வடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்

சென்னைப் பல்கலைக் கழகம், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சில புத்தகங்களை, சமஸ்க்ருதம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளது. இந்த மொழிபெயர்க்கும் குழுவின் தலைவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான திரு. ஜி. திருவாசகம் அவர்கள், பாரதியார் பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதியின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட பனிரெண்டு புத்தகங்களை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்த விழாவில் பங்கு கொண்டு பேசுகையில், மேலும் பனிரெண்டு புத்தகங்களை பல்கலைக் கழகம் மொழி பெயர்க்க உள்ளதாக தெரிவித்தார்.

இதில் கருணாநிதி அவர்களின் நெஞ்சுக்கு நீதி என்கிற சுய சரிதம் உள்ளிட்ட, ரோமாபுரிப்பாண்டியன், குறளோவியம், சங்கத்தமிழ், முத்துக் குவியல் ஆகியவையும் அடங்கும். இவை இந்தி, தெலுகு, மலையாளம், கன்னடம் மற்றும் வடமொழியிலும், இது தவிர, பிரெஞ்சு, ஜப்பானிஸ், சீனமொழி, ஜெர்மானிய மொழி மற்றும் ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப் பட உள்ளன.

வடமொழி மற்றும் இந்தி மொழிகளை கொள்கையாகவே எதிர்த்து வந்த கழக ஆட்சியில் இது ஒரு வரவேற்கத் தக்க மாற்றமே! இந்த மொழி பெயர்ப்பு விழாவில் ஏற்புரை நிகழ்த்திய முதல்வர், தமது கவிதைகள் கடவுளின் அருளால் எழுதப் படவில்லை – தமது அனுபவத்தைக் கொண்டே எழுதப் பட்டதாக தெரிவித்தார். கவிதை என்பது இலக்கியத்திறனை மட்டும் காண்பிப்பதாக இருக்கக் கூடாது – மானுடத்தை உயர்த்தும் கொள்கை கொண்டதாக இருக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
[Source: The Indian Express, 1, June]

7 Comments வடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்

 1. snkm

  கோபித்துக்கொள்ளாதீர்கள்! இவரின் புத்தகங்கள் வட மொழியில் சென்று அதன் பெருமையை குறைத்துக் கொள்ளப் போகிறது!

 2. snkm

  கோபித்துக்கொள்ளாதீர்கள்! இவரின் புத்தகங்கள் வட மொழியில் சென்று,வடமொழி தன் பெருமையை குறைத்துக் கொள்ளப் போகிறது!

 3. RAVISANKAR

  WE SINCERELY HOPE THAT SUBSTANDARD MATERIAL LIKE “POLICE KARAN MAGAL” AND OTHER BAD QUALITY MATERIAL WRITTEN BY SHRI.KALAIGNAR WILL NOT BE TRANSLATED INTO ANY OTHER LANGUAGE LEST THE OTHERS FINDOUT THE REAL STANDARDS.

 4. V.RAVISANKAR

  PLEASE CHECK WHETHER THE ADMIRERS OF MU KA ARE STILL IN POWER TO PRINT THE TRANSLATIONS.ALL THE PRINTED AND UNSOLD/UN DISTRIBUTED BOOKS MIGHT HAVE BEEN DISPOSED OFF ALREADY.

 5. Venkataramani,R

  The word “Vadamozhi” is used to denote Samskrutham. It is not correct. Also misleading. It does not belong to north or south. It is universal language and belongs to all people of the world. Politics should not be brought into naming a language.

 6. KSS Rajan

  ஸம்ஸ்கிருதத்திற்கு இது போன்றோருடைய சங்காத்தமே தேவையில்லை என்பது அபிப்பிராயம்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)