ப்ரஹேலிகா

ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle என்று பொருள். சம்ஸ்க்ருதத்தில் இது போன்ற சிறிய விடுகதை சுலோகங்கள் ஏராளமாக இருக்கின்றன. சமத்காரமான இந்த சுலோகங்களில் பல வகை உண்டு. சாடு (चाटु) சுலோகங்கள், டுப் (टुप्) கவிதை, சமஸ்யா பூர்த்தி (<span class=”GadyamSmall”>समस्यापूर्ति</span>) என்று வேறு வகைகளும் உண்டு. சில சுவாரசியமான பிரபலமான விடுகதைகள் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1. கருப்பான முகம் ஆனால் பூனை அல்ல

कृष्णमुखी न मार्जारी द्विजिह्वा न च सर्पिणि ।
पन्चभर्त्री न पान्चाली यो जानाति स पण्डितः ॥

1. க்ருஷ்ணமுகி..

க்ருʼஷ்ணமுகீ² ந மார்ஜாரீ த்³விஜிஹ்வா ந ச ஸர்பிணி |
பஞ்சப⁴ர்த்ரீ ந பாஞ்சாலீ யோ ஜானாதி ஸ பண்டி³த​: ||

க்ருʼஷ்ணமுகீ² ந மார்ஜாரீ = கருப்பான முகம் ஆனால் பூனை அல்ல
த்³விஜிஹ்வா ந ச ஸர்பிணி = இரு நாக்குகள் உள்ளது, பாம்பல்ல
பஞ்சப⁴ர்த்ரீ ந பாஞ்சாலீ = ஐந்து கணவர்களாம், ஆனால் பாஞ்சாலி அல்ல
யோ ஜானாதி ஸ பண்டி³த​: = எவருக்கு இது பற்றி தெரிகிறதோ, அவர் பண்டிதர்

விடை கடைசியில்.

2. குடமல்ல, மேகமல்ல

மேலே கண்டது ஒரு எளிய விடுகதை. இதே போல இன்னொன்று:

वृक्षाग्रवासी न च पक्षिराजः
त्रिनेत्रधारी न च शूलपाणिः ।
त्वग्वस्त्रधारी न च सिद्धयोगी
जलञ्च भिब्रन्न घटो न मेघः ॥

வ்ருʼக்ஷாக்³ரவாஸீ ந ச பக்ஷிராஜ​:
த்ரினேத்ரதா⁴ரீ ந ச ஸூ²லபாணி​: |
த்வக்³வஸ்த்ரதா⁴ரீ ந ச ஸித்³த⁴யோகீ³
ஜலஞ்ச பி⁴ப்³ரன்ன க⁴டோ ந மேக⁴​: ||

வ்ருʼக்ஷாக்³ரவாஸீ ந ச பக்ஷிராஜ​: = மரத்தில் வசிப்பது, கருடன் (பட்சிகளின் அரசன்) அல்ல
த்ரினேத்ரதா⁴ரீ ந ச ஸூ²லபாணி​: = மூன்று கண்கள் கொண்டவர், சூலமேந்தும் பரமசிவன் அல்ல
த்வக்³வஸ்த்ரதா⁴ரீ ந ச ஸித்³த⁴யோகீ³ = மரவுரி தரித்தவர், சித்தரோ யோகியோ அல்ல
ஜலஞ்ச பி⁴ப்³ரன்ன க⁴டோ ந மேக⁴​: = நீர் கொண்டது, குடமோ, மேகமோ அல்ல.

விடை கடைசியில்.

3. கால் இல்லை, தூரம் போகும்…

अपदो दूरगामी च साक्षरो न तु पण्डितः ।
अमुखो स्फुटवक्ता च यो जानाति स पण्डितः ॥

அபதோ³ தூ³ரகா³மீ ச ஸாக்ஷரோ ந து பண்டி³த​: |
அமுகோ² ஸ்பு²டவக்தா ச யோ ஜானாதி ஸ பண்டி³த​: ||

அபதோ³ தூ³ரகா³மீ = காலில்லை, தூரம் போகும்
ஸாக்ஷரோ ந து பண்டி³த​: = சொற்களை அறியும், பண்டிதர் அல்ல
அமுகோ² ஸ்பு²டவக்தா = வாய் இல்லை, ஆனால் செய்தி சொல்லும்
யோ ஜானாதி ஸ பண்டி³த​: = இது என்ன என்று தெரிந்தவர் பண்டிதர்.

விடை கடைசியில்.

