாது வகையின் பெயர் | |
---|---|---|---|
1. | பு4(भू) | ப4வதி (भवति) – ஆகிறான்(ள்) | ப்4வாதி கணம் (भ्वादि गण:) |
2. | அத்3(अद्) | அத்தி (अत्ति) – உண்கிறான்(ள்) | அதா³தி³ க³ணம் (अदादि गण:) |
3. | ஹு(हु) | ஜுஹோதி (जुहोति) – கடவுளுக்கு பலியாக படைத்தல் | ஜுஹோத்யாதி3 கணம் (जुहोत्यादि गण:) |
4. | தி3வ் (दिव्) | தி3வ்யதி (दिव्यति) – விளையாடுகிறான்(ள்) | தி3வாதி3 கணம் (दिवादि गण:) |
5. | ஸு(सु) | ஸுனோதி/ஸுனோதே (सुनोति/सुनुते) கிரகித்தல் | ஸ்வாதி3 கணம் (स्वादि गण:) |
6. | துத்3(तुद्) | துத3தி (तुदति) தள்ளுதல் | துதா3தி3 கணம் (तुदादि गण:) |
7. | ருத்4(रुध्) | ருணாத்4தி3/ருந்தே4 (रुणद्धि/रुन्धे) ஆக்கிரமித்தல் | ருதா4தி3 கணம் (रुधादि गण:) |
8. | தன்(तन्) | தநோதி/தனோதே (तनोति/तनोते) விரித்தல் | தநாதி3 கணம் (तनादि गण:) |
9. | க்ரி(क्री) | க்ரீணிதே (क्रीणीते) வாங்குகிறான்(ள்) | க்ரி – ஆதி3 கணம் (क्री-आदि गण:) |
10. | சூர்(चुर्) | சோரயதி (चोरयति) திருடுகிறான்(ள்) | சுராதி3 கணம் (चुरादि गण:) |
இந்த தா4து வகைகளைக் குறித்துச் சொல்லும்போது பிரத2ம க3ண தாது, த்3விதீய க3ண தாது, த்ருதீய க3ண தாது, சதுர்த்த2 க3ண தாது இவ்வாறு எண்ணிக்கையை வைத்தே குறிப்பிடுவார்கள்.
சமஸ்க்ருத வினைச்சொற்களில் பெரும்பாலும் பிரத2ம க3ண தா4துவிலேயே வந்து விடுகின்றன. முக்கியமாக முதலாவது, நான்காவது, ஆறாவது மற்றும் பத்தாவது க3ண தா4துக்கள் மிக அதிகமான சொற்களைக் கொண்டுள்ளன.
இந்த தா4துக்களில் உட்பிரிவாக இரண்டு வகைகள் உண்டு (அதாவது ஒவ்வொரு தாதுவினுள்ளும் இரண்டு வகையான வினைச்சொற்கள்) – அவை ஆத்மனே பத3ம், பரஸ்மை பத3ம். சில சொற்கள் ஆதமனே பதத்தை சேர்ந்ததாகவும், சில சொற்கள் பரஸ்மை பத சொற்களாகவும், சில சொற்கள் இரண்டு வகையிலும் இருக்கும். இரண்டு வகையிலும் வரும் சொற்களை உப4ய பத3ம் என்று கூறுவார். உதாரணமாக நமதி – நமாமி என்பது பரஸ்மை பதம். வந்தே3 (உம்: வந்தே3 மாதரம்) என்பது ஆத்மனே பதம்.
ஒரு செயலின் விளைவு அடுத்தவர்களைச் சேர்ந்ததாக இருந்தால் பரஸ்மை பத3ம் என்ற வகுப்பிலும், செயலின் விளைவு சொல்பவரையே (தன்னையே) பாதித்தால் அது ஆத்மனே பத3ம் என்றும் கொள்ளலாம். ஆனால் இந்த வேறுபாடுகள் அதிகம் உபயோகிக்கப் படுவதில்லை.
சரி இந்த தா4து வகைகள் எப்படி உபயோகிப்பது?
ஒவ்வொரு தா4து வகையிலும், இன்னின்ன எழுத்துக்களைத்தான் முன்னும் பின்னும் சேர்க்க வேண்டும் என்று விதிகள் இருக்கின்றன. அதனால் தான் ஒரு தா4து வகையை தெரிந்து கொள்வதன் மூலமே என்ன வகையான விதங்களில் வார்த்தைகளை உருவாக்கலாம் என்று கணித்து விடலாம்.
உதாரணம்: பிரத2ம கண தாதுவில் பிரபலமான வார்த்தை ப4வதி என்பது. இதன் பொருள் ஆகிறான் (ள்), இருக்கிறான் (ள்) என்பதாகும். “ப4வதி” என்பது எப்படி வந்தது… இதன் வேர்ச்சொல் பு4. இந்த தா4துவுக்குரிய இலக்கண விதிப்படி உ என்று முடியும் தாதுக்கள் மற்ற எழுத்துக்களுடன் சேரும்போது ஓ என்று மாறும். ஒவ்வொரு வேர்ச்சொள்ளும் பிரதம புருஷ ஏக வசனத்தில் அதி என்கிற பின்னொட்டு சேரும் .
பு4 = பு4 = போ4+ அதி = போ4 அதி – ப4வதி
சமஸ்க்ருத சந்தி விதிகளின் படி ஓ வும் அ வும் சேர்ந்தால் அவ் என்று ஆகும் . அதனால் பு4 – என்பது ப4வதி என்று வினைச்சொல்லாக ஆகிறது.இதே போலத்தான் பட்2 + அதி = பட2தி என்று ஆகிறது.
சமஸ்க்ருதத்தில் இலக்கண – சந்தி விதிகள் மிகவும் சுவாரசியமானவை. அடுத்தடுத்த பதிவுகளில் இது குறித்து பார்ப்போம்.
धन्यवाद:
மிக உபயோகமான பதிவு. கல்விப் பணி தொடரட்டும்.
தாதுரூபங்களை புஸ்தகத்தைப் பார்க்காமல் கணினியிலேயே refer செய்வது சுலபமாக இருக்கும்.. இல்லையா?
2 வருடம் முன்பு Ganaka-Ashtadhyayi என்ற இந்த மென்பொருளை சில காலம் உபயோகப் படுத்தினேன்.. நன்றாக இருந்தது..
http://www.taralabalu.org/panini/
தாதுரூபம் மட்டுமல்ல, பாணினி இலக்கணத்தின் பல அம்சங்களையும் மென்பொருளாக சேர்க்க முயன்றிருக்கிறார்கள். நீங்களும் உபயோகித்துப் பாருங்கள்..
மேலே அட்டவணையில் சில தவறுகள் உள்ளன. 4 வது வினைச்சொல் திவ்யதி, திவாதி அல்ல. 7 வது வினைச்சொல் ருந்தே, ரூந்தே அல்ல.
@v subramanian,
சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. தவறுகளை திருத்தி விட்டேன்.
I Want to learn Sanskrit through tamil
where can I wil lget books /audio CDS
is there any one at Coimbatore to guide me
kindky inform
R Ramachandran
ஜூ3ஹோதி – ஜுஹோதி
ஜூ4ஹோத்யாதி3 கணம் – ஜுஹோத்யாதி3 க3ணம்
ஜூ3, ஜூ4 – தவறு ; ’ஜு’ போதுமானது.
झ – ஜ²
ஹு4 – 4 எதற்கு ?
தேவ்
Dear Mr. Dev, the errata are corrected. Thanks for pointing out.
अहं लकारस्य प्रयोगं ज्ञातुं इच्छामि | कुत्र आप्नवानि? अग्रे आगच्छति वा?
Great articles -Perhaps your web site is not known to many. Link it up with google search engine wherever possible. For tamil knowing people it is blessing to go thru the pages
மிகவும் உபயோகமாயிருக்கிறது. ப்ரணாமத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்யோஸ்மி.!