::தினமலர் செய்தி::
(செப். 21, 2012 அன்று வெளிவந்த செய்தி)
காரைக்குடி:காரைக்குடி கோவிலூர் மடாலய நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை துவக்க விழா, ஆண்டவர் கலையரங்கில் நடந்தது. மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்தார்.அழகப்பா பல்கலை துணைவேந்தர் சேது சுடலை முத்து பேசியதாவது: ஆகமங்கள் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி சொல்லித்தருபவை. வேதாந்த உண்மைகளை, வடமொழி பயிற்சி இல்லாத தமிழர்கள், அறிந்து கொள்ள வேண்டும், என்ற சீரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திருமடம், கோவிலூர் மடம்.
புண்ணியம் செய்தவர்களை பற்றி, எண்ணுவதாலும், பேசுவதாலும், கேட்பதாலும், நமக்கும் அவர்கள் செய்த, புண்ணியத்தில் பங்கு கிடைக்கின்றது. அதுவே குருபூஜை செய்வதின் நோக்கம் ஆகும். “கு’ என்பது இருட்டை குறிக்கும். “ரு’ என்பது நீக்குவது என்று பொருள்பட, குரு என்றால், இருட்டை நீக்குபவர் என்று பொருள் உண்டாகிறது.
“குரு’ என்பவர் பழுக்காத வாழைப்பழத்தாரில் உள்ள, ஒரு பழுத்த பழத்தோடு ஒப்பிடப்படுகிறார். இந்த பழுத்த பழத்தின் அண்மையே, ஏனைய காய்களை பழுக்க வைத்துவிடும்.கற்றோருக்கு கண்கள் இரண்டோடு, கல்வியும் சேர்த்து மூன்று விழியாகிறது. ஈகை புரிவோருக்கு நகக்கண்கள் சேர்த்து, ஏழு கண்கள் ஆகின்றது. ஞானிகள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு கண்கள் எண்ணிலடங்காதவை. அவ்வாறு பன்முகப் பார்வை கொண்டவர் நாச்சியப்ப சுவாமிகள்.நாம் இன்னும், அறியாமையில்தான் இருக்கிறோம். விஞ்ஞானம், கலை, கல்வி என்று பல விஷயங்களை அறிந்திருக்கலாம். ஆனால் இவை சில தகவல்களே, தவிர உண்மை அறிவு ஆகாது. நம்மைப் பற்றிய அறிவே உண்மையான அறிவு ஆகும், என்றார்.
Dear Sir
I would like to learn the language through books than by net. Kindly guide as to the right books .& where they are available
With regards
Chandra
சென்னை புனித மேரிச்சாலையில் உள்ள சமஸ்கிருத கல்வி கழகம் (SAMSKRIT EDUCATION SOCIETY ) தமிழ் மூலம் சமஸ்கிருதம் கற்பதற்கு ஏழு புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். ஆங்கிலம் மூலம் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். தமிழ் ஆங்கில பொருளுடன் சமஸ்கிருத அகராதி ஒன்றும் வெளியிட்டுள்ளனர்.அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி விவரங்கள் வருமாறு :-
SANSKRIT EDUCATION SOCIETY
OLD NO 212/13-1, NEW NO 11,
ST MARY’S ROAD
RAJAA ANNAAMALAIPURAM
CHENNAI 600 028.
PHONE 044-24951402
10-00 AM TO 5.00 PM ( மதிய உணவு இடைவேளை நீங்கலாக)
மேலும் சம்ஸ்க்ருத பாரதி ( தமிழ்நாடு ) டிரஸ்ட் , 282, ரயில்வே பீடர் ரோடு, PACR பவனம் முதல் மாடி, ராடார் பள்ளி அருகில் , ராஜபாளையம் -626117 விருதுநகர் மாவட்டம் தொலை பேசி 04563-231027 என்ற அமைப்பு தபால் மூலம் மற்றும் தமிழ் மூலம் எளிதாக சமஸ்கிருதம் கற்க புத்தகங்களை அனுப்புகிறது. ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பினால், நான்கு லெவல் களுக்கான புத்தகங்கள் கிடைக்கும்.
2. சமஸ்கிருத பாரதியின் சென்னை கிளை கீழ்க்கண்ட முகவரியில் செயல்படுகிறது. அங்கு நேரில் சென்றால் , தமிழ் மூலமும், ஆங்கிலம் மூலமும் சமஸ்கிருதத்தை எளிதாக கற்க தேவையான புத்தகங்களை நீங்களே தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளலாம்.
Address: 43/B-6, Rams Square, 2, Valluvarkottam High Road, Nungambakkam, Chennai- 600034, Tamil Nadu
Landmark: Near Indus Ind Bank
(044) 28272632, (044) 28272639