4. ஒரு கண், காகம் அல்ல…

एक चक्षुर्न काकोऽयं बिलमिच्छन्न पन्नगः।
क्षीयते वर्धते चैव न समुद्रो न चन्द्रमा।।

ஏக சக்ஷுர்ந காகோ(அ)யம்ʼ பி³லமிச்ச²ந்ந பந்நக³​:|
க்ஷீயதே வர்த⁴தே சைவ ந ஸமுத்³ரோ ந சந்த்³ரமா||

ஏக சக்ஷுர்ந காகோ(அ)யம்ʼ = ஒரு கண் உள்ளது, காகம் அல்ல
பி³லமிச்ச²ந்ந பந்நக³​: = குகையை விரும்புகிறது, பாம்பு அல்ல
க்ஷீயதே வர்த⁴தே = குறைகிறது வளர்கிறது
ந ஸமுத்³ரோ ந சந்த்³ரமா = கடல் அல்ல, நிலவும் அல்ல

விடை கடைசியில்.

5. இது என்ன பழம்…?

वृक्षस्य अग्रे फलं दृष्टं फल-अग्रे वृक्ष एव च ।
अकार अदि सकार अन्तं यः जानाति सः पण्डितः ॥

வ்ருʼக்ஷஸ்ய அக்³ரே ப²லம்ʼ த்³ருʼஷ்டம்ʼ ப²ல-அக்³ரே வ்ருʼக்ஷ ஏவ ச |
அகார அதி³ ஸகார அந்தம்ʼ ய​: ஜானாதி ஸ​: பண்டி³த​: ||

வ்ருʼக்ஷஸ்ய அக்³ரே ப²லம்ʼ த்³ருʼஷ்டம்ʼ = மரத்தின் முனையில் பழம்
ப²ல-அக்³ரே வ்ருʼக்ஷ ஏவ = பழத்தின் முனையிலும் மரம்
அகார அதி³ ஸகார அந்தம்ʼ = “அ”வில் ஆரம்பம், “ஸ”வில் முடியும்

விடை கடைசியில்.

6. யாரை கிருஷ்ணர் கொன்றார்?

कं संजघान कृष्णः का शीतलवाहिनी गंगा ।
के दारपोषणरताः कं बलवन्तं न वाधते शीतम् ||

கம்ʼ ஸஞ்ஜகா⁴ன க்ருʼஷ்ண​: கா ஸீ²தலவாஹினீ க³ங்கா³ |
கே தா³ரபோஷணரதா​: கம்ʼ ப³லவந்தம்ʼ ந வாத⁴தே ஸீ²தம் ||

கம்ʼ ஸஞ்ஜகா⁴ன க்ருʼஷ்ண​: = யாரை கிருஷ்ணர் கொன்றார்?
கா ஸீ²தலவாஹினீ க³ங்கா³ = குளுமையை சுமந்து வரும் கங்கா யார்?
கே தா³ரபோஷணரதா​: = யார் நம்மை தாங்கிப் பிடித்து, உயிர் காக்கிறார்கள்?
கம்ʼ ப³லவந்தம்ʼ ந வாத⁴தே ஸீ²தம் = எந்த பலமுள்ளவரை குளிர் எதுவும் செய்யாது?

விடை கடைசியில்.

.
.
.
.

விடைகள்

1. பேனா
2. தேங்காய்
3. போஸ்ட் கார்ட்
4. ஊசி (துளையின் வழியே, ஊசி வெளியே வரும் போது, வளர்வதும் தேய்வதுமாக தெரியும்)
5. அன்னாசி (சம்ஸ்க்ருதத்தில் अनानस – அநாநச)
6. இந்த ஸ்லோகத்தில் ஒவ்வொரு இரண்டாவது வார்த்தைக்கும் முன்னாள் உள்ள இடைவெளியை நீக்கினாலே விடை கிடைக்கும்.
இவ்வாறு:
கம்ʼ ஸஞ்ஜகா⁴ன க்ருʼஷ்ண​: என்பது கம்ʼஸஞ்ஜகா⁴ன என்று ஆகி கம்சனை கிருஷ்ணர் கொன்றார் என்று ஆகிறது.
கா ஸீ²தலவாஹினீ க³ங்கா³ என்பது காஸீ²தலவாஹினீ க³ங்கா³ – காசி தளத்தில் ஓடும் கங்கை
கம்ʼ ப³லவந்தம்ʼ ந வாத⁴தே ஸீ²தம் என்பது கம்ʼப³லவந்தம்ʼ ந வாத⁴தே ஸீ²தம் – கம்பளத்தை குளிர் எதுவும் செய்யாது.

3 Comments ப்ரஹேலிகா

  1. P.S. Raman

    Very interesting> The meanings given in Tamil greatly helps to appreciate the Prahelika .
    Compiler has done a good job . Can we have some more soon .
    They can be seen in Sanskrit Wikipedia site , but not with translation of text. That is where this site scores .

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)