அறுபது வருடங்களின் பெயர்கள்…

ஹிந்துக்களின் நாட்காட்டி கணக்கு அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையில் அமைந்தது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பெயர்கள் உண்டு. ஒரு முறை அறுபது வருடங்கள் ஆன பிறகு மீண்டும் முதலில் இருந்து துவங்கும். ஒவ்வொரு வருடப் பஞ்சாங்கத்திலும் அந்த வருடத்திற்கான பெயர் முக்கியமாக இருப்பதைக் காணலாம். இந்த வருடம் துர்முக வருடம். சென்ற ஆண்டு மன்மத ஆண்டு. இந்த ஆண்டுக் கணக்குகள் சூரியனைச் சுற்றி வியாழன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு வியாழ வட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளுக்கு உரிய பெயர்களும் ஸ்லோக வடிவில் அதே சமயம் வரிசைக் கிராமமாக கருட புராணத்தில் கொடுக்கப் பட்டு உள்ளது.

प्रभवो विभव: शुक्ल: प्रमोदोऽथ प्रजापति:।
अङ्गिरा: श्रीमुखो भाव: युवा धाता तथैव च॥
ईश्वरो बहुधान्यश्च प्रमाथी विक्रमो विषु:।
चित्रभानु: स्वभानुश्च तारण: पार्थिवो व्यय:॥
सर्वजित्सर्वधारी च विरोधी विकृति: खर:।
नन्दनो विजयश्चैव जयो मन्मथदुर्मुखौ॥
हेमलम्बो विलम्बश्च विकार: शार्वरी प्लव:।
शुभकृच्छोभन: क्रोधी विश्वावसुपराभवौ॥
प्लवङ्ग: कीलक: सौम्य: साधारणविरोधिकृत्।
परिधावी प्रमाधी च आनन्दो राक्षसो नल:॥
पिङ्गल: कालसिद्धार्थौ रौद्रिर्वै दुर्मतिस्तथा।
दुन्दुभी रुधिरोद्गारी रक्ताक्ष: क्रोधनोऽक्षय॥

ப்ரப⁴வோ விப⁴வ: ஶுக்ல: ப்ரமோதோ³(அ)த² ப்ரஜாபதி:|
அங்கி³ரா: ஶ்ரீமுகோ² பா⁴வ: யுவா தா⁴தா ததை²வ ச||
ஈஶ்வரோ ப³ஹுதா⁴ன்யஶ்ச ப்ரமாதீ² விக்ரமோ விஷு:|
சித்ரபா⁴னு: ஸ்வபா⁴னுஶ்ச தாரண: பார்தி²வோ வ்யய:||
ஸர்வஜித்ஸர்வதா⁴ரீ ச விரோதீ⁴ விக்ருʼதி: க²ர:|
நந்த³னோ விஜயஶ்சைவ ஜயோ மன்மத²து³ர்முகௌ²||
ஹேமலம்போ³ விலம்ப³ஶ்ச விகார: ஶார்வரீ ப்லவ:|
ஶுப⁴க்ருʼச்சோ²ப⁴ன: க்ரோதீ⁴ விஶ்வாவஸுபராப⁴வௌ||
ப்லவங்க³: கீலக: ஸௌம்ய: ஸாதா⁴ரணவிரோதி⁴க்ருʼத்|
பரிதா⁴வீ ப்ரமாதீ⁴ ச ஆனந்தோ³ ராக்ஷஸோ நல:||
பிங்க³ல: காலஸித்³தா⁴ர்தௌ² ரௌத்³ரிர்வை து³ர்மதிஸ்ததா²|
து³ந்து³பீ⁴ ருதி⁴ரோத்³கா³ரீ ரக்தாக்ஷ: க்ரோத⁴னோ(அ)க்ஷய||

இவ்வாறு அமைந்துள்ள வருடங்களின் பெயர்கள் தமிழ் நாட்காட்டிகளிலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

வருடங்களைப் போல தமிழ் மாதங்களின் பெயர்களும் வடமொழி தொடர்பு உள்ளவைதான். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பௌர்ணமி அன்றைக்கு என்ன நட்சத்திரம் அமைகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரே சற்று மாறுதலுடன் தமிழ் மாதப் பெயராக உள்ளது.

சித்திரை மாதத்தில் சித்ரா நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும். வைகாசி என்பது விசாகம் என்பதன் மருவு. விசாக நட்சத்திரம் அமையும் நாளில் பௌர்ணமி வருவதால் அந்த மாதம் வைகாசி என்று ஆனது. ஆனுஷி என்கிற அனுஷ நட்சத்திர நாளில் பௌர்ணமி வரும் மாதம் ஆனி மாதம். பூராடம் உத்திராடம் நட்சத்திரம் ஆடி என்று ஆனது. சிரவணம் என்கிற நட்சத்திரத்தில் பௌர்ணமி அமையும் மாதம் ஆவணி. பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்கள் சம்ஸ்க்ருதத்தில் பூர்வப்ரோஷ்டபதி, உத்திர ப்ரோஷ்டபதி என்று அழைக்கப் படுகின்றன. ப்ரோஷ்டபதி என்பது புரட்டாசி ஆகியது. இவ்வாறு அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம் நட்சத்திரங்களில் பௌர்ணமி வரும் மாதங்கள் முறையே ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்று ஆகியது. பூச நட்சத்திரத்திற்கு தைஷ்யம் என்று இன்னொரு பெயர். இது தைமாதம். மகம் நட்சத்திரத்துக்கு மாக என்றும் பெயர், மாக நட்சத்திரத்தில் பௌர்ணமி அமையும் மாதம் மாசி. பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரங்கள் சம்ஸ்க்ருதத்தில் பூர்வ பல்குனி, உத்திர பல்குனி என்று அழைக்கப் படுகின்றன. பல்குனி நட்சத்திரங்களில் பௌர்ணமி வரும் மாதம் பங்குனி என்று ஆனது.

2 Comments அறுபது வருடங்களின் பெயர்கள்…

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)