சமஸ்க்ருத மொழிக்கென்று எந்த எழுத்துருவும் கிடையாது. பிராமி, நாகரி, தமிழ் கிரந்தம் என்று பல எழுத்துருக்களாலும் (லிபி) எழுதப்பட்டு வருகிறது
சமஸ்க்ருத மொழியின் வரலாறு இரண்டு கால கட்டத்தைக் கொண்டு வகுக்கப் படுகிறது. வேதகால சம்ஸ்க்ருதம்(Vedic Sanskrit) , செவ்வியல் சமஸ்க்ருதம் (Classical sanskrit) என்பவை அவை.
“இஷ்டம்”, “கஷ்டம்” போன்ற வார்த்தைகள் வேத கால சமஸ்க்ருதத்தில் கிடையாது
சமஸ்க்ருத இலக்கணம் இந்நாளைய ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் வாழ்ந்த பாணினி என்பவரால் தொகுக்கப் பட்டது.
இவருக்கு முந்தைய நாளில் இருந்த இலக்கண நூல்கள் இவர் எழுதிய அஷ்டாத்யாயி என்கிற இலக்கண நூல் வந்த பின் வழக்கொழிந்து போய் விட்டன.
பாணினி தந்த இலக்கணப் படி அமைந்துள்ள சமஸ்க்ருத மொழியே செவ்வியல் சமஸ்க்ருதம் என்று அழைக்கப் படுகிறது.
வேத கால சமஸ்க்ருதத்தில் காணப்படும் ஸ்வரங்களான உதாத்தம், அனுதாத்தம் போன்றவற்றுக்கு சமஸ்க்ருத இலக்கணம் வகுத்த பாணினி எந்த விதிகளையும் குறிப்பிடவில்லை
சமஸ்க்ருதத்தில் எந்த காவியங்களும் சோகமான முடிவுடனோ, அரைகுறையாகவோ முடிவதில்லை
வடமொழி கவி காளிதாசன் எழுதிய மிகச் சிறந்த காவியம் “குமார சம்பவம்”. இந்த பெயர் முருகனின் பிறப்பை உணர்த்துகிறது. ஆனால் இந்த காவியத்தில் எந்த இடத்திலும் ஒரு ஸ்லோகத்தில் கூட முருகனின் மீது இயற்றப் படவில்லை.
Guru, Pundit, Tantra, Shanti, Shakti, Om, Prana, Karma என்று பல சம்ஸ்க்ருத வார்த்தைகள் நடைமுறை ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுகின்றன.
நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கீதையின் பொருளுரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கீதைக்காகவே
இந்த வலைதளத்தை பயன்படுத்தினேன். நன்றி.