மனித சுபாவம்

தோட்டத்து பச்சிலைக்கு வீரியம் குறைவு என்று ஒரு பழமொழி உண்டு. மனித சுபாவத்தில் எதுவும் சுலபமாக கிடைத்தால் அதை மதிப்பதில்லை. இதை விளக்கும் சிறிய கதை இது. மலையில் வசிக்கும் ஒருவனிடம், அவன் வீட்டு வாசலில் கவனிப்பாரற்று விளங்கும் சிலை ஒன்று இருக்கிறது. அதனை ஒரு நாள் அங்கு வந்த நகரவாசி ஒருவன் கண்டு, சிலாகித்து என்ன விலை என்று கேட்கிறான். மலைவாசி அது உபயோகமற்ற கருங்கல் என்று கூறி ஒரு ரூபாய்க்கு விற்று விடுகிறான்…

மேலும் படிக்க

பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2

பர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம் எனப்படும் சுபாஷிதங்கள். இந்த சுபாஷிதங்களுக்கும் பிற்காலத்தில் ராமசந்திர புதேந்திரர் என்பார் விரிவான உரை எழுதியுள்ளார். இந்த தொடரில் பர்த்ருஹரியின் சுபாஷிதங்களுடன், ராமசந்திரரின் உரையில் முக்கிய அம்சங்களுடன் இணைத்து தரப்பட்டுள்ளது. இத்தொடர் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோருக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்

மேலும் படிக்க

நாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்

இந்தியாவில் திரைப்படங்களின் மீது மக்களுக்கு அபரிமிதமான காதல். வருடத்துக்கு தமிழில் மட்டும் நானூறு ஐநூறு திரைப்படங்கள் எடுத்து வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலும் கதை அமைப்பு, பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஒரு ஹீரோ, ஹீரோயின், கண்டதும் காதல், வில்லன், கதாநாயக – நாயகிக்கு உதவும் காமடியன், டூயட் பாடல்கள் என்கிற “ஃபார்முலா”வே தொடர்ந்து சினிமாக்களாக வந்து அவற்றுக்கு மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள். இந்த ஃபார்முலா எப்படி ஏற்பட்டது? மேலை நாட்டுத் திரைப்படங்கள் போல, நமது நாட்டிலும் திரைமொழியில் மாற்றங்கள், திரைப்படத்துக்கேன்றே புதிய இலக்கணங்கள் உருவாகவில்லை?

மேலும் படிக்க

சம்ஸ்க்ருதத்தில் காலங்கள் (Tenses)

ஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை – முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை, இருமை, பன்மை என தொண்ணூறு விதங்களில் மாறுகிறது. இவ்வளவு கடினம் எதற்கு என்றால், அதுதான் மொழியின் உச்சம். அதன் அழகு. ஒரு செய்தியை வெளிப்படுத்த இத்தனை வாய்ப்புகளை கொட்டி கொடுக்கிறது இந்த மொழி. புதிய புதிய சொற்கோவைகள் உருவாவதற்கு ஏற்ற மொழியாக, எல்லா மொழிகளுக்கும், எல்லாக் காலத்திலும், எல்லா வகை சிந்தனைகளுக்கும் உதவுவதாக இருப்பதே சம்ஸ்க்ருதத்தின் சிறப்பு.

மேலும் படிக்க

ஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்

ஹிந்தி/உருது என்று நாம் இன்று அழைக்கும் மொழி முதலில் அரபி எழுத்துகளில் எழுதப்பட்ட மொழி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமிய ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியவுடன் மக்களிடையே அரபி எழுத்தை கைவிட்டு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்திய, அரபி எழுத்தில் எழுதப்படும் உருது என்று ஒரு மொழி இரண்டானது. ஹிந்துக்கள் ஹிந்தியுடன் தங்களை அடையாளத்தை பிணைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்கள் உருதுவுடன். இதன் காரணமாக வட இந்தியாவின் மொழி பிரக்ஞையில் குழப்பம் உருவாகி விட்டது. தத்தம் தாய்மொழிகளை கைவிட்டு மக்கள் எல்லாவற்றையும் ஹிந்தி/உருது என்று கருத ஆரம்பித்தனர். இது தான், வடஇந்தியாவில் மொழிவாரி மாநில எல்லை சீர்திருத்தம் நடக்காததற்கு முக்கிய காரணம். மக்களுக்கும் சரி, அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் சரி, தங்கள் மொழிகளுக்கு மாநிலம் அமைக்க வேண்டும், அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பதே உண்மை. இதில் மத்திய அரசை குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. மக்களாட்சி எனும் பொழுது மக்களின் முன்னுரிமைகள் (priorities) தான் அரசில் பிரதிபலிக்கும்.

மேலும் படிக்க

பாணினியின் அஷ்டாத்யாயி – 2

பாணின என்பவரின் மகன் அல்லது “பணின்” என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக “பாணினி” என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. “பாணினி” என்ற பெயரைத் தவிர தாக்ஷி புத்ர “தாக்ஷி என்பவரின் மகன்”, ஸாலாதுரீய “ஸாலாதுர” என்ற மற்ற பெயர்களும் உண்டு. கி.மு 7ஆம் நூற்றாண்டிலிருந்து 4ஆம் நூற்றாண்டு வரை, அறிஞர்கள் இவருடைய காலத்தை ஏதோவொரு நூற்றாண்டைக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இவரது காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாமென்று நம்பப் படுகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸாலாதூர என்ற கிராமம் பாணினியின் பிறந்த இடமென்று நம்பப் படுகிறது. இது தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்ற இடமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பாலான கருத்து.

மேலும் படிக்க

பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1

பர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். இவர் உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு அரசாண்ட சக்கரவர்த்தி விக்கிரமாதித்தியனின் மூத்த சகோதரர். உண்மையில் இவரே அரசனாக முதலில் இருந்தார். அப்போது இவருடைய ராணி பிங்கலை என்பவளிடம் பேரன்பு கொண்டு அவளுடனேயே எப்போதும் பொழுதை செலவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு அபூர்வமான பழம் ஒன்று கிடைக்க அதைத் தன் ஆசை மனைவியிடம் கொடுத்தார். அவளுக்கோ அரண்மனையில் குதிரை லாயத்தில் இருந்த ஒருவனிடம் ஆசை. அவள் அவனிடம் கொடுக்க, அவனுக்கு ஒரு வேசியிடம் இச்சை. அவன் பழத்தை அவளிடம் கொடுத்து விடுகிறான். அந்த வேசி பழத்தை அரசனுக்கே அற்பணிக்கிறாள். இறுதியில் உலகியலில் வெறுப்புற்று பர்த்ருஹரி மகாராஜன் தன் பதவியை துறந்து, தம்பிக்கு முடிசூட்டி விட்டு துறவியாகி விடுகிறார். இந்நிலையில் தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றுகிறார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம் எனப்படும் சுபாஷிதங்கள்.

மேலும் படிக்க