சீனாவில் காளிதாசன் சிலை!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நாடக அகாதமியில் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞனும், நாடக இலக்கியத்தின் முன்னோடியுமான காளிதாசனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2006 ம் ஆண்டு ஷாங்காய் மாவட்ட அரசால் திறந்து வைக்கப் பட்டது.

ஷாங்காய் நகரத்தின் அழகினை வெளிப்படுத்துவதாகவும், உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாகவும் பல்வேறு சிலைகள் இங்கே உள்ளன. இந்த காளிதாசன் சிலை மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தைச் சேர்ந்த சிற்பி திரு. ராபின் டேவிட் என்பவரால் வடிவமைக்கப் பட்டுள்ளது.  சிலைகள் வடிப்பதில் இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய காவிய இலக்கியத்தில் காளிதாசனுக்கு முன்னும் பின்னும் பல கவிஞர்கள் வந்து போனாலும் அவன் பெயர் நிலைத்து நிற்கிறது. ராம காதை எழுதிய கம்பனில் துவங்கி இன்றும் எழுதப்படும் பல்வேறு கவிதை – நாடகங்களில் காளிதாசனின் பாதிப்பு நிச்சயம் இருக்கிறது.

[படங்கள்: சீன வலைத்தளம்]

4 Comments சீனாவில் காளிதாசன் சிலை!

  1. snkm

    அருமை! உலகமே உணர்ந்து போற்றும் நம் கலைகளையும் பெருமைகளையும் நம்மவர்கள் தெரிந்து கொள்ளாமலேயே பழிப்பது தான் கொடுமை! எவரும் தெரிந்து கொண்டு விடக் கூடாது என்று பதவியில் உள்ளவர்களும் நினைக்கிறார்கள்!

  2. Pingback: சம்ஸ்கிருதம் – சில கேள்விகள் | Sangatham

  3. NARAYANAN

    தனிப்பட்ட விருப்பத்திற்காக ஒட்டு மொத்தமாக மொழியை , கலாச்சாரத்தை அழிப்பது மானிட துரோகம் .

  4. Pingback: கடல் போன்ற காளிதாசன் புகழ்! | Sangatham

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)