நூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி

சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி 1906ம் ஆண்டு அமைக்கப் பட்டது. சென்னை வக்கீல் ஸ்ரீ V.கிருஷ்ணசாமி ஐயர் என்பாரின் ஆதரவில் தான் இக்கல்லூரி துவங்கியது. மகாத்மா காந்தியே அவரை ஐயர் என்று தான் அழைப்பாராம். ஐயர் சென்னை பார் கவுன்சிலில் தலைவராகவும், பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் பிறகு இறுதியில் கவர்னரின் செயற்குழு உறுப்பினராகவும் தனது மறைவு (20, திசம்பர் 1911) வரை இருந்தவர்.

mds-sans-college

ஸ்ரீ V.கிருஷ்ணசாமி ஐயரின் காலத்தில் சம்ஸ்க்ருதக் கல்வி பெரிதும் மங்கிய நிலையில் இருந்தது. கல்வித்தரம் குறைந்து கொண்டே போய்க்கொண்டு இருந்தது. ஆகவே இந்நிலையை மாற்றி சம்ஸ்க்ருத இலக்கியங்கள் பாரம்பரிய முறையிலான சாத்திரங்கள் ஆகியவற்றை உயர்ந்த தரத்தில் தீவிரமாகக் கற்க வழிவகை செய்யும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்க எண்ணினார். அவர் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி அமைக்கும் பணிகள் டிசம்பர் 1905 துவங்கி பிப்ரவரி 1, 1906 முதல் இயங்கத் துவங்கியது.

இக்கல்லூரி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து, அனைவரையும் கவரும் வகையில் நிலையான அமைப்பாக உருவாக்க ஒரு குழு அமைக்கப் பட்டது. இக்குழுவில் ஸ்ரீ. V. கிருஷ்ணசாமி ஐயர், ஸ்ரீ ராவ் பகதூர் A. கிருஷ்ண சுவாமி ஐயர், மற்றும் A.S. பாலசுப்ரமணிய ஐயர் போன்றோரும் இடம்பெற்றனர். சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியில், பல துறைகளில் ஆராய்ச்சிகள், ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் இக்குழு செயற்பட ஆரம்பித்தது.

mdscollege-krishnaiyer

சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியின் ஒவ்வொரு மாணவரும் வியாகரணம் (இலக்கணம்), தர்க்கம், மீமாம்சை ஆகியவற்றில் அடிப்படையான நூல்களை கற்றுக் கொண்டே ஆகவேண்டும். இது தவிர மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த சம்ஸ்க்ருதத் துறை சார்ந்த எல்லா சிறப்புப் பாடங்களையும் கற்க வேண்டும். இந்த துறை சார்ந்த சிறப்புப் பாடங்கள் கிழக்கத்திய தேசங்களைச் சார்ந்தவையா, மேற்கத்திய சிந்தனையோ எதுவானாலும் மனித மனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மதிப்பற்றவை. மைசூர் மற்றும் திருவாங்கூர் ஆகிய இடங்களில் அமைந்த சம்ஸ்க்ருதக் கல்லூரிகளின் வளர்ச்சியில் சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியும் பங்கு வகித்தது. இக்கல்லூரி ஆங்கிலம் மட்டும் அல்லாது ஒப்பாய்வு மற்றும் திறனாய்வு படிப்புகளிலும் வகுப்புகள் நடத்தி வந்தது. சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி ஐந்தாண்டு படிப்புகளாகவும் ஐந்தாண்டின் முடிவில் வேதம், வேதாந்தம், ஸ்ம்ருதி, மீமாம்சை ஆகிய கல்வித் துறைகளில் “விசாரதா” பட்டம் வழங்கி வந்தது.

சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி 1907ம் ஆண்டு கல்வித் துறையால் அங்கீகரிக்கப் பட்டு, அரசு உதவி பெரும் கல்வி நிறுவனமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஸ்ரீ. V. கிருஷ்ணசாமி ஐயர் 1910ம் ஆண்டு பதவி விலகியதும், மதிப்பிற்குரிய நீதிபதி P.R. சுந்தரம் ஐயர் என்பார் கல்லூரியின் புதிய தலைவராக நியமிக்கப் பட்டார். ஸ்ரீ பாலசுப்ரமணிய ஐயர் கல்லூரிக் குழுவின் உறுப்பினராக இருந்தார். சென்னை மாகாண கவர்னர் மேன்மை தாங்கிய Sir Arthur Lawley, 27 அக்டோபர் 1911 ஆண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழாவில் சம்ஸ்க்ருதக் கல்லூரியின் செயல்பாட்டையும் இதனை துவங்கிய பெரியோரின் பெருமையையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் S. குப்புசாமி சாஸ்திரியார் தான் சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். அவர் மிகச்சிறந்த கல்விமானாகவும், தனது மாணவர்களுக்கு ஏற்ற சரியான கல்வி எது என்று புரிந்தவராகவும் இருந்தார். பட்டப் படிப்பில் முக்கியமான சம்ஸ்க்ருத படைப்புகளையும், மொழியியல் ஒப்பாய்வு மற்றும் இலக்கியத்தின் ஒப்பாய்வு, கட்டுரைகள் ஆகியவற்றை சிரோமணி படிப்பில் சேர்த்து அமைத்தார் அவர். அவரது காலத்தில் சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி நல்ல முன்னேற்றம் அடைந்து, சம்ஸ்க்ருத கல்வியில் புகழ் அடைந்தது. அவர் இக்கல்லூரியில் முதல்வராக 1906 முதல் 1911வரை பதவி வகித்து வந்தார்.

Sanskrit-College-draws-students-from-across-India-Chennai-(Madras)

அவருக்கு பிறகு மகாமகோபாத்யாய ஸ்ரீ சந்திரசேகர சாஸ்திரிகள் என்பார் கல்லூரி முதல்வராக 1911ல் பதவி ஏற்றார். இந்த இரண்டாவது காலகட்டத்தில் அதாவது 1912 முதல் 1956வரை கல்லூரி அத்வைத வேதாந்தம், மீமாம்சை, வேத பாஷ்யம் மற்றும் அர்த்த சாத்திரம் ஆகிய படிப்புகளை நிகழ்த்தி வந்தது. ஆனால் சென்னை பல்கலைக் கழகம் வேதாந்தம் மற்றும் மீமாம்சை ஆகிய இருதுறைகளை மட்டுமே அங்கீகரித்து வந்தது.

சென்னை பல்கலைக் கழக வழிகாட்டுதலில் 13, மார்ச் 1910 அன்று கிழக்கத்திய முறையில் அமைந்த பரிட்சைகள், கல்வி அமைப்பு மற்றும் கல்வித் துறைகள் அறிமுகப் படுத்தப் பட்டன. மஹாத்மா காந்தி சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியை 28 ஏப்ரல் 1918 அன்று பார்வை இட வந்தார். ரவீந்திரநாத் தாகூர் 9th அக்டோபர் 1922 அன்று விஜயம் செய்தார். அத்வைத தத்துவக் கல்வி குறித்து கல்லூரி அளிக்கும் ஊக்கம் குறித்து பெரிதும் மகிழ்ந்தார்.

1912 முதல் 1924 வரை சராசரியாக வருடத்துக்கு 25 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தனர். பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் ஏற்பட்ட பிறகு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருடத்துக்கு 30 அல்லது 40 மாணவர்கள் சேரத் துவங்கினர். இதற்கு காரணம் சிரோமணி பட்டம் பெற்ற எல்லா மாணவர்களும் பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் சம்ஸ்க்ருத ஆசிரியர்களாக உடனே வேலை வாய்ப்பு பெற்றனர் என்பதே.

mdscollege

கல்வியில் தாய்மொழிக்கு அடுத்ததாக இருந்த சம்ஸ்க்ருத மொழி, 1948க்கு பிறகு மூன்றாம் மொழியாக (தாய்மொழி, ஆங்கிலம், அடுத்ததாக) நிலை தாழ்ந்தது. சம்ஸ்க்ருதம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை பல பள்ளிகளில் குறைந்து போனதும் இதற்கு ஒரு காரணம். ஆகையால் சம்ஸ்க்ருதக் கல்லூரியில் படிக்க சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. திரும்பவும் 1970க்கு பிறகு சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயரத் துவங்கியது. 1980வாக்கில் மாணவர்களின் எண்ணிக்கை 60 அல்லது 70 என உயர்ந்து, கல்லூரியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 130 என்ற அளவுக்கு எட்டியது.

சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியில் மாணவர்கள் உலக அளவில் புகழ் பெற்ற பண்டிதர்களாக ஆனார்கள். மகாமகோபாத்யாயர் போன்ற பெருமைவாய்ந்த பட்டங்களைப் பெற்றனர். கல்வித் துறையில் மேன்மையைக் கூறும் சான்றிதழ்களை பாரத ஜனாதிபதியால் வழங்கப் பெற்றனர். சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி எந்த நிலையிலும் தனது கல்வித்தரத்தைக் குறைத்ததில்லை. 2006 பிப்ரவரியில் சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடியது குறிப்பிடத் தக்கது.

