நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தாமாகவே முன்வந்து வடமொழியை தமது இரண்டாம் மொழியாக பதிவு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.
மக்கள் இவ்வாறு பதிவு செய்வதால் இறுதியில் கிடைக்கும் கணக்கெடுப்பில் வடமொழி கல்வியறிவு மிகுதியாக காணப்படும் – இது வடமொழியை பாதுகாக்க அரசாங்கத்தை நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவதாக அமையும் என்று அந்த அமைப்பு கருதுகிறது.
“சென்ற முறை கணக்கெடுப்பில் மொத்தம் 14, 135 பேர்கள் மட்டுமே தமக்கு வடமொழி தெரியும் என்று பதிவு செய்திருந்தார்கள் – இதனால் வடமொழி இந்திய மொழிகளில் 118 வது இடத்தை பிடித்தது. இதன் விளைவாக அபாய நிலையில் உள்ள மொழியாக, அரபி, பார்சி மொழிகளுடன் வடமொழியும் அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டது.” என்று சம்ஸ்க்ருத பாரதி அமைப்பைச் சேர்ந்த தேவ் பூசாரி தெரிவித்துள்ளார்.
மக்கள் வடமொழியை கற்றுக் கொள்வது, பழங்காலத்தில் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட நமது அறிவியல், பொருளாதார கோட்பாடுகளை தெரிந்துகொள்ள உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“இன்று நாம் கற்கும் அறிவியல் அனைத்தும் மேற்கத்திய தேசங்களில் உருவானவை. நமது பாரதம் வடமொழியில் எழுதப்பட்ட அறிவியல் – பொருளாதார கருத்துக்களை கொண்டுள்ளது. நம்மிடமுள்ள செழுமையான அறிவை நாம் உணராமல் இருக்கிறோம். வளர்ச்சி அடைந்த நாடாக நாம் ஆக விரும்பினால், நமக்கே உரிய மாதிரிகளை பின்பற்ற வேண்டும் – அதற்கு சமஸ்க்ருத அறிவு அவசியம். ” என்று அவர் மேலும் கூறினார்.
[செய்தி: RSS wants Sanskrit registered in census]
நன்று! ஆனால் என் போல ஒன்றும் தெரியாமல் இருப்பவர்களும் அப்படி பதிவு செய்தால் தவறாகி விடாதா! ஆனால் வடமொழி மேல் எப்போதும் பிரியம் உண்டு! அதனால் அப்படி பதிவு செய்யலாம் என்றால் பதிவு செய்ய தயார்!
அன்புடையீர்,
வணக்கம். என்போன்றோர் ௨௦௧௧ ல் சம்ஸ்க்ருதம்
எழுத படிக்க தெரியும் என்ற உண்மையினை பதிவு
செய்துள்ளோம். தற்போது மக்கள் கணக்கெடுப்பு பணி
முடிந்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே
சம்ஸ்க்ருதம் அறிந்தோர் எண்ணிக்கை எவ்வளவு என
தெரிவிக்க வேண்டுகிறேன்.
அன்பன்,
சேது.இராமச்சந்திரன்.