எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

டிவி. சேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம் அறிந்த இந்த பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர். இன்று உலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார்.

எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி? மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும்.

தமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம். “பார்வை” சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை. இந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்கு இந்த இரண்டும் வேண்டும்.

எம்.ஏ. (தமிழ்) படிக்கும் போது, “வட எழுத்து நீக்கி வருவது சொல்” என்ற பொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன். அதாவது தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறது. எனவே தான் “அதை நீக்கி” என்று கூறியிருக்கிறார். ஆக, தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்தது. பிற்காலத்தில் தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தைத் தவிர்க்க “சமக்கிரதம்”, “சமற்கிரதம்” என்றெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டி இருந்தது. காரணம் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தாம்.அது சரி “வடமொழி” என்றால்? சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்று விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம் என்று பொருள். ஆலின் கீழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள் அருளப் பட்டன. அவற்றைக் கொண்ட மொழி; எனவே வடமொழி என்பேன். இது “பிரிட்டானிக்கா” கலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம். இது நமக்குத் தெரியாமல் போயிற்றே! அவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்!!

ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.

தமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழி. ஆக, சம்ஸ்க்ருதம் படிப்பது தமிழுக்குத் தொண்டு. இப்படிப் பலரும் அறிந்த மொழி, அனைவரும் பாராட்டும் மொழி, பதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்க முடியாமல் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும். குறைந்த பட்சம் – ஆம் – குறைந்த பட்சம் பகவத் கீதையாவது படிக்கணும். சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும் புண்ணியவான். அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன்.

(2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து).

நன்றி: விஜயபாரதம் 7.9. 2012

21 Comments எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

 1. T.Mayoorakiri sharma

  வேறு யாராவது சொல்வதைக் காட்டிலும் சாலமன் பாப்பையாவே “சம்ஸ்கிருதம் படி” என்று சொல்கிறார் என்றால் அதற்கு இருக்கிற பெறுமானம் மிக அதிகம்.. அந்த வகையில், இந்தக் கட்டுரையை இங்கே இடுகை செய்தது மிகவும் பொருத்தமானது.

  என்றாலும், சம்ஸ்கிருத பாரதி நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் நடந்த முக்கியமான ஆய்வு பூர்வமான விஷயங்களும் இங்கே பதிப்பிக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன்..

 2. KALIDASAN

  சமஸ்கிருதம் என்பது தேவர்களுடைய பாஷை.நாம் அவசியம்
  கொஞ்சமேனும் கற்றுக்கொள்ள வேண்டும் .
  மற்ற எல்லா மொழிகளும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பேசப்படும்.
  ஆனால் சமஸ்கிருதம் எங்கேயும் எப்போதும் ஒரேமாதிரி பேசப்படுவது அதன் சிறப்பாகும்.

 3. Parvathy

  In the world of controversies as to which is older – Tamil or Sanskirt; in a country where every attempt is made to suppress Sanskrit, the one only best ‘eye opening website’ for Sanskrit is Sangatham.com. Similar to what Vyapuripillai has written about Tamil and Sanskrit -the two original Indian Languages, several ideas have been coming to light these days : after I took a plunge into the world of Sanskrit.

  Solomon Paapiah too has written an elucidating article.

  I wish more and more people are benefited by the site.

 4. कृष्णकुमार्

  \\\ உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது.\\\\

  வாசித்ததும் கண்கள் பனித்தது. ஸ்ரீமான் சாலமன் பாப்பையா அவர்கள் சம்ஸ்க்ருத பாஷையின் மேன்மை மட்டுமின்றி தேசத்தின் கலாசார ஒற்றுமையையும் தன் பாஷணத்தின் வாயிலாக பதிவு செய்துள்ளார்.

  ராமசாமி என்ற பெயர் கொண்டு ராமர் படத்திற்கு செருப்பு மாலைகள் அணிவிப்பதில் களிப்படையும் ஆயிரம் பேர்கள் இப்புவனத்தில் வாழ்வதைக் காட்டிலும் ஒரு சாலமன் பாப்பையா இப்புவனத்தில் வாழும் காலம் வரை சம்ஸ்க்ருத பாஷையும் தேசத்து கலாசாரமும் தழைத்து ஓங்கும்.

 5. U.VENKATESA DEEKSHITHAR

  சமஸ்க்ருதத்தை அனைவரும் கற்க வேண்டும் என்று சொன்ன திரு.சாலமன் பாப்பையா வாழ்க. சமஸ்க்ருதம் என்பது தனி மொழி அல்ல. அது நம் மூதாதையர்கள் அனுபவித்த ஒரு தேன்.தேனை பருக யாராவது வேண்டாம் என்பார்களா? நாம் பேசும் தமிழில் சமஸ்க்ருதம் கலந்து தான் உள்ளது .அதை பத்திரிக்கையாளர் சோ அவர்கள் நிறைய இடங்களில் சுட்டிக் காட்டி பேசுவார்கள். தொல்காப்பியம் நமக்கு அறுதியிட்டு கூறியிருக்கிறது.

 6. tsdineshbabu

  தமிழைப்போன்ற ஒரு தெய்வ மொழியை நான் கண்டதில்லை. தமிழ்தான் அருளூறு, அமுத, தெய்வீகச் செந்தமிழ் மொழியாகும்.

 7. Siva

  Sanskrit is not the language for particular sect and people , it’s language for every one , it’s language for entire humanity.
  Speaking and pronouncing sanskrit word would bring better health.Thatz first and foremost secret of the language.

 8. KUMAR KS

  Sanskrit is the best language one should learn. Even the Germans have done research in sanskrit. Pronouncing and learning sanskrit will bring good health. In the modern era of internet world, students should make use of the electroninc media and learn sanskrit to some extent

 9. Brahmanyan

  முனைவர் சாலமன் பாப்பையா அவர்கள் கூறியுள்ளது கவிஞர் கண்ணதாசன் கூறியதை பிரதிபலிக்கிறது.

 10. ராமச்சந்திரசேகரன்

  இன்றுசமஸ்கிருதம்பேசப்படவில்லைஎன்பதுதான்உண்மைநிலை.ஆனாலும்வேதமந்திரங்
  களை சொல்லும்போதோ/கேட்கும்போதோஅந்தஸ்வரங்கள்நம்மையும்அறியாமல் நம்மை
  தாக்கி ஈர்க்கின்றன.சமஸ்கிருதம்packed with Vibrations.இந்தியமொழிகளில்சமஸ்கிருத
  கலப்புவெளியில் தெரியும்.தமிழில் உயிருடன்/உடல் கலந்தார்ப்போல(திரு.மாணிக்க
  வாசகர் “கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தார்ப்போல்”என்றுதிருவாசகத்தில்அருளி
  உள்ளதுபோல்)சமஸ்கிருதகலப்புஇருக்கிறது.சமஸ்கிருதம்/தமிழ்இவைஇரண்டுமேஅகண்டபாரதத்தின்இரண்டுகண்கள்.இவ்விரண்டுமொழிகளைஅடிப்படையாகக்கொண்டுதான்மற்றமாநிலமொழிகள்உருவாகின.இரண்டுமேபக்தியைமையைமாகவைத்துவளர்ந்தவை.
  சமஸ்கிருதத்தில்மெய்யெழுத்துக்கள்ஒலியின்பேதம்காரணமாகஅதிகஅளவில்உள்ளது.
  காலப்போக்கில்,நாம் இப்போது தமிழில் காண்கிறோம்அல்லவா,அதேபோல்ஒலியின்
  பேதம்சரியாகமக்களால்கையாளப்படாமல்போனதினாலும்,சமஸ்கிருத்தைவிடகுறைவான மெய்யெழுத்துக்களானபுதியமொழிஒன்றைஉருவாக்கலாம்என்றுசிந்தித்துசமஸ்கிருத்தைப்போலஎந்த அளவிலும்குறைவிலாதுஅதேசெவிஇன்பம்தரவல்லதாகஇருக்கவேண்டும்என்ற
  பரந்தநோக்கத்தின்காரணமாகஅப்போதையஅறிஞர்கள்மொழிசீர்திருத்தசெயலின்வடிவமாகஅந்தஅறிஞர்கள்தமிழைவளர்க்கஒருசங்கம்அமைத்திருக்கவேண்டும்.மற்றும்நிறைய
  சமஸ்கிருதச்சொற்கள்தமிழில்காணப்படுகிறது.அவ்வறிஞர்கள்கண்டெடுத்தபுதிய
  மொழியானதமிழில்சமஸ்கிருதத்துக்குச்சற்றும்குறைவிலாமல்அதேசெவிஇன்பத்துக்கு
  குறைவில்லைஎன்பது நமதுதமிழ்பக்திஇலக்கியங்களும்,கம்பன்கழகம்போன்றவெகு
  சிலநல்லபட்டிமன்றங்களே சான்று.தமிழ் 300/400ஆண்டுகளில்,சமஸ்கிருதம்போல்,
  மறைந்து விடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
  தமிழ்அழிவின் தொடக்கம் திராவிடஇயக்கம்.

 11. P.S. Raman

  Prof Salamon Pappiahs views are excellent. I was also under he notion that Sanskrit meant (vada) “north language”. But the information that Encyclopedia Brittanica says it is the language that normally taught/spoken under the Banyan Tree (Vata Vruksha) gy great Rishis is a new infm.
  Thanks for publishing his eye openingcomments. It is also stated he learnt Sanskrit for 10 yrs. A great Man & excellent exponent of any subject
  Every language opens a great door of information and knowledge is it not?
  ..

 12. ILAKKUVANAR THIRUVALLUVAN

  பத்து ஆண்டுகள் சமற்கிருதம் படித்த சாலமன் பாப்பையா ஒப்பிலக்கிய நோக்கில் இரு மொழிகளுக்கும் தொண்டாற்றியிருக்கலாம். நூல்களின் நிறை குறைகளை எடுத்துக் கூறியிருக்கலாம். பரிதிமாற்கலைஞர் முதலான அறிஞர்கள் பலர் கூறுவதுபோல் தமிழ் இலக்கியங்களைக் கவர்ந்து கொண்டு சமற்கிருத மூலமாகத் தவறாகக் காட்டப்பட்டவற்றை ஆராய்ந்து கூறியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு விளம்பரத்திற்காகத் தன்னை அழைத்தவர்கள் குளிப்பாட்டியதில் மகிழ்ந்து நடுநிலை தவறி உளறியிருக்கக்கூடாது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே கண்ணாகும். எனவே, தமிழர்க்குத் தமிழே கண்ணாகும். ஒரு கண் தமிழ் மற்றொரு கண் மற்ற மொழி என்பதெல்லாம் ஏமாற்று வேலை. இங்கே ஒருவர் சமற்கிருதத்தைத் தேவர்களின் மொழி என்கிறார். அப்படியானால் மனிதர்களாகிய நாம் அதைப் படிக்கத் தேவையில்லையே! அறிவுக்குப் பொருந்தாத பழங்கதைகளைப் பேசிப் பயனில்லை. சமற்கிருதம் என்பது தமிழ், பாலி, பிராகிருதம் முதலானவை தோன்றியபின்னர் அவற்றின் கலப்பால் உருவான மொழி. அம் மொழியில் கவிச்சுவை மிக்க நூல்கள் பல உள்ளன. அறிவுக்குப் பொருந்தாத புராணக் கதைகளும் அவற்றில் உள்ளன. எந்த அயல் மொழியாக இருந்தாலும் அம்மொழியிலுள்ள நூற்சிறப்புகளை அறிய வாய்ப்பிருப்பவர்கள் அறிவதும் அறியாதவர்க்கு அறிவுறுத்துவதுமே சிறந்த பணி. தினேசுபாபுவிற்குப் பாராட்டுகள். தமிழ் சார்பான உண்மையைக்கூறும் அவர் ஒருவர் கருத்தை மட்டும் பெயருக்குப் பதிந்திருக்கிறீர்கள் போலும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/ எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

 13. Pingback: domain name generator

 14. where is domain hosted

  In this world one s mother is the greatest wealth FOR HIM. For another
  his mother should be great est likewise. This doesn’t mean other mothers
  are inferior and prof says they are equally good. For a person in a village,
  His village pond is the SEA, -and biggest reservoir! But this is not true. For a drunkard, his liquor is the greatest pleasure, NOTHING ELSE,
  Prof. . Solomon though considers tamil As one of his treasured vision, considers Sanskrit as the other eye. Scholars don’t reject or refuse to look into Alternates. People who had proficiency in both are entitled to rate both. Frogs like tamil chauvinists cannot see beyondjust what they know. Theirs is a cataract or myopic vision. These illiterates just berate all that they DON’t know or not capable of understanding. This trend developed in tamilnadu only from 1960 s, because of their inferiority complex and lack of exposure to the realms outside this state.

 15. domain names

  English language has become widely spoken all over the world. With 26 letters the language is conquering the world. The Chinese and the Japanese are eager to learn this language. For Tamil to grow rich the Samskrit letters and words can be widely used in Tamil. It will enrich the language. “kattumaram” has been modified a little and is called catamaran in English. Why Parithimaal Kalaignar? He can be called Surya Narayana Sastri(gal). Surya TV, Sun TV are channels and not “Aadhavan” TV. The Tamilians are misdirected by a group of Tamil scholars. Panini’s Ashtadhyaayi is the most read in the west by software engineers as Samskrit is a highly structured language. Thanks to (former colleague) Sri. Solomon Pappiah for his comments on Samskrit. Tamil mozhi is ‘Semmozhi”, so also Samskrit also.

 16. RSR

  நான் ஓரளவு தமிழும், ஸம்ஸ்க்ருதமும் படித்திருக்கிறேன். எல்லா இந்திய மொழிகளும் (தமிழ் தவிர) எழுத்து, ஓசை வகையில், சம்ஸ்க்ருத முறையைப் பின்பற்றுகின்றன. ‘தேவநாகரி ;, உதாரணமாக க, க்க, ga , gha
  இது சரியில்லை, குறிப்பாக, நான்காவது எழுத்தும் ஓசையும் ( ஹா சேர்ந்தது) மிகவும் மோசம். ..தமிழ் இந்த அவஸ்தையை குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக எளிதில் தவிர்த்து வந்துள்ளது. (உ-ம்)
  கப்பல், காக்கை, தங்கம், (க, க்க ,ங்க
  -எங்கள், பொங்கல், சங்கம்,
  தஞ்சம், வஞ்சம், பஞ்சம்
  கம்பன், வம்பு, கம்பு
  பண்டம் மண்டபம், சண்டை
  வந்தான், பந்து, முந்திய
  ———
  இவ்வாறு எழுத்து எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளது தமிழ். .ஓசையும் இனிதாகவும், இயல்பாகவும் அமைகிறது அடி வயிற்றிலிருந்து ‘ஹா’ கலந்து எந்த எழுத்தும், ஓசையும் தமிழில் கிடையாது. எனவே தமிழ் இனிமையாக இருக்கிறது.
  ஆயினும், தமிழில் ஒரு குறைபாடும் உள்ளது. ஒரு சொல்லின் தொடக்கத்தில், க, (கணபதி), கங்காதரன், ஜானகிராமன்,ஜெயராமன்,
  சுலோச்சனா, ஷ்யாமளா ,பாலன், தாமோதரன், என்ற பெயர்கள், தமிழில் எழுத முடியாது. இது ஒரு மாபெரும் குறைபாடு. சம்ஸ்க்ருத கவிதைகள், கட்டுரைகள், கீர்த்தனைகளில் இந்த நான்காவது ஓசை எழுத்து இவற்றைத் தவிர்த்து உள்ள அனைத்தும், மிக மிக இனிமையாக உள்ளன. கர்நாடக சங்கீதத்தில், முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதிகளில், நான்காவது ஓசை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. இதனாலேயே அவரது கீர்த்தனைகள் அருமையாக உள்ளன. வடமொழியில் ஸம்ஸ்க்ருதஹ என்றுதான் எழுதவேண்டும். ஆனால், தமிழ்நாட்டின், ( கேரளத்திலும் கூட) சம்ஸ்க்ருதம் என்றுதான் எழுதுவோம். ‘ம்’ இல் முடிந்தால், அது ஒரு நஉன் அல்ல என்ற கருத்து தவாறானது. புஷ்பம், விக்கிரஹம், பிரயாணம், விவாஹம், முஹூர்த்தம், பந்தம், வசந்தம், கர்மம், தர்மம், இவையெல்லாம் இனிமையான வடமொழிச் சொற்கள், ( தமிழ்நாட்டின் சம்ஸ்க்ருத அறிஞர்கள் இவ்வாறுதான் பயன்படுத்துகின்றனர். ) அவர்களை ஒட்டி, இரண்டு மொழிகளையும் சீரமைத்து, தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் எழுதினால், அதுவே மிகவும் சிறப்பாக இருக்கும். தவிரவும், மற்ற இந்திய மொழிகள் போல, தமிழும், கூட்டு அக்ஷரங்களை அனுமதிக்க வேண்டும். (உ-ம்) பிரார்த்தனை, வக்ரம்,தர்மம், ப்ரக்ருதி, ஸ்வபாவம், ஸ்ருதிபேதம்,
  ப்ரயோகம், ப்ரமேயம் .. இன்ன பிற.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)