நன்றி: (indianetzone.com)
மற்றும் ramaswamyn.com

4 Comments நூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி

 1. dhriravidhan

  this college has very famous so only govt want to change this college name as settha college that means dead college because of this languge has been died already so few retd upper caste hindu bramins only doing to this part time job to even this to earn money they have objective to that
  they dont waste this kind of chances also they no using this oppertunity to show that act as instructer to died language to who know originality know about this retd upper caste teaching skills

 2. அத்விகா

  இந்த கட்டுரையில் முதல் மறுமொழியை இட்டுள்ள நண்பர் ஆங்கிலத்தில் எழுதியதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்றே புரிய வில்லை. சமஸ்கிருதம் எப்படி செத்த மொழியாக முடியும் ? சமஸ்கிருதத்தின் வேர்ச்சொற்கள் தான் இந்திய மொழிகளில் மட்டும் அல்ல , உலகில் பல மொழிகளிலும் கலந்து உள்ளனவே ? அவற்றின் பயன்பாடு மேலும் மேலும் வளர்ந்து வருவது கண்கூடு. சமஸ்கிருதம் யாருக்கும் தாய் மொழி அல்ல. நம் இந்திய திரு நாட்டின் முழு நிலப்பரப்பிலும் கலந்து பயன்படுத்தப்பட்ட ஒரு துனைமொழி. அந்த துணை மொழி பார்ப்பனர்களின் தாய் மொழி அல்ல. அனைவரின் பொது மொழி. பார்ப்பனர்கள் தமிழ், தெலுங்கு, வங்காளம், மராட்டி, இந்தி என்று எந்த மாநிலங்களில் பிறந்து வளர்கிறார்களோ அவர்களது மாநில மொழிகளையே தாய் மொழியாக கொண்டவர்கள். ஆனால் சமஸ்கிருதம் பார்ப்பனர் அல்லாத பல அறிஞர்களாலும் எழுதப்பட்ட ஏராளமான நூல்களை கொண்ட மொழி. பார்ப்பனர்களை விடவும் சத்திரியர்கள் எழுதிய நூல்கள் சமஸ்கிருதத்தில் ஏராளம். வால்மீகி இராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு காட்டு மலை வேட இனத்தை சேர்ந்தவர். ( hill tribe) வியாச பாரதத்தை எழுதிய வேதவியாசர் ஒரு மீனவ இனத்தை சேர்ந்தவர் ஆவார். சமஸ்கிருதத்தில் இந்த இரண்டும் தான் உலக புகழ் பெற்றவை. அடுத்து மிக முக்கியமாக உலகே போற்றும் பகவத் கீதையை அருளிய கிருட்டின பரமாத்மா அவர்கள் மாடு மேய்க்கும் யாதவ இனத்தை சேர்ந்தவர். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், சமஸ்கிருதத்தில் மிக புகழ் பெற்ற நூல்கள் அதாவது முக்கிய நூல்கள் எல்லாமே பிராமணர் அல்லது பார்ப்பனர் அல்லாதவர்களால் எழுதப்பட்டவை என்பது தான். எனவே சமஸ்கிரதம் பார்ப்பனர் அல்லாதவர்களின் மொழியாக வே என்றும் இருந்துள்ளது. அன்பர் த்ரி ரவிதன் என்ற பெயரில் எழுதியுள்ள கருத்து சரியானது அல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

 3. G. Kumaravelu

  மிகவும் பயனுள்ள கருத்துக்களை தெரியப்படுத்தும் இவ்வலைத்தளம் பெரும் பயன் அளிக்கிறது
  ராமர் க்ஷத்ரியர் தானே. அவரைப்பாராட்டி சத்திரியர்கள் எழுதிய நூல்கள் சமஸ்கிருதத்தில் ஏராளம்.
  வால்மீகி இராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு காட்டு மலை வேட இனத்தை சேர்ந்தவர்.
  க்ஷத்ரியர் புகழ் படும் பாரதத்தை எழுதிய வேதவியாசர் ஒரு மீனவ இனத்தை சேர்ந்தவர் ஆவார். பிறகெப்படி சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சொந்தம் என கூறமுடியும் ஆனால் சமஸ்கிருததை போற்றி பாதுகாத்து வருவோர் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலோர் பிராமணர்கள் இதை யாரும் மறுக்க இயலாது.
  எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் எல்லோரும் சமஸ்க்ருதத்தை போற்றுவோம்.
  ஒரு மொழி வளர்வதால் ஒரு மொழி தேயாது. சமஸ்க்ருதத்தை வளர்ப்போம் பயன் பெறுவோம்.
  நன்றி

